search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் மகிழ்ச்சி"

    • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
    • காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் வட்டார பகுதிகளான மாமங்கலம், வானமாதேவி, மா.கொளக்குடி, லால்பேட்டை, மோவூர், ஆயங்குடி, எடையார், கிருஷ்ணாபுரம், சிட்டமல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் அங்கு வசிப்பவர்கள் அவதி பட்டனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் தற்போது நெல் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகிறார்கள். அதோடு நேரடி நெல் விதைப் பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது பெய்துள்ள மழை நேரடி நெல் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கூடலூர், போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வந்த போதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    பெரியகுளம் சோத்துப்பாறை அணை, கல்லாறு, கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில சாரல் மழை பெய்தது. மேலும் தேவதானப்பட்டி மஞ்சளாறு, வடபுதுப்பட்டி, வடுகபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கூடலூர், போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 135.95 அடியாக உள்ளது. நேற்று 643 கனஅடி நீர்வரத்து வந்த நிலையில் இன்று காலையில் 1081 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 933 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6105 மி.கனஅடியாக உள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70.05 அடியாக உள்ளது. வரத்து 832 கனஅடி, திறப்பு 769 கனஅடி, இருப்பு 5838 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 10 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 124.80 அடி, திறப்பு 3 கனஅடி

    பெரியாறு 21.4, தேக்கடி 21.6, கூடலூர், 3.8, உத்தமபாளையம் 1.6, மஞ்சளாறு 10.2, சோத்துப்பாறை 10, போடி 5.8, பெரியகுளம் 3.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 128 கட்டுகளை உள்ளடக்கிய ஒரு வெற்றிலை மூட்டை தற்போது ரூ.5,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

    அரூர்,

    விழாக் கால தேவை அதிகரிப்பு காரணமாக, வெற்றிலை விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளதால் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட வெற்றிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூரைச் சுற்றியுள்ள அஸ்தகிரியூர், முத்தனூர், கோம்பை, வெள்ளியங்கிரி, பெத்தானூர், நத்தமேடு, மோட்டாங்குறிச்சி, காவேரி புரம், கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பகுதிகளில் விளையும் வெற்றிலை, வாரம்தோறும் ஞாயிறன்று நடக்கும் கடத்தூர் சந்தைக்கும், வியாழனன்று நடக்கும் பொம்மிடி சந்தைக்கும் விற்பனைக்கு வரும். சுற்று வட்டாரங்களில் இருந்து இந்த சந்தைகளுக்கு வரும் வெற்றிலையை வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.

    இவை சேலம், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    திருமணம் போன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் மாதங்களிலும், விழாக்காலங்களிலும் வெற்றிலைக்கான தேவை அதிகமாக இருக்கும். எனவே, அப்போது வெற்றிலையின் விலையும் அதிகரிக்கும்.

    தற்போது ஆடி மாதம் என்பதால் பெரும்பாலான கோயில்களில் விழாக்கள் நடந்து வருகின்றன. எனவே, வெற்றிலைக்கான தேவை அதிகரித்து உள்ளது. 128 கட்டுகளை உள்ளடக்கிய ஒரு வெற்றிலை மூட்டை கடந்த கடந்த வாரத்தில் ரூ.3,500 முதல் ரூ.8,000 வரை விற்பனையானது. ஆனால், தற்போது ரூ.5,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

    இதுகுறித்து, வெற்றிலை வியாபாரி பிரகாஷ் கூறியது:-

    தருமபுரி மாவட்டத்தில் கடத்தூர், பொம்மிடி வாரச் சந்தைகளுக்கு மட்டுமே வெற்றிலை வரத்து அதிகமாக உள்ளது. இதனால் வெற்றிலை வாங்க வெளியூர் வியாபாரிகள் சந்தை நாட்களில் அதிகாலை யிலேயே வருவார்கள்.

    பண்டிகை, திருமண மாதங்களில் வெற்றிலையின் விலை உயரும். இதனைக் கருத்தில் கொண்டு வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு அதிக விலை கொடுத்து வெற்றிலையை வாங்கிச் செல்கின்றனர். தற்போது 50 சதவீதம் வரை விலை உயர்ந்து உள்ளது. ஆடி மாதம் முடியும் வரை இதே விலை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

    வெற்றிலை விவசாயி களுக்கு ஓரளவு கூடுதல் லாபம் கிடைக்கும். இதனால், வெற்றிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலையில் வெயில் வாட்டி வதைத்தது.
    • ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது.

    மாலையில் மேக–மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாவட்டத்தில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- காடையாம்பட்டி 17, மேட்டூர் -13.2, பெத்தநாயக்கன்பாளையம் -13, ஆனைமடுவு - 8, சங்ககிரி - 7.4, ஆத்தூர் 6.2, கெங்கவல்லி - 6, எடப்பாடி - 4, தம்மம்பட்டி-2 என மாவட்டம் முழுவதும் 51.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    • வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் அவரை சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • தற்போது அவரை கொடிகளில் பூக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை- மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு, மூலக்கடை, முத்தால ம்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏரா ளமான ஏக்கர் பரப்பளவில் அவரை சாகுபடி நடைபெற்று வருகிறது.

    அடுத்த மாதம் சீசன் தொடங்க உள்ள நிலையில் கடந்த மாதம் கடமலை மயிலை ஒன்றிய கிரா மங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அதன் எதிரொலியாக தற்போது அவரை கொடிகளில் பூக்களின் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இந்த சீசனில் அவரை உற்பத்தி அதிகரி க்கும் வாய்ப்புகள் உள்ளது.

    இதற்கிடையே கடந்த சீசனில் அவரை விலை அதிக அளவில் இருந்தும் மஞ்சள் நோய் தாக்கம் காரணமாக உற்பத்தி மிக குறைவாகவே காண ப்பட்டது. இதனால் விவ சாயிகளுக்கு போதுமான அளவில் லாபம் கிடைக்க வில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது உற்பத்தி அதிகரித்து காணப்படுவ தால் விலையும் அதே அளவில் நீடித்தால் விவ சாயிகளுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும்.

    இது தொடர்பாக விவ சாயிகள் கூறுகையில், பொதுவாக ஆடி மாதங்களில் வெயில் தாக்கம் காரணமாக வறட்சி நிலவும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சாரல் மழை காரணமாக தற்போது அவரை கொடிகளில் பூக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

    இதே போல விலையும் அதிகரித்தால் இந்த ஆண்டு அவரை விவசாயிகளுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என தெரிவித்தனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.
    • வட்டமலைக்கரை ஓடையில் 1.37 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    அவினாசி:

    மேற்கு திசை காற்றின் வேகம் ,மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துவருகிறது. தென்மேற்குப் பருவமழையால், அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கு நீர் வரத்து உள்ளது. அமராவதி அணை மொத்தம் 90 அடியில், 88.46 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,772 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 1,810 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடியில் 28.77 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 31 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது.அணையிலிருந்து 27 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. உப்பாறு அணை 4.64 அடி,நல்லதங்காள் அணை 13.29, வட்டமலைக்கரை ஓடையில் 1.37 அடிக்கு தண்ணீர் உள்ளது.தொடரும் மழையாலும் பாசனத்துக்கு கைகொடுக்கும் அணைகளில் நீர் இருப்பு சிறப்பாக உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.
    • உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    காங்கயம்,

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும். சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற ஸ்தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் புகழ்பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

    வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோவிலுக்கு உள்ளது. அது இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார்.

    அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

    அடுத்தொரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம்.

    முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது, அதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போனது. மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா வெற்றி வாகை சூடியது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டபோது சுனாமி பேரலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.

    இவ்வாறு எந்தப் பொருள் வைக்கப் படுகிறதோ, அது ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 1 ந்தேதி முதல் கடலூர் பகுதியைச் சேர்ந்த கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான ஸ்ரீபோகரின் திருவுருவப்படம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

    1-ந் தேதி வைக்கப்பட்டு 2நாட்கள் மட்டுமே பூஜிக்கப்பட்ட நிலையில் கோவை, பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான 3கிலோ விபூதி மற்றும் 7எலுமிச்சை பழங்கள் வைத்து ஏப்ரல்4-ந் தேதி முதல் பூஜிக்கப்பட்டு வந்தது.

    தற்போது பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவான நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.இது போல் இதற்கு முன்பாக தானியங்கள் வைத்து பூஜை செய்தபோது அதன் விளைச்சல் உயர்வு மற்றும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. தற்போது கம்பு வைத்து பூஜை செய்வது மானாவாரி நிலங்களில் அதிக அளவில் இந்த ஆண்டு சாகுபடி பணிகள் நடைபெறலாம்.

    அதன் மூலம் உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை சராசரியாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கயம் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்வது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய வரட்டுப்பள்ளம் அணை எட்டி உள்ளது.
    • உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவான 33.5 அடியாகும்.

    கடந்த வாரம் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வந்தது.

    இதையடுத்து அணை யின் நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லா ததால் முழு கொள்ளளவான 33.5 அடியாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த நேற்று மற்றும் நேற்று முன்தினம் என தொடர்ந்து 2 நாட்கள் அந்தியூர் மற்றும் பர்கூர் மலை சுற்றுப் பகுதி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் அணையின் முழு கொள்ள ளவான 33.5 அடியை எட்டி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 43 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த மழைப் பொழிவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×