search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கவலை"

    • ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட ஒரே குடோன் மட்டுமே ஒழுங்கு விற்பனை கூடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • தரமான சீட்டுகளை அகற்றி விட்டு மிகவும் தரமற்ற தகர சீட்டுகளை பொருத்தியதால் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

    சின்னசேலத்தில் உள்ள ஒழுங்கு விற்பனை கூடத்தில் 5 குடோன்கள் இருக்கின்றது. இதில் ஆயிரம் மற்றும் 500 மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன்கள் தமிழ்நாடு வாணிப நுகர் பொருள் கிடங்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1200 மற்றும் ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட ஒரே குடோன் மட்டுமே ஒழுங்கு விற்பனை கூடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஒரே குடோனும் புதுப்பித்தல் என்ற பெயரில் தரமான மேற்கூரை சீட்டுகளை அகற்றிவிட்டு தரமற்ற தகர சீட்டுகளை கொண்டு மேற்கூரையாக போடப்பட்டுள்ளது. சமீபத்தில் அடித்த மழை காற்றின் காரணமாக தரமற்ற சீட்டுகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. பிறகு இந்த கமிட்டியில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முன்வந்து பறந்த தகர சீட்டை எடுத்து ஓட்டை விழுந்த இடத்தில் தற்காலிகமாக அதன் மேல் கல் வைத்து மூடி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே ஓட்டைகள் ஏற்பட்டு மழை நீர் உள்ளே வருவதால் விவசாயிகளின் தானிய மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது.

    கடந்த காலங்களில் குடோன்களின் மேற்கூ ரையை தரமாகவும் உறுதியாகவும் விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது அது தலைகீழாக மாறி பணம் நோக்கமாகக் கொண்டு தரமான சீட்டுகளை அகற்றி விட்டு மிகவும் தரமற்ற தகர சீட்டுகளை பொருத்தியதால் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. சிறிய காயம் பெரும் தொந்தரவு என்பது போல விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.இதுபோன்ற தரமற்ற சீட்டுகளை பொருத்துவதால் அரசாங்கத்தின் பணமும் வீணடிக்கப்பட்டு விவசாயிகளின் உழைப்பும் வீணடிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தரமான சீட்டு பொருத்தி விவசாயிகளின் தானிய மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ரூ. 52.82 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
    • பருத்திஏலத்தில் வரத்து அதிகரித்தும் விலை குறைந்தது.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்திஏலத்தில் வரத்து அதிகரித்தும் விலை குறைந்தது.அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் 2,033 மூட்டையில் 66 டன் பருத்தி ஏலத்துக்கு எடுத்து வரப்பட்டது.ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு 7,000 முதல் 8,799 ரூபாய் வரையும், கொட்டு ரகம் 2,000 முதல் 1,000 ரூபாய் வரையும் விற்கப்பட்டது. வரத்து அதிகரித்தும் விலை உயராததால் விவசாயிகள் கவலையடைந்தனர். மொத்தம் 12 வியாபாரிகள் 403 விவசாயிகள் பங்கேற்றனர். ரூ. 52.82 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

    • உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.
    • வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் .

    திருப்பூர்,

    கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம். கோழி தீவனத்துக்கு முக்கிய மூலப்பொருள் மக்காச்சோளம். கடந்த புரட்டாசி பட்டத்தில் குறைந்தளவு விவசாயிகள் மட்டுமே மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை துவங்கிய போது கிலோ 20 ரூபாய்க்கு மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடை முடியும் போதே, 25 ரூபாய் வரை விலை போனது.படைப்புழு தாக்குதல், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகள் சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர்.

    தற்போது உள்ளூர் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.எதிர்பாராத விதமாக தற்பொழுது விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகா, பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பே காரணம்.விவசாயிகள் சிலர் கூறுகையில், உற்பத்தி செலவு கிலோவுக்கு 15 ரூபாய் ஆகிறது. விளைச்சல் சற்று குறைந்தாலும் 20 ரூபாய் அடக்க விலை ஆகிவிடுகிறது. விற்பனை விலை சாதகமாக இல்லை.இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் உள்ளூரில் மக்காச்சோள சாகுபடி படிப்படியாக குறைந்துவிடும் என்றனர்.

    • பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது.

    உடுமலை,

    உடுமலை சுற்றுப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக,மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வகை வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட முன்பு விவசாயிகள் அதிக தயக்கம் காட்டி வந்தனர்.

    இதையடுத்து மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மற்றும் மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.எனவேஇத்தொழிலில்ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில்வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலை பெற்றது.பிற மாநிலங்களில் இருந்து உடுமலைக்கு வந்து மல்பெரி தோட்ட பராமரிப்பு, புழு வளர்ப்பு மனை பராமரிப்பு, அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுச்செல்லும் அளவுக்குஇப்பகுதி இத்தொழிலில் முன்னிலையில் இருந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக மல்பெரி வளர்ப்பு, இளம்புழு பராமரிப்பு, நோய்த்தாக்குதல் கட்டுப்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் முறையாக கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காலத்தில் பட்டுக்கூடுகளை சந்தைப்படுத்த, சிரமம் நிலவியது.அப்போது விலை வீழ்ச்சி, விற்பனை சந்தை பிரச்னை காரணமாக இத்தொழிலை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெண்பட்டுக்கூடுகள் விலை கிலோ 700 ரூபாய் அளவுக்கு உயர்ந்த போது உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.கடந்த சில மாதங்களாக உற்பத்தியை சீராக்க விவசாயிகள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். விலையும் நிலையாக கிடைக்கத்துவங்கியது. ஆனால் தற்போது, உடுமலை பகுதியிலுள்ள மல்பெரி தோட்டங்களில் இலைப்பேன் உள்ளிட்ட நோய்த்தாக்குதல் துவங்கி வேகமாக பரவி வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு காரணங்களால், மல்பெரி செடிகளில் இலைப்பேன் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இவ்வகை பேன்கள் மல்பெரி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சிக்கொள்கிறது.எனவே தரமில்லாத மல்பெரி இலைகள் உருவாகிறது. இவ்வகை இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளித்தால், புழுக்களும் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி தரமற்ற பட்டுக்கூடுகளே உற்பத்தியாகும்.கொழுந்து செடிகளில் இத்தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாததால் இந்த சீசனில் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து நஷ்டத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில் முன்பு குறிப்பிட்ட இடைவெளிகளில் தொழில்நுட்ப விழிப்புணர்வு கூட்டங்கள் கிராமம் வாரியாக நடத்தப்படும். இதனால்அந்தந்த பகுதி விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.மீண்டும் இத்தகைய கூட்டங்களை நடத்திதரமான மல்பெரி இலை, பட்டுக்கூடு உற்பத்திக்கு அரசு உதவ வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • ஒட்டன்சத்திரத்தை சுற்றி பல்வேறு கிராமங்களில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது.
    • விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் ஏமாற்ற–மடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் :

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களான அம்பிளிக்கை,இடைய கோட்டை, தங்கச்சிய ம்மாபட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு–வரப்படும் காய்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்ப–னைக்கு அனுப்பி வைக்க–ப்படுகிறது.

    கடந்த மாதம் வரை 1 கிலோ முருங்கை ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. அதன் பிறகு வரத்து சற்று அதிகரித்ததால் ரூ.50 வரை குறைந்தது. தற்போது மேலும் விளைச்சல் அதிகரித்து வரத்தும் கூடியுள்ளதால் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

    பெரும்பாலான முருங்கை மும்பை, ெகால்கத்தா, பரோடா போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இருந்தபோதும் விளைச்சல் அதிகரித்துள்ள நிலை–யில் போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் ஏமாற்ற–மடைந்துள்ளனர்.

    இதே போல் தக்காளி 1 பெட்டி ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையாகி வந்தது. தற்போது ஒரு பெட்டி ரூ.400 என விலை குறைந்துள்ளது. இதே போல் கத்தரிக்காய் ஒரு பை ரூ.450க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் ரூ.20, வெண்டைக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.20 என பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளது.

    முகூர்த்த நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடந்து வரும் நிலையிலும் காய்கறிகள் விலை குறைந்திருப்பது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.

    ×