search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி சாவு"

    • பழனிசாமி தோட்டத்து கிணற்றில் கால் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஓட்டக்குட்டை ரோடு கோழிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (43). விவசாயி. இவரது தோட்டத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

    இந்நிலையில் பழனிசாமி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கால் தவறி அவர் கிணற்றில் விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 மணி நேரமாக போராடி கயிறு கட்டி பழனிசாமியை பிணமாக மீட்டனர்.

    இறந்த பழனிசாமிக்கு ரேவதி என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலக் குறைவால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50) விவசாயி.

    இவர் 2 ஆண்டுகளாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அவர் நெல் பயிருக்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சி கிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • திருமணமான ஒரு ஆண்டில் பரிதாபம்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்க ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் தசரதன் (வயது 35). விவசாயியான இவர் பொக்லைன் எந்திரமும் வைத்துள்ளார்.

    அதில் பாலாஜி என்பவரை டிரைவராக பணியமர்த்தி உள்ளார். இவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் டிரைவர் பாலாஜி வந்தவாசிக்கு மோட்டார்சைக்கிளில் தசரதனை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    முதலூர் கிராமம் அருகில் வந்தபோது நான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டேன். பிழைக்க மாட்டேன் இப்படியே என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு என்று கூறியுள்ளார்.

    தசரதன் உடல்நிலை மோசமானதால் அவரை வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் முதலுதவி செய்து தீவிர சிகிச்சை அளித்தனர் சிகிச்சைபலனின்றி தசரதன் இறந்தார்.

    உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தம்பி அமலேஷ் கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயியான இவர் நேற்று கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள குருமசனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பா (வயது72). விவசாயியான இவர் நேற்று கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.

    இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விாசரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த வேடல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 39), விவசாயி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் சிவலிங்கம் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • பேத்திக்கு நீச்சல் கற்றுகொடுத்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 60). விவசாயி.

    இவர் வழக்கம் போல் தனது மாடுகளை விவசாய நிலம் அருகில் மேய்ப்பது வழக்கம்.

    இந்நிலையில் நீச்சல் கற்று கொடுக்க அருகே உள்ள கிணற்றுக்கு பூங்காவனம் பேத்தியுடன் சென்றார். தாத்தாவும் , பேத்தியும் கிணற்றின் படிக்கட்டு வழியாக இறங்கி கொண்டு இருந்தனர். அப்போது நிலை தடுமாறி பூங்காவனத்தின் பேத்தி விழுந்தார். பேத்தியை காப்பாற்றுவதற்காக பூங்காவனம் கிணற்றில் குதித்தார்.

    உடனே அருகில் இருந்த உறவினர் ஒருவர் பூங்காவனத்தின் பேத்தியை கிணற்றில் இருந்து காப்பாற்றினார்.

    நீண்ட நேரம் ஆகியும் பூங்காவனம் கிணற்றில் இருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர் கூச்சலிட்டு அக்கம் பக்கம் உள்ள கிராம மக்களை வர வழைத்தார். அவர்கள் கிணற்றில் விதித்து பூங்காவனத்தை தேடினர். பூங்காவனம் கிடைக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி வெகு நேரம் தேடியும் பூங்காவனம் கிடைக்கவில்லை.

    பின்னர் ராட்சத மோட்டார் பம்ப் மூலமாக கிணற்று நீரை இறைத்து 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூங்காவனத்தின் உடலை மீட்டனர்.

    இறந்து போன பூங்காவனத்திற்கு தனக்கோட்டி என்ற மனைவியும் ஜெயபால் என்ற மகனும் மகேஸ்வரி தேவி என்ற 2 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ் கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேத்திக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று கிணற்றில் குதித்து பூங்காவனம் உயிரிழந்த சம்பவம் கீழ் வில்லிவலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மதுரை அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தப்பநாயக்கனூரை அடுத்த திம்மநத்தத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவருக்கு மனைவி பிரேமா உள்ளார். விவசாயியாக வேலை பார்த்து வந்த ரஞ்சித்குமார் சம்பவத்தன்று மதியம் கொப்பிலிப்பட்டி தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனால் மயங்கி விழுந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயியான இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் அங்குள்ள டோல்கேட் அருகில் சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.

    தருமபுரி,

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்துள்ள உத்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது55). விவசாயியான இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் அங்குள்ள டோல்கேட் அருகில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் முனிராஜ் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுகாலை பரிதாபமாக முனிராஜ் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி பகுதியில் ஏற்பட்டசாலைவிபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்சந்திரன் (வயது 40) என்பவர் காயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதேபோல பாப்பாரப்பட்டி அருகேயுள்ள நாகதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவர் ஏரிக்கரை சென்றபோதுஅவ்வழியாக வந்த வாகனம் மோதி காயம் அடைந்தார்.தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதேபோல பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள ரெங்கம்மாள் பேட்டை பகுதியை சேர்ந்த செல்லகுமார் (65) உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமாகவில்லை. இதில் மனமுடைந்து அனைத்து மாத்திரைகளையும் விழுங்கி விட்டார்.அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • சுப்பிரமணி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி சென்றார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக சுப்பிரமணியை பாம்பு கடித்து விட்டது.

    திருச்சி,

    திருச்சி மணப்பாறை கருமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்து விட்டது. உடனடியாக மனைவி அவரை மீட்டி துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பல அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுப்பிரமணியன் மனைவி முத்துக்கண்ணு வடநாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாய்க்காலில் மூழ்கி விவசாயி உயிரிழந்தார்.
    • ஆடு, மாடுகளை வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 43). விவசாயியான இவர் தனது ஆடு, மாடுகளை அதே கிராமத்தின் வடக்கே உள்ள அவரது வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரைத் தேடி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சுண்டக்குடி மருதையாறு தடுப்பணை அருகே அவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவக்குமார் வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கினாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். விவசாயி.
    • ன்னல் தாக்கிய தில் 2 ஆடுகளும் உயிரிழ ந்தது. வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். விவசாயி. இவர் நேற்று மதியம் பார்வதிபுரம் பாய்பான்குட்டைஏரிக்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த சமயம் மின்னல் தாக்கியதில் ராசாங்கம்படு காயமடைந்தார். உடனே ‌அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குபரி சோதித்த டாக்டர் ஏற்கனவே ராசாங்கம் உயிரி ழந்ததாக கூறியுள்ளார். மேலும்மின்னல் தாக்கிய தில் 2 ஆடுகளும் உயிரிழந்தது. வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×