search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers die"

    • கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். விவசாயி.
    • ன்னல் தாக்கிய தில் 2 ஆடுகளும் உயிரிழ ந்தது. வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம். விவசாயி. இவர் நேற்று மதியம் பார்வதிபுரம் பாய்பான்குட்டைஏரிக்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த சமயம் மின்னல் தாக்கியதில் ராசாங்கம்படு காயமடைந்தார். உடனே ‌அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குபரி சோதித்த டாக்டர் ஏற்கனவே ராசாங்கம் உயிரி ழந்ததாக கூறியுள்ளார். மேலும்மின்னல் தாக்கிய தில் 2 ஆடுகளும் உயிரிழந்தது. வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மேல்மலையனூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பலியானார்.
    • ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(66) விவசாயி. நேற்று முன்தினம் (5-ந்தேதி) முருகேசன் மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன. இதனால் அலறித்துடித்த முருகேசனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் முருகேசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×