பாம்பு கடித்து விவசாயி சாவு

சுப்பிரமணி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி சென்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக சுப்பிரமணியை பாம்பு கடித்து விட்டது.
பாம்பு கடித்து விவசாயி சாவு
Published on

திருச்சி,

திருச்சி மணப்பாறை கருமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்து விட்டது. உடனடியாக மனைவி அவரை மீட்டி துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பல அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சுப்பிரமணியன் மனைவி முத்துக்கண்ணு வடநாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com