search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு"

    • அரியலூரில் தேசிய கோ-கோ போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
    • விளையாட்டுத் திறன்அடிப்படையில் 12 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்தெடுக்கப்பட்டனர்

    அரியலூர்,

    இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடத்தப்படவுள்ள 17 வயது பிரிவு மாணவர்களுக்கான தேசிய கோ-கோ போட்டியின் தமிழக அணிக்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றறது.அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் சென்னை, வேலூர், கோயம்புத்தூர், கடலூர் என 8 மண்டலங்களில் இருந்து 38 மாவட்டங்களைச் சேர்ந்த 72 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் உடன் திறன், விளையாட்டுத் திறன், முழு விளையாட்டு அடிப்படையில் 12 மாணவர்கள் தமிழக அணிக்காக தேர்தெடுக்கப்பட்டனர்.உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமையில் , உறுப்பினர்களாக அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி, அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் திருமூர்த்தி, பொய்யாதநல்லூர் ரவி, கௌரவப்பாளையம் செல்வகுமார் ஆகியோர் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் செய்திருந்தார். 

    • அரியலூரில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது
    • 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நவம்பர் மாதம் டெல்லியில் நடத்தப்படவுள்ள 14 வயது பிரிவு மாணவர்களுக்கான தேசிய கைப்பந்து போட்டிக்கு தமிழக அணிக்கானத் தேர்வு அரியலூரில் நடைபெற்றது.அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வீரர் தேர்வு க்கான போட்டியில் 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 16 மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட்டு தமிழக அணிக்காக விளையா டவுள்ளனர்.முன்னதாக போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்பரப்பி திருமூர்த்தி, விளாங்குடி வீரபாண்டி யன்,கல்லாத்தூர் விஜய்ஆனந்த், ஆண்டிமடம் நிர்மலா மேரி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலை ப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் த. ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், கீழப்பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி, அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் ,சேகர் ,இளங்கோவன், குமார், ராஜசேகர், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாவட்ட அளவிலான கலைநிகழ்ச்சி போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுலவர்கள் பாராட்டினர்.

    கீழக்கரை

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவி லான கலா உற்சவம் கலை நிகழ்ச்சி போட்டிகள் மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி கள் பங்கேற்றன. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அல் ஆஷிப் ரைஹான் (11-ம் வகுப்பு) வாய்பாட்டிசை பாரம்பரிய நாட்டுப்புற பாட்டு போட்டியில் முதல் பரிசு பெற்று மாநில அளவில் பங்கு பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுலவர்கள் பாராட்டினர்.

    • 16 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.
    • 19 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் லூா்து மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.

     உடுமலை

    உடுமலையைச் சோ்ந்த டா்எப்-2022 என்ற அமைப்பு சாா்பில் தனியாா் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி பாலப்பம்பட்டியில் உள்ள செயற்கை புல் மைதானத்தில் நடைபெற்றது. 16 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதில், 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

    மணவா்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆா்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இப்போட்டி டிராவில் (சமநிலை) முடிந்ததால் பெனால்டி ஸ்ட்ரோக் முறை கடைப்பிடிக்கப்பட்டது.இதில், 5-3 என்ற கோல் கணக்கில் ஆா்ஜிஎம் பள்ளி அணி வெற்றிபெற்றது.

    மாணவிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெதப்பம்பட்டி என்.வி. உயா்நிலைப் பள்ளி, குறிச்சிக்கோட்டை ஆா்விஜி மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இதில், என்.வி. உயா்நிலைப் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

    வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.

    உடுமலை வட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளில் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

    உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு நகரமன்றத் தலைவா் மு.மத்தீன் தலைமை வகித்தாா். திமுக., நகரச் செயலாளா் சி.வேலுசாமி போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

    இதில், 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் குறிச்சிக்கோட்டை ஆா்விஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், 17 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் சாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், 19 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் லூா்து மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.

    போட்டிகளை உடற்கல்வி ஆசிரியா் விஜயபாண்டி ஒருங்கிணைத்திருந்தாா்.

    • பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான குறுவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான கபடி போட்டியும், பெண்களுக்கான கால்பந்து போட்டியும் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 11, 14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு களரம்பட்டி, அரசு ஆதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், குறுவட்ட ஒருங்கிணைப்பு குழு செயலாளருமான ஆறுமுகம் மற்றும் பள்ளி உடற்கல்வி இயக்குனரும், குறுவட்ட போட்டிக்கான இணை செயலாளருமான பாஸ்கர் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

    • நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும்.
    • கிராமங்களில் கூட இப்போது வெறும் பணத்தை மட்டும் கணக்கு போட்டு கொண்டு இருப்பதால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.

    "நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும். ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும்" என சத்குரு கூறியுள்ளார்.

    இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழாவான 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' நாளை மறுநாள் (ஆக.12) தொடங்க உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், "நம் பாரத கலாச்சாரத்தில் வாழ்க்கையையே ஒரு விழாவை போல் கொண்டாட்டமாக வைத்து இருந்தோம். நம் தேசத்தில் 365 நாட்களும் ஏதோ ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். விழா என்றால் வேலை செய்ய கூடாது; விடுமுறை எடுக்க வேண்டும், அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது அல்ல. எப்போது நீங்கள் எல்லா செயல்களையும் கொண்டாட்டமாக செய்கிறீர்களோ அதுவே ஒரு விழா தான்.

    நம் கிராமங்களில் உழவு செய்யும் போது, நெசவு நெய்யும் போது, சமையல் செய்யும் போது, குழந்தையுடன் விளையாடும் போது என எந்த செயல் செய்தாலும் அதில் ஒரு பாட்டும் கொண்டாட்டமும் இருக்கும். எப்போது நம் வாழ்வில் இந்த கொண்டாட்ட தன்மையை இழக்கிறோமோ அப்போது மன அழுத்தம் வரும்.

    நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும். ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும். உங்களுடைய பாட்டி சீரியஸ் ஆக இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவர் போவதற்கு தயாராகிவிட்டார் என்று தானே அர்த்தம். நீங்கள் அப்படி ஆக கூடாது. எப்போதும் சுறு சுறுப்பாகவும் புத்துணர்வாகவும் இருக்க வேண்டும். உங்களுக்குள் விளையாட்டு தன்மையை கொண்டு வர எங்கோ சென்று போட்டி போட வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலேயே குடும்பத்தினருடன் விளையாடி கொள்ளலாம்.

    கிராமங்களில் கூட இப்போது வெறும் பணத்தை மட்டும் கணக்கு போட்டு கொண்டு இருப்பதால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. சமூகங்களில் ஜாதி, மதம் என பல விதமான பாகுபாடுகள் வந்துவிட்டது. இதற்காக தான் ஈஷா கிராமோத்சவம் திருவிழா. 2004-ம் ஆண்டு இதை முதல் முறையாக தொடங்கினோம். இப்போது 15 வது ஈஷா கிராமோத்சவம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்கள் எல்லாம் நன்கு தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள் கிடையாது. வீட்டில் சமையல் செய்யும் பாட்டியும் அவருடைய பேரன் பேத்திகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக இதில் விளையாடுகிறார்கள்.

    இதுபோன்ற ஒரு மிகப்பெரிய கிராமிய விளையாட்டு போட்டி உலகத்தில் வேறு எங்கும் இல்லை என கூறலாம். அந்தளவிற்கு மிகப் பெரிய அளவில் மிக உற்சாகமாக நடக்க உள்ளது. எனவே, இந்த ஈஷா கிராமோத்சவத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இப்போது நம் பாரத தேசம் பொருளாதாரத்தில் முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் நம் வாழ்வில் விளையாட்டும் கொண்டாட்டமும் இல்லாமல் போய்விட்டால் பொருளாதாரத்தை வைத்து என்ன செய்வது?" என வீடியோவில் சத்குரு கூறியுள்ளார்.

    • 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
    • வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    கிராம மக்களின் வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஈஷா யோக மையத்தின் அவுட்ரீச் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் தென்னிந்திய அளவிலான கிராமிய விளையாட்டுத் திருவிழா 'ஈஷா கிராமோ த்சவம்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு முதன்முதலாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ளது. இவற்றில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஈஷாவின் கிரா மோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், 151 இடங்களில் 3 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. வருகிற 12-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் இந்த கிராமத் திருவிழாவில், ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான எறிபந்து, இரு பாலருக்குமான கபடி போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

    கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த அணிகள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். 14-வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம்.

    மேலும், கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்களும் நடத்தப் படுகின்றன. திருவிழாவில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம். தமிழகத்தில் மட்டும் 67 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வருகிற 10-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்றது
    • முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி போட்டிகளை தொடக்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிகளுக்கிடையே குறுவட்ட அளவிலான குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். போட்டியில் 15 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், துணைத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர், அரியலூர் நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர் ராஜேஷ், விளையாட்டு குழுத்தலைவர் அருண்ராஜ் எழில்மாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ப.தேகளீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கண்ட போட்டிகளின் நடுவராக உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி , வீரபாண்டியன் , செல்வ பாண்டியன் , தினேஷ் குமார் , இளவரசன் ,வில்லாளன் , சம்பத் , ஜபருல்லா ஆகியோர் செயல்பட்டனர்.விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி , உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளான மேசைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .மேசைப்பந்து பிரிவு போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் கீழப் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து கைப்பந்து போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் வெற்றி பெற்றனர் . வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கிழுமத்தூர் மாதிரி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அறிவேல் கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • இளைஞர்களுடன் இணைந்து எம்எல்ஏ வாலிபால் ஆடினார்
    • நன்கு விளையாட இளைஞர்களுக்கு அறிவுரை

    புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தீத்தானிப்பட்டி ஊராட்சியில் இளைஞர்கள் வாலிபால் ( கைப் பந்து ) விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து தானும் அவர்களுடன் இணைந்து விளையாடினார். 

    • விளையாட்டு நகரம் அமைப்பதற்காக செம்மஞ்சேரி, குத்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தேர்வு செய்துள்ளது.
    • கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களின் சாதக பாதகங்கள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விளையாட்டு துறைக்கு அதி நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி விளையாட்டு துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது. இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுகள் நடத்தப்படும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், அரசின் சின்ன சின்ன திட்டங்களை கண்காணிக்க நடந்த ஆய்வின் போது, உலகத்தர விளையாட்டு நகர திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விளையாட்டு நகரம் அமைக்கக் கூடிய 3 இடங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது' என்று கூறி இருந்தார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் அமைய உள்ள உலகத்தர விளையாட்டு நகரத்தில் ஒரு பெரிய ஸ்டேடியம், கால்பந்து மைதானம், தடகள விளையாட்டு பகுதி, ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் போன்ற வசதிகள் இருக்கும். விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் இடம் இதில் இடம் பெற்றிருக்கும். விளையாட்டு நகரம் அமைப்பதற்காக செம்மஞ்சேரி, குத்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே வண்டலூர் மற்றும் குத்தம்பாக்கம் அருகே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பஸ் நிலையங்களை அமைத்து வருகிறது. 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும்.

    இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களின் சாதக பாதகங்கள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • உயரம் நம் முன்னோர்கள் ஜீன்களின் படி இருக்கும்.
    • பெண் குழந்தைகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.

    பிறந்த குழந்தை 1 வயது முதல் பருவமடையும் காலம் வரை ஒவ்வொரு வருடத்திலும் 2 அங்குலம் வரை வளர்கிறார்கள். பருவ வயதுக்கு பிறகு தான் ஆண்டுக்கு 4 அங்குலம் வரை வளர்ச்சி அடைகிறார்கள். பதின்ம வயதை அடைந்த ஆணும், பெண்ணும் பூப்படைந்த பின்னும் வேகமாக வளரும் காலம் இது.

    அதனால் தான் பிள்ளை வளர்த்தி காலத்தை முன்னோர்கள் குழந்தை பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், வளரும் பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், பூப்படையும் பருவத்தில் ஒரு வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து பிள்ளை பேறுக்கு பிறகு ஒரு வளர்ச்சியும் என்று சொல்வார்கள்.

    * பெண் குழந்தைகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம். உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.

    * ஆண் குழந்தைகள் பார் என்று சொல்லப்படுகிற ஹேங்கிங் செய்யலாம். இது உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.

    * கூடைப்பந்து விளையாட்டை தினமும் பயிற்சி செய்து வரலாம்.

    * அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * அதிக தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    * சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * நீச்சல் பயிற்சி செய்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் போது உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்...

    * நேராக நின்று கொண்டு பின் குனிந்து கால் பெருவிரல் தொடும் பயிற்சி உதவும். இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும். அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருப்பதும் உயரமாக உதவும் என்பதை நினைவில்கொள்ளவும்.

    குழந்தைகளை வெயிலில் விளையாட செய்ய வேண்டும். இதனால் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும். கால்சியம் நிறைந்த உணவு பொருள்களை உடல் எடுத்துகொண்டாலும் அதை உடல் உறிஞ்சுகொள்ள வைட்டமின் டியின் உதவி தேவை.

    எதுவாக இருந்தாலும் உயரம் நம் முன்னோர்கள் ஜீன்களின் படி இருக்கும். இதெல்லாம் ஒரு முயற்சிக்காக.

    ×