search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் விளையாட்டு போட்டி
    X

    கோப்பு படம்.

    உடுமலையில் விளையாட்டு போட்டி

    • 16 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.
    • 19 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் லூா்து மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.

    உடுமலை

    உடுமலையைச் சோ்ந்த டா்எப்-2022 என்ற அமைப்பு சாா்பில் தனியாா் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி பாலப்பம்பட்டியில் உள்ள செயற்கை புல் மைதானத்தில் நடைபெற்றது. 16 வயதிற்குள்பட்ட பிரிவில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இதில், 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

    மணவா்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆா்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இப்போட்டி டிராவில் (சமநிலை) முடிந்ததால் பெனால்டி ஸ்ட்ரோக் முறை கடைப்பிடிக்கப்பட்டது.இதில், 5-3 என்ற கோல் கணக்கில் ஆா்ஜிஎம் பள்ளி அணி வெற்றிபெற்றது.

    மாணவிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெதப்பம்பட்டி என்.வி. உயா்நிலைப் பள்ளி, குறிச்சிக்கோட்டை ஆா்விஜி மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. இதில், என்.வி. உயா்நிலைப் பள்ளி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

    வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.

    உடுமலை வட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளில் மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

    உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு நகரமன்றத் தலைவா் மு.மத்தீன் தலைமை வகித்தாா். திமுக., நகரச் செயலாளா் சி.வேலுசாமி போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

    இதில், 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் குறிச்சிக்கோட்டை ஆா்விஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், 17 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் சாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும், 19 வயதுக்குட்பட்டவா்களுக்கான பிரிவில் லூா்து மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.

    போட்டிகளை உடற்கல்வி ஆசிரியா் விஜயபாண்டி ஒருங்கிணைத்திருந்தாா்.

    Next Story
    ×