என் மலர்

  நீங்கள் தேடியது "child game"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.
  • வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.

  வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர்.

  அது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

  மேலும் தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள்.

  நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

  ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

  'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும்.

  தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீடியோ கேம் விளையாடுவதை திடீரென மொத்தமாக நிறுத்தினால், மனநலம் பாதிக்கப்படலாம்.
  • வன்முறை செய்யத் தூண்டும் விதமாக சில வீடியோ கேம் விளையாட்டுகள் அமைந்துள்ளன.

  கடந்த சில வருடங்களில் சிறுவர்-சிறுமிகள் வீட்டுக்கு வெளியே வந்து விளையாடுவது பெருமளவில் குறைந்திருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு, பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு பயப்பட ஆரம்பித்தனர். காலச்சூழல் எல்லோரையும் வீட்டிற்குள் முடக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வீடியோ கேம்சுக்கு அடிமையாகி விட்டனர்.நேரத்தை போக்குவதற்கும், மனசை ரிலாக்ஸ் செய்வதற்குமான பொழுதுபோக்குதான் இது. ஆனாலும் இதன் மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் அச்சப்பட வைக்கின்றன.

  வீடியோ கேம் விளையாடும்போது பெரும்பாலும் அதிக அசைவுகள் இன்றித்தான் உட்கார்ந்திருப்போம். கூடவே, நொறுக்குத் தீனிகள், துரித உணவு, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் என தவறான உணவுப் பழக்கமும் ஒட்டிக்கொள்கிறது. பெரும்பாலான குழந்தைகள் வீடியோ கேம்ஸ், கணினி, செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களில் ஏதாவது ஒன்றைத் தினமும் சராசரியாக நான்கு மணி நேரத்துக்கும் மேலாக உபயோகப்படுத்துகிறார்கள்.

  இதன் காரணமாக உடல் எடை அதிகமாக இருப்பது, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள், மூட்டு வலி, கருப்பை பாதிப்பு, புற்றுநோய், தூக்கமின்மை போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

  வன்முறை செய்யத் தூண்டும் விதமாக சில வீடியோ கேம் விளையாட்டுகள் அமைந்துள்ளன. அடித்தல், குத்துதல், துப்பாக்கியால் சுடுதல், வெடிகுண்டு வீசுதல் போன்ற விளையாட்டுகளை நண்பர்களுடன் இணைந்து விளையாடுகின்றனர். இதன் தாக்கத்தால் சிலர் சரியாகத் தூங்குவதில்லை. அப்படியே தாமதமாக இரவில் தூங்கினாலும் வீடியோ கேம் விளையாடுவது போன்ற கனவு வருவதாக கூறுகின்றனர். இத்தகைய உளவியல் ரீதியான சிக்கல்கள் பின்னாளில் பல பாதிப்புகளை உருவாக்கும்.

  வீடியோ கேம் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்க நினைப்பவர்கள் படிப்படியாக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். புத்தகம் வாசிக்கக் கொடுப்பது, தோட்ட வேலை, வீட்டு அலங்காரம் போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். அவர்கள் வீடியோ கேம் விளையாடுவதை திடீரெனமொத்தமாக நிறுத்தினால், மனநலம் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

  நீங்கள்தான் உங்கள் குழந்தையின் ரோல்மாடல். ஆகவே, நீங்கள் முதலில் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்.

  உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

  சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளைக் கூடுமானவரை வீட்டிலேயே தயார்செய்து கொடுக்க வேண்டும்.

  சாப்பிடும்போது டி.வி., வீடியோ கேம், செல்போன் பார்க்க அனுமதிக்கக்கூடாது.

  டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

  வெளியே சென்று விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.

  தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

  குழந்தைகளின் அதிகப்படியான உடல் எடை குறைவதற்கு மருத்துவரின் ஆலோசனையோடு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
  இன்று பல வீடுகளில் குழந்தைகளை சமாதானப்படுத்தும் சாதனம் செல்போன்தான். அழும் குழந்தை கூட செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகிவிடுகிறது. ஆனால் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்க, நன்மை, தீமை அறியாத பருவத்தில் இருக்கும் அவர்களிடம் செல்போனை கொடுப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.

  செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.

  தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

  நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

  ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.

  இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

  இந்நிலையில், 14 வயதுடைய ஆண், பெண் குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.  இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.

  அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.

  ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.

  குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.

  அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.
  இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் எல்லோரின் ‘செல்லப்பிள்ளைகள்’ போல் மாறிவிட்டன. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை வாய்ப்புகளையும் ஸ்மார்ட்போன்கள் வாரி வழங்குகின்றன.

  இதனால் ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் சுட்டுவிரலுக்கும் வேலைப்பளு அதிகமாகிவிட்டது. வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம் என்று ஸ்மார்ட் போன்களில் வரும் தகவல்கள், செய்திகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகையர் பற்றிய விமர்சன மீம்ஸ்களை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே ஆக்கிரமித்து இருப்பதே அதற்கு காரணம்.

  செல்போன் நிறுவனங்களின் வியாபார போட்டிகள், உற்பத்தி அதிகரிப்பு, விலை மலிவு போன்றவற்றின் காரணமாக அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் போன்கள் வலம் வருகின்றன. இப்படி வீடுகள்தோறும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்மார்ட் போன்களால் எந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக பிரச்சினைகளும் கூடவே உள்ளன. குறிப்பாக குழந்தைச் செல்வங்கள், பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் செல்போன்களில் உள்ள விளையாட்டுகளுக்கு அடிமையாகிப் போகிறார்கள்.

  பெற்றோரின் கைகளில் செல்போனை பார்த்துவிட்டால் போதும். வெடுக்கென பிடுங்கிக் கொண்டு ஓடுவது, பெற்றோருக்கு தெரியாமல் செல்போனை எடுத்துக் கொண்டு தனியிடத்துக்கு சென்று விளையாட்டுகளை பார்ப்பது என்று சிறுவயதினரின் சேட்டைகள் சகஜமாகிவிட்டது. அவ்வாறு தூக்கிக்கொண்டு ஓடும் குழந்தைகளின் கைகளில் இருந்து செல்போன்கள் கீழே விழுந்தும், சில குழந்தைகள் கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்தும் பெற்றோருக்கு செலவு வைத்துவிடுவதும் உண்டு. தங்களது குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு செல்போனை கொடுத்துவிட்டு அதைப்பார்த்து மகிழும் சில பெற்றோரும் உண்டு. ஆனால் அதுவே, பிள்ளைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதை ஏனோ அவர்கள் உணருவதில்லை.

  முன்பெல்லாம் சிறுகுழந்தைகள் வீட்டு முற்றங்களில் நன்றாக ஓடி விளையாடுவது உண்டு. உடல் தசைகள் இறுக்கம் கொள்ளவும், அவர்களை திடகாத்திரமானவர்களாக அது மாற்றவும் உதவியது. அதனால்தான் முண்டாசுக் கவிஞன் பாரதி, ‘ஓடி விளையாடு பாப்பா...நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று மழலைகளுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனால் இன்றைய நிலை ‘செல்லுக்குள் முடங்காதே பாப்பா...நீ செயலிழந்துபோவாய் பாப்பா’ என்று பாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.  இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. நகரங்களில் மட்டுமல்ல...கிராமங்களிலும்கூட இந்த நிலை வந்துகொண்டிருக்கிறது. கிராமங்களுக்கே உரித்தான ஓடிப்பிடிக்கும் விளையாட்டு, பம்பரம் சுற்றுதல், கண்ணாமூச்சி ஆட்டம், கில்லி, எறிபந்து, நொண்டியடித்தல், போலீஸ்-திருடன் விளையாட்டு, கோலிக்குண்டு போன்ற விளையாட்டுகள்கூட இந்தக்கால குழந்தைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

  இதனால் மழலைகளின் உடல் போதிய வலுப்பெறுவதில்லை. சுறுசுறுப்பு குறைந்து, இயல்பான செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். மேலும் செல்போனின் கதிர்வீச்சு குழந்தைகளை எளிதாக தாக்கும். செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. போதிய சுய சிந்தனை, கற்பனைத்திறனை பெறும் சக்தி அவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள், அவர்கள்.

  அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் கடும் போட்டி காரணமாக உற்பத்தி செய்யப்படும் செல்போன்களில் தரமில்லாத பல போன்கள் அவ்வப்போது வெடித்துச் சிதறவும் செய்கிறது. இதனால் உடல்சேதம் மட்டுமல்லாமல் சில சமயங்களில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுவிடுகிறது. அதற்கு, குழந்தைகளிடம் செல்போன்களை தராமல் இருப்பதே அவர்களது நல்வாழ்வுக்கு நலம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

  இதேபோல் குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளி பருவத்தினரும், செல்போன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதும் அதிகரித்து வருகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியவர்கள் செல்போனில் படம் பார்ப்பதிலும், விளையாடுவதிலுமாக இருக்கிறார்கள். இது அவர்களது நல்ல எதிர்காலத்துக்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் முட்டுக்கட்டையாக வாய்ப்பு உள்ளது.

  இதற்கு பெற்றோர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத்தை கருதி அவர்கள் கல்வியில் வெற்றிமகுடம் சூட்டும்வரை செல்போன்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பதோடு, தங்களது செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தாதவாறு கண்காணிக்கலாம். ஆரோக்கியமானவர்களாக தங்களது மழலைச் செல்வங்கள் உருவாக அவர்களை நான்கு சுவற்றுக்குள் அடைத்துவிடாமல், உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

  அதோடு பிள்ளைகளுக்கு கற்பனைத்திறன் ஊற்றெடுக்கும் வகையில் நூல்களை படிக்க வைத்தல், கதை, கட்டுரைகளை எழுத பயிற்சி அளித்தல், தனித்திறன்களை வெளிப்படுத்த உறுதுணையாக இருத்தல், பொது அறிவை புகுத்த நூலகங்களுக்கு அனுப்பி வைத்தல், வாழ்வில் ஒழுக்கநெறி கொண்டவர்களாக உருவாக நீதிக்கதைகள், நன்னெறிக்கதைகளை கற்றுவித்தல் ஆகியவற்றில் பெற்றோர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும். எதிர்கால இந்தியாவுக்கு தேவை வெறும் அறிவார்ந்தவர்கள் மட்டுமல்ல... ஆரோக்கியம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை கட்டிக்காக்கும் இளைய சமுதாயமே. மொத்தத்தில் ஓடிவிளையாட வேண்டிய வயதில் சின்னஞ்சிறுசுகள் நான்கு சுவற்றுக்குள் முடங்கும் சூழல் முடிவுக்கு வந்தால் நலம்.

  -முக்கூடற்பாசன். 
  ×