search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளவங்கோடு"

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு.
    • ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.

    2024ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும்.

    தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.

    வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது. வயதானவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது.

    தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.

    அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது.

    பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயதாரணி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
    • பாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சிக்கு தாவியதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 190 (3) (பி)ன் கீழ் சட்டப்பேரவை விதிகளின்படி பிப்ரவரி 24 முதல் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, 'திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருக்கிறதா என சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். இந்த ஆட்சி சட்டத்தின் ஆட்சி. சட்டத்திற்குட்பட்டு சரியான நடவடிக்கை எடுத்து வருவதாக சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார்.

    • ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது 'X' தளத்தில் பகிர்ந்துள்ளது.
    • எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது

    விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி, காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது 'X' தளத்தில் பகிர்ந்துள்ளது.

    அதில், "எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்" என பதிவிடப்பட்டுள்ளது

    • விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
    • தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை

    கன்னியாகுமரி:

    விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமை யில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு அருமனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த காரை நிறுத்து மாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த கார் நிறுத்தாமல் சென்று விட்டது.

    தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று களியல் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனை தொடர்ந்து காரை சோதனை செய்து பார்த்த போது 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் கார் வட்டாட்ச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×