களியக்காவிளை அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அதிரடிதப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை
களியக்காவிளை அருகே  கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
Published on

கன்னியாகுமரி:

விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமை யில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு அருமனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது அந்த காரை நிறுத்து மாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த கார் நிறுத்தாமல் சென்று விட்டது.

தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று களியல் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் கார் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

இதனை தொடர்ந்து காரை சோதனை செய்து பார்த்த போது 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் கார் வட்டாட்ச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com