search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபறி"

    • அரியலூரில் கடை வியாபாரியிடம் கத்தியைகாட்டி மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • கத்தியை காட்டி பணம் பறிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் தாகீர் உசேன் (வயது 40). இவர் உடையார்பாளையம் கடைவீதியில் இருசக்கர உதிரி பாகங்கள் மற்றும் பழுது நீக்கம் கடையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பஷீர் மகன் பக்ருதீன் (23), இவரது நண்பர்களான கார்த்திக் (24), அரவிந்த் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாகீர் உசேனிடம் சென்று கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்தனர். மேலும் இதை யாரிடமாவது கூறினால் கொல்லாமல் விடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாகீர் உசேன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து உடையார்பாளையம் கடைவீதியில் நின்று கொண்டு இருந்த பக்ருதீன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேல கல்கண்டார்கோட்டை பார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
    • கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது

    திருச்சி, 

    திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. அங்குள்ள மதுக்கடை பாரில் திருச்சி கக்கன் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 34) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாலிபர் இவரை வழிமறித்து கத்தி முனையில் பணத்தை பறித்து விட்டு சென்று விட்டார். இதுகுறித்து முருகானந்தம் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற முகமது ரபி என்ற வாலிபரை கைது செய்தார் . அவரிடம் இருந்து பணம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    • திருச்சியில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது
    • இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து துணிகரம்

    மண்ணச்சநல்லூர்,

    புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி காரைக்கோட்டை பகுதியை ேசர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர், திருச்சி மாவட்டம் கிளிக்கூடு மணல் குவாரியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் மணல் குவாரியில் வசூலான பணத்துடன் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.உத்தமர்சீலி மேலவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் 2 பேர் மணிகண்டன் சென்ற வாகனத்தில் மோதினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென மணிகண்டன் முகத்தில் மிளகாய் பொடிைய தூவி, அவர் வைத்திருந்த ரூ.8 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் மணி கண்டன் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
    • செயின் பறித்து சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் மேத்யூநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (67). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி லலிதா (60). கணவன், மனைவி இருவரும் ஸ்கூட்டரில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை புகளூர் அருகே மூலிமங்கலம் பிரிவு அருகே உள்ள புனித அந்தோணியார் ஆலயம் அருகே வந்து கொண்டிருந்தபோது இவர்களுக்கு பின்னால் பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் கிருஷ்ணவேணி அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிக்கொடியை அறுத்துள்ளனர். அப்போது நிலை தடுமாறி கிருஷ்ணசாமியும், லலிதாவும் தேசிய நெடுஞ்சாலையின் தார் சாலையில் விழுந்தனர். அப்போது மர்ம நபர்கள் தங்க தாலிக்கொடியை பிடித்து இழுத்தனர். அப்போது லலிதா தாலிக்கொடியை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். தாலி செயின் அறுந்து ஒன்றரை பவுன் தாலி செயின் மர்ம நபர் கையில் சிக்கியது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்களில் வருபவர்களை பார்த்து கையில் கிடைத்த ஒன்றை பவுன் தாலி கொடியுடன் இரண்டு மர்மநபர்களும் மோட்டார் பைக்கில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து லலிதா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து லலிதாவின் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிய 2 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளபுனித அந்தோணியர் தேவாலயம் அருகே 2 வாகனங்களில் வந்த மாமியார் மருமகள் ஆகிய 2 பெண்களிடமும் 4 ½ பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு இதேபோல் இரண்டு மரமநபர்கள் மோட்டார் பைக்கில் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

    • ராம்ஜிநகர் அருகே சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மூன்றேகால் பவுன் தாலிச் செயின் பறிப்பு
    • கைவரிசை காண்பித்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சாந்தி (வயது 38).இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு வேலை முடிந்து தனது சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நவலூர் குட்டப்பட்டு சுடுகாடு பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர்.பின்னர் கழுத்தில் அணிந்திருந்த மூன்றேகால் பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்..திருடன்.. என கத்தினார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்தப் பகுதியில் அப்போது ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.இதுகுறித்து சாந்தி ராம்ஜி நகர் போலீஸ் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட்டில் சென்ற பெண் ஆசிரியரை வழிமறித்து நகையை பறித்து சென்ற மர்மநபர்கள்
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகள் ஹரிணி (வயது 24). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது சென்னை பைபாஸ் சாலையில் வந்த பொழுது திடீரென்று ஹரிணி மற்றும் அவரது தோழியை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் வழிமறித்தனர்.பின்னர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றை பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.இது குறித்து ஹரிணி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிணியிடம் நகையைப் பற்றிச் சென்ற இரண்டு மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பெண்ணின் தாலி செயினை பறிப்பு சம்பவம்
    • செயினை பறித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி,

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விவேக் குமார்.இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 24) இவர் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு தின்பண்டங்கள் வாங்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம ஆசாமி சிவரஞ்சனி அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். உடனே அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து பொன்மலை போலீசில் ஒப்படைத்தனர். விசார ணையில் பிடிபட்ட வர் திருச்சி மேல கல்க ண்டார் கோட்டை சாமிநா தன் தெருவை சேர்ந்த சுதாகர்( 45) என்பது தெரிய வந்தது. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக்கை வழிமறித்து கணவர் கண்முன் பெண்ணின் 7 பவுன் செயின் பறிப்பு
    • 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

    திருச்சி, 

    திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 48 ) சமையல் கலைஞர். இவரின் வீட்டுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் விசேஷத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்களை வழியனுப்பதற்காக கண்ணன் தனது மனைவி விஜயலட்சுமி உடன் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் சென்றார். பின்னர் உறவினர்களை ரயிலில் வழி அனுப்பி வைத்துவிட்டு இரவு 10 மணி அளவில் வீடு திரும்பினர். சென்னை பைபாஸ் சாலை காவேரி பாலத்தின் அருகாமையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் அவர்களை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கண்ணன் கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கத்தி முனையில் மிரட்டி வாலிபரிடம் மோட்டார் சைக்கிள் - பணம் பறிப்பு
    • வழக்கு பதிந்து வாலிபரை கைது செய்த போலீசார்

    திருச்சி, 

    திருச்சி சமயபுரம் பிச்சாண்டார் கோவில் நம்பர் ஒன் டோல்கேட் கீழத் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜ் (வயது 47). கூலித் தொழிலாளி. இவர் திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி இருசக்கர வாகனத்தையும், அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து காந்திராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் வழிப்பறி செய்த ஸ்ரீரங்கம் சிங்கர்கோயில் தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 24) என்கிற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • மாடு மேய்க்க சென்ற பெண்ணின் 2 பவுன் தாலிச் செயின் பறிப்பு
    • கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    குன்னம், 

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருவத்தூர் இலுப்பை குடி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு.இவருக்கு அந்தப் பகுதியில் விவசாயத் தோட்டம் உள்ளது. மேலும் ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார்.இந்த நிலையில் அவரது மனைவி அகிலாண்டம் (வயது 65). வழக்கம் போல் காலை தங்கள் கால்நடைகளுடன் வயலுக்குச் சென்றார்.பின்னர் மேய்ச்சலுக்கு தோட்டத்தில் கட்டி இருந்த மாடுகளை அவிழ்த்துக் கொண்டு வீடு திரும்பினார்.இலுப்பூர்- சாத்தனூர் ரோட்டில் வந்த போது 2 வாலிபர்கள் இரு வேறு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். பின்னர் திடீரென அவர்கள் அகிலாண்டத்தை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் கத்தினார். ஆனால் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.பின்னர் இது குறித்து துரைகண்ணு மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சியில் தேங்காய் வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
    • வழக்கு பதிந்த போலீசார் 2 ரவுடிகள் கைது செய்துள்ளனர்

    திருச்சி,

    திருச்சி அரியமங்கலம் அடைக்கல மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ரூபன் மார்ட்டின் (வயது 40). இவர் தேங்காய் வியாபாரியான இவர் எஸ்.ஐ.டி. பஸ் நிறுத்தம் அருகில் சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அருகில் வந்த அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்த யுவராஜ் (24), தீபக் (17) ஆகிய இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூபன் மார்ட்டின் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டனர். இதுகுறித்து ரூபன் மார்ட்டின் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், தீபக் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் மீது அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், இருவரும் ரவுடிகள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜ் தீபக் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.

    • கரூரில் தனியாக நடந்து சென்றவரிடம் தங்க செயின் பறிப்பு
    • பெயிண்டர் கைது செய்யப்பட்டு உள்ளார்

    கரூர், 

    கரூர், ரத்தினம் சாலையை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பாலமுருகன் (வயது 39) கூலி தொழிலாளி. இவர் திருமாநிலையூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திருமாநிலையூர் தெற்கு தெருவை சேர்ந்த பெயிண்டர் ராமன் (வயது 33) என்பவர், பாலமுருகன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து, பாலமுருகன் கொடுத்த புகார்படி, தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிந்து , பெயிண்டர் ராமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

    ×