என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபறி"

    • வழி பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • நடந்து சென்று போது சம்பவம்

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சியாம் சுந்தர். இவர் நேற்று இரவு கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் (35), சுரேஷ் (32) ஆகியோர் அவரை தாக்கி, கத்தியால் கீறி அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ டிரைவர் மற்றும் மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.
    • நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தி பயணியிடம் நகை பறிக்கப்பட்டது

     திருச்சி,

    சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 43). இவர் திருச்சி காட்டூரில் ஒரு வேலை விஷயமாக வந்துவிட்டு மீண்டும் சென்னை செல்ல ஆட்டோவில் புறப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பிச்சை நகர் பகுதியில் ஆட்டோ வந்த பொழுது திடீரென்று ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடன் வந்த ஒரு வாலிபர் ஆட்டோவை நிறுத்தி சதீஷிடம் தகராறு செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் சதீஷ் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற ஆட்டோ டிரைவர் மற்றும் மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.

    • மது பாரிலேயே அட்டகாசம்
    • 2 பேர் கைது

    கரூர்

    கோதூரை சேர்ந்தவர் வீரமணி (வயது 21). இவர் அதே பகுதி டாஸ்மாக் மது பாரில் சமையலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வெங்கமேட்டை சேர்ந்த கார்த்திக் (வயது 21), திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் அங்கு வந்து, வீரமணியை மிரட்டி ரூ. 600 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வீரமணி அளித்த புகாரி பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எ.புதூர் போலீசார் வழக்கு பதிந்து 2 வட மாநில பெண்கள் கைது செய்துள்ளனர்
    • ஆயுதப்படை அருகே நடந்த துணிகரம்

    திருச்சி

    திருச்சி கிராப்பட்டி போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சுமதி ( வயது 42). இவர் திருச்சி- மதுரை சாலை டி.எஸ்.பி. பட்டாலியன் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். சுமதி பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு வட மாநில பெண்கள் கத்தி முனையில் இவரிடம் பணத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் எடமடைபட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் பணம் பறித்ததாக ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் மினே பகுதியைச் சேர்ந்த ரத்தன் மனைவி சாயிரி, கோபால் லால் மனைவி பூரி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

    • இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சம்பவம்
    • ரூ.1.36 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்

    கரூர்,

    திருச்சி மாவட்டம், முசிறி, திருதலையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 37). பொக்லைன் இயந்திர டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு, திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் இருந்து, கரூர், திருக்காம்புலியூர் வழியாக இருசக்கர வாகனத்தில் முசிறிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 4 பேர், ராமசாமியை வழிமறித்து, அவரிடமிருந்த ஒரு லட்சத்து, 36 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, ராமசாமி கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து வ சாரணை நடத்தி வருகின்றனர்.

    வழிமறித்து பணம், செல்போனை பறிக்க முயற்சி

    கரூர்,

    கரூர் அருகே, கூலி தொழிலாளியிடம் மொபைல் போன், பணம் பறிக்க முயன்ற நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கரூர், வெண்ணைமலை அருகே சின்ன வடுகப்பட்டி பிரிவை சேர்ந்தவர் கமல் மஹாஜன் (வயது 35). கூலி வேலை செய்து வருகிறார். இவர், வடுகப்பட்டி பிரிவு அருகே, நண்பருடன் சேர்ந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள், கமல் மஹாஜன் வைத்திருந்த, மொபைல் போன், பணத்தை பறிக்க முயன்றனர். இதுகுறித்து, அவர் கொடுத்த புகா ரின்படி, வெங்கமேடு போலீசார், விசாரிக்கின்றனர்.

    • கல்லூரி மாணவனை தாக்கி மோட்டார் சைக்கிள் பறிப்பு
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி நாகமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் லிங்கேஸ்வரன் (வயது 19). திருச்சி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் திருச்சி ெரயில் நிலையத்தில் தனது சகோதரரை விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் தனியாக இரு சக்கர வாகனத்தில் நாகமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோரையாறு பாலம் அருகே எடமலைப்பட்டி புதூர் பழைய செக்போஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 மர்ம நபர்கள் லிங்கேஸ்வரனை வழிமறித்தனர். பின்னர்அவரை சரமாரியாக தாக்கி இருசக்கர வாகனத்தை பறித்து விட்டு, தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து லிங்கேஸ்வரன் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபிஉமா வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார். கல்லூரி மாணவரை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடந்து சென்ற பெண்ணிடம் கைவரிசை
    • 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    கரூர்,

    வெள்ளியணை அருகே, இளம்பெண் ணிடம் செயின் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், ராமானூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகள் யமுனா (வயது 28) இவர் கடந்த, 27ல் மதியம், வெள்ளியணை அருகே, காக்கா வாடி பஸ் ஸ்டாப்பில், நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, டூவீலரில் சென்ற அடை யாளம் தெரியாத இருவர், யமுனா அணிந்தி ருந்த ஒன்றேகால் பவுன், செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, வெள்ளியணை போலீசில் யமுனா அளித்த புகாரின் பேரில், இந்த சம் பவத்தில் ஈடுபட்ட, திருச்சி, பாலையூரை சேர்ந்த அர்ஜூனன் (வயது 27), கம்பரசம்பேட் டையை சேர்ந்த சுதாகர், (28)ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • 4 ரவுடிகள் தப்பி ஓட்டம்
    • போலீசார் வழக்கு பதிந்து வலை வீச்சு

    திருச்சி, 

    ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சேதுபதி (வயது 29).இவர் திருச்சி தனியார் டெலி .கம்யூனிகேஷன் நிறுவனத்தில் கேபிள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார் . இவர் திருச்சி சங்கிலியாண்டபுரம் காசியாபிள்ளை காலனி வாட்டர் டேங்க் எதிரில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை மிரட்டி அரிவாளால் தாக்கி, இவரிடம் இருந்த ரூ.4200 பணத்தை பறித்து சென்று விட்டனர். இதில் காயமடைந்த சேதுபதி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் திருச்சி சங்கிலியாண்ட புரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த இளையராஜா, எதுமலை உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் இளையராஜா எதுமலை ஆகிய இரண்டு பேரும் ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமயபுரம் சென்று விட்டு திரும்பியபோது சம்பவம்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி.

    திருச்சி கே.கே. நகர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் சௌமியா நாராயணன். இவர் கே.கே. நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் அவர் தனது தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு காரில் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் பலூர் காமாட்சி பவன் ஹோட்டல் பகுதியில் நடந்து சென்றபோது கூட்ட நெரிசலில் அவரது தாயார் அணிந்திருந்த 4 பவுன் செயினை மர்ம நபர்கள் பரிசு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சௌமியா நாராயணன் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை 

    • திருச்சி தெப்பக்குளம் பள்ளி அருகே சம்பவம்
    • வழக்கு பதிந்து இருவரை கைது செய்த போலீசார்

    திருச்சி,

    திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தேவி. இவர்களது உறவினர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (வயது 31 )என்பவர் திருச்சி வந்தார். இவர் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மிரட்டி இவரிடம் இருந்த பவுன் தங்க செயின் பறித்தனர்.பின்னர் அவரிடம் இருந்து 500 ரூபாய் பணத்தை வாங்கி விட்டு செயினை திருப்பிகொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சேரன், சூரிய பிரகாஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது 2 மர்ம நபர்கள் சங்கிலியை பறித்து சென்றனர்
    • சிசிடிவி கேமிரா உதவியுடன் போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழசெங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது 30). இவர்களது 2 வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சூர்யா தனது இரு சக்கர வாகனத்தில் தாய் வசந்தா மற்றும் குழந்தை இருவருடன் ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் கீழச்செங்கமேடு கிராமத்திற்கு திரும்பி பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக பின் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தில் முகத்தை கர்சிப்பால் மூடிய நிலையில் வந்த 2 மர்ம நபர்கள் சூர்யாவை முந்தி சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். அதிர்ச்சியடைந்த சூர்யா வண்டியை நிறுத்திவிட்டு சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்வழியாக வந்தவர்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத், சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் கங்கைகொண்ட சோழபுரம், குருவாலப்பர் கோயில், ஆமணக்கந்தோண்டி பகுதி கடைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கண்காணித்து மர்ம நபர்களை தேடி விசாரித்து வருகின்றனர்.பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×