என் மலர்
உள்ளூர் செய்திகள்

சைக்கிளை பறித்த கொள்ளையர்கள்
- கல்லூரி மாணவனை தாக்கி மோட்டார் சைக்கிள் பறிப்பு
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி நாகமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் லிங்கேஸ்வரன் (வயது 19). திருச்சி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் திருச்சி ெரயில் நிலையத்தில் தனது சகோதரரை விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தார். பின்னர் தனியாக இரு சக்கர வாகனத்தில் நாகமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோரையாறு பாலம் அருகே எடமலைப்பட்டி புதூர் பழைய செக்போஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 மர்ம நபர்கள் லிங்கேஸ்வரனை வழிமறித்தனர். பின்னர்அவரை சரமாரியாக தாக்கி இருசக்கர வாகனத்தை பறித்து விட்டு, தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து லிங்கேஸ்வரன் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபிஉமா வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார். கல்லூரி மாணவரை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






