என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடந்து சென்றவரிடம் தங்க செயின் பறிப்பு
- கரூரில் தனியாக நடந்து சென்றவரிடம் தங்க செயின் பறிப்பு
- பெயிண்டர் கைது செய்யப்பட்டு உள்ளார்
கரூர்,
கரூர், ரத்தினம் சாலையை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பாலமுருகன் (வயது 39) கூலி தொழிலாளி. இவர் திருமாநிலையூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திருமாநிலையூர் தெற்கு தெருவை சேர்ந்த பெயிண்டர் ராமன் (வயது 33) என்பவர், பாலமுருகன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து, பாலமுருகன் கொடுத்த புகார்படி, தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிந்து , பெயிண்டர் ராமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Next Story






