search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபறி"

    • திருச்சியில் கத்தி முனையில் ரெயில்வே போலீஸ்காரரிடம் பணம் பறிக்கப்பட்டு உள்ளது
    • பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்

    திருச்சி, 

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41). இவர் பொன்மலை ரெயில்வே டீசல் பிரிவில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார்.

    இவர் பணி முடிந்து மதியம் 2.30 மணி அளவில் வீடு திரும்பி கொண்டி ருந்தார். செந்தண்ணீர்புரம் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி, கார்த்திக்யிடம் பணம் கேட்டுள்ளார். கார்த்திக் பணம் தர மறுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக அந்த மர்ம ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி அவர் சட்டை பையில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து கார்த்திக் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் செந்தண்ணீர்புரம் பகுதியில் சந்தேகத்திற்கு கிடமான மர்ம ஆசாமி ஒருவர்ரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது கத்தி முனையில் பணத்தை பறித்து சென்ற சங்கிலியாண்டபுரம் பாரதியார் நகர் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் என்கிற குண்டுமணி (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பணத்தையும் கத்தியையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியலூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் வழிபறி நடந்துள்ளது
    • 2 மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    அரியலூர்,

    அரியலூர், குறுமஞ்சாவடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் தென்றல் என்பவரின் மனைவி அம்பிகா(55).இவர் அரியலூர் சுப்பிரமணியர் கோயில் அருகேயுள்ள ஒரு வங்கியில் இருந்து தனது சேமிப்பு பணம் ரூ.25 ஆயிரத்தை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், அவரது கைப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து வேகத்தில் சென்றுவிட்டனர். அந்த கைப்பையில் ரூ.25 ஆயிரம், வங்கி சேமிப்புகணக்கு புக், கைப்பேசி உள்ளிட்டவைகள் இருந்துள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் அரியலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

    • பெரம்பலூரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி மர்ம ஆசாரிகள் பறித்து சென்றுள்ளனர்
    • மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர்-துறையூர் சாலையில் கல்யாண் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி விஜயா (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை 10 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆண் நபர் ஒருவர் விஜயா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயா திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் அந்த நபர் தாலி சங்கிலியுடன் அருகே தயார் நிலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு ஆண் நபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி பெரம்பலூர் நோக்கி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.இந்த சம்பவம் குறித்து விஜயா பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதையடுத்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஓய்வு பெற்ற பெண் பொறியாளரிடம் 11 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்
    • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார், மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    தூத்துக்குடி ராமசாமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 64). ஓய்வு பெற்ற இளமின் பொறியாளரான இவர் பெரம்பலூர் கோல்டன் சிட்டி 8-வது தெருவில் வாடகை வீட்டில் உள்ள தனது மகன் விஷ்ணு சக்கரவர்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். விஷ்ணு சக்கரவர்த்தி வேப்பூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் குமாஸ்தாவாகவும், அவரது மனைவி சத்யபிரியா அரியலூரில் உள்ள வங்கி ஒன்றில் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.இதனால் இவர்களின் 3½ வயது ஆண் குழந்தையை முனீஸ்வரி கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் முனீஸ்வரி பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள கடை ஒன்றில் காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முனீஸ்வரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக முனீஸ்வரி பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்

    • மளிகைக்கடை ஊழியரிடம் அரிவாளை காட்டி ரூ.37½ லட்சம் பறிப்பு
    • பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

     திருச்சி,

    திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 56). இவர் கடையில் வியாபாரத்தின் மூலம் வசூலான பணத்தை வங்கியில் கட்டுவதற்காக ஒரு பையில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தை வைத்து கொண்டு நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து ஆட்டோவில் ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் 2 பேர் அரிவாளை காட்டி மிரட்டியதால் பதற்றம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றார்.பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் கிருஷ்ணகுமாரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து கடையின் உரிமையாளர் கண்டோ ன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறா ர்கள். முதற்கட்ட விசார ணையில் திருச்சி வரகனேரி மற்றும் அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இரண்டு ரவுடிகளுக்கு தொடர்பு இரு ப்பது தெரியவந்துள்ளது.தலைமறைவான ரவுடிகளை பிடிக்க போலீஸ் படை விரைந்துள்ளது. இதற்கிடையில் ரவுடிகளிடம் தொடர்பில் இருந்த பெண் உள்பட 3 பேரை கண்டோன்மெண்ட் பிரிவு போலீசார் மடக்கி பிடித்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் .விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயின் பறிப்பு
    • காணக்கிளியநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே சரடமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது38). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் உணவருந்தி விட்டு வீட்டை சாத்திவிட்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் சுகன்யா கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் செயினை பறித்து சென்றனர். செயின் பறிப்பதை உணர்ந்த சுகன்யா திடுக்கிட்டு எழுந்த போதுஅவரது கழுத்தில் கையை வைத்து அழுத்தி கண்ணி மைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமிகள் செயினை பறித்துச் சென்றனர். இதில் சுகன்யாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இவரின் வீடு கிராமத்துக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் இருந்ததால் இது மர்ம ஆசாமிகளுக்கு சாதகமாக அமைந்தது. காட்டுப் பகுதியாக வந்த மர்ம ஆசாமிகள் நகையைப் பறித்துச் விட்டு காட்டுப் பகுதியாக தப்பிச் சென்றனர். இது குறித்து அவசர காவல் உதவி எண் 100 மூலம் ராமச்சந்திரன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து நள்ளிரவில் சம்பவ இடத்திற்க்கு வந்த காணக்கி ளியநல்லூர் காவல் ஆய்வாளர் விஜய் கோல்டன் சிங் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் நிலா வரவ ழைக்கப்பட்டது.வீட்டின் அருகில் மர்ம ஆசாமிகள் விட்டுச் சென்ற ஒரு செருப்பை மோப்பம் பிடித்த நிலா வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மோப்பம் பிடித்து ஓடிச் சென்று நின்று விட்டது.இச்சம்பவம் குறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் காணக்கி ளியநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உடையார்பாளையம் புது பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்திரை (வயது 48). இவர் மைக் செட் கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் மணகெதி கிராமத்திற்கு நேற்று இரவு 7 மணியளவில் சின்னத்திரை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையார்பாளையம் புது பஸ் நிலையம் அருகே ஒருவர் வழியைமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சின்னத்திரை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருச்சி மேலகல்கண்டார்கோட்டையில் தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டு உள்ளது
    • பட்டப் பகலில் வீட்டின் கதவை தட்டி துணிகரம்

    திருச்சி, 

    திருச்சி மேலகல்கண்டார்கோட்டை காருண்ணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (வயது 50). வீரராகவன் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து மார்க்கெட்க்கு வேலைக்கு சென்று விட்டார்.அதைத் தொடர்ந்து சிவகாமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முன்னெச்சரிக்கையாக வீட்டின் முன்பக்க கதவை சாத்தி இருந்தார். இந்த நிலையில் பிற்பகலில் அவரது வீட்டின் கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே கணவர் வீடு திரும்பி இருக்கலாம் என கருதி கதவை திறந்து வெளியே வந்தார்.அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர். அதைத்தொடர்ந்து சிவகாமி சமையலறைக்கு தண்ணீர் எடுக்க சென்றார். அடுத்த நொடி அந்த மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று சிவகாமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடினர்.அதிர்ச்சி அடைந்த சிவகாமி திருடன் திருடன் என கத்தினார். ஆனால் கொள்ளையர்கள் அங்குள்ள கருவேல மர காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினர்.இதுகுறித்து சிவகாமி திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் கதவைத் தட்டி தண்ணீர் கேட்டு பெண்ணின் 7 பவுன் தாலிச் சேனை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உடையார் பாளையம் அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது
    • பணம் பறித்து சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

     அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் மேலத்தெருவை சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 35), விவசாயி. இவர் நேற்று அரியலூர் நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது உடையார்பாளையம் தான்டான் ஏரி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கவாஸ்கரிடம் இருந்த ரூ.200-ஐ வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கவாஸ்கர் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜ் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது
    • பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்

    திருச்சி,

    திருச்சி காவேரி ரோடு கீழதானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்ததாக கீழ தேவதானத்தை சேர்ந்த குணா என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். இவர் ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி திருவெறும்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் அசோக் (வயது 35). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தஞ்சை பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் அசோக்கிடம் பணத்தை பறித்து தப்ப முயன்றனர். அதற்குள் அசோக் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் மணப்பாறையை சேர்ந்த கந்தசாமி, சிவகங்கை திருப்பத்தூர் சேர்ந்த நாகராஜ்,திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த கணேஷ் என்பது தெரிய வந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • கிருஷ்ணராயபுரம் அருகே கத்தி முனையில் லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு
    • பணம் பறித்து சென்ற குப்பாச்சிபட்டியை சேர்ந்த வாலிபர் கைது

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் பகுதியில் லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, உள்ள முடக்கு சாலை பகுதியில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே மடத்துக்குளம், காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் திருமூர்த்தி(வயது 51). கடந்த 18ம் தேதி லாரியை நிறுத்திவிட்டு நடந்து சென்றுள்ளார்.அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் திருமூர்த்தியை மறித்து கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாயை பறித் துக்கொண்டு டூவீலரில் தப்பினர்.இதுகுறித்து, திருமூர்த்தி கொடுத்த புகாரின் படி, மாயனுார் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பணம் பறித்த பாப்பகாப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளிகள் சதீஷ்குமார், (23), குப்பாச்சிப்பட்டியை சேர்ந்த நந்த குமார், (21) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சுங்ககேட் பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்று 6 பவுன் செயினை
    • செயினை பறித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்,

    கரூர்,

    திருச்சி மாவட்டம், முசிறி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மனைவி பிரபா (வயது 42). இவர் சம்பவத்தன்று மருத்துவமனை செல்வதற்காக முசிறியில் இருந்து குளித்தலைக்கு வந்துள்ளார். குளித்தலை சுங்ககேட் பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தபோது திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முக்தி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (25) என்பவர் அந்தப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.பிரபா சுங்ககேட் பகுதியில் நின்று கொண்டிருப்பதை பார்த்து மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்வதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி பகுதியில் உள்ள சாந்திவனம் காவிரி ஆற்றுபடுகைக்கு கூட்டி சென்றுள்ளார்.அப்போது அங்கு பதுங்கி இருந்த சக்திவேலின் உறவினரான சரவணன் (26), மற்றும் சக்திவேல் ஆகியோர் பிரபாவை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து பிரபா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, மருதூர் சோதனை சாவடி பகுதியில் வைத்து நேற்று சக்திவேல், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×