நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி

அரியலூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் வழிபறி நடந்துள்ளது 2 மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.25 ஆயிரம் வழிப்பறி
Published on

அரியலூர்,

அரியலூர், குறுமஞ்சாவடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் தென்றல் என்பவரின் மனைவி அம்பிகா(55).இவர் அரியலூர் சுப்பிரமணியர் கோயில் அருகேயுள்ள ஒரு வங்கியில் இருந்து தனது சேமிப்பு பணம் ரூ.25 ஆயிரத்தை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், அவரது கைப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து வேகத்தில் சென்றுவிட்டனர். அந்த கைப்பையில் ரூ.25 ஆயிரம், வங்கி சேமிப்புகணக்கு புக், கைப்பேசி உள்ளிட்டவைகள் இருந்துள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் அரியலூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

X

Maalai Malar
www.maalaimalar.com