கத்திமுனையில் போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு

திருச்சியில் கத்தி முனையில் ரெயில்வே போலீஸ்காரரிடம் பணம் பறிக்கப்பட்டு உள்ளதுபணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்
கத்திமுனையில் போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு
Published on

திருச்சி, 

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41). இவர் பொன்மலை ரெயில்வே டீசல் பிரிவில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார்.

இவர் பணி முடிந்து மதியம் 2.30 மணி அளவில் வீடு திரும்பி கொண்டி ருந்தார். செந்தண்ணீர்புரம் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி, கார்த்திக்யிடம் பணம் கேட்டுள்ளார். கார்த்திக் பணம் தர மறுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக அந்த மர்ம ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி அவர் சட்டை பையில் வைத்திருந்த 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து கார்த்திக் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

இந்நிலையில் செந்தண்ணீர்புரம் பகுதியில் சந்தேகத்திற்கு கிடமான மர்ம ஆசாமி ஒருவர்ரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது கத்தி முனையில் பணத்தை பறித்து சென்ற சங்கிலியாண்டபுரம் பாரதியார் நகர் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் என்கிற குண்டுமணி (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பணத்தையும் கத்தியையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவர் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com