விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

உடையார் பாளையம் அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதுபணம் பறித்து சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
Published on

 அரியலூர்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் மேலத்தெருவை சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 35), விவசாயி. இவர் நேற்று அரியலூர் நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது உடையார்பாளையம் தான்டான் ஏரி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கவாஸ்கரிடம் இருந்த ரூ.200-ஐ வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கவாஸ்கர் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜ் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com