தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு

திருச்சி மேலகல்கண்டார்கோட்டையில் தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டு உள்ளது பட்டப் பகலில் வீட்டின் கதவை தட்டி துணிகரம்
தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு
Published on

திருச்சி, 

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை காருண்ணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (வயது 50). வீரராகவன் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து மார்க்கெட்க்கு வேலைக்கு சென்று விட்டார்.அதைத் தொடர்ந்து சிவகாமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முன்னெச்சரிக்கையாக வீட்டின் முன்பக்க கதவை சாத்தி இருந்தார். இந்த நிலையில் பிற்பகலில் அவரது வீட்டின் கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டது. உடனே கணவர் வீடு திரும்பி இருக்கலாம் என கருதி கதவை திறந்து வெளியே வந்தார்.அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர். அதைத்தொடர்ந்து சிவகாமி சமையலறைக்கு தண்ணீர் எடுக்க சென்றார். அடுத்த நொடி அந்த மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று சிவகாமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடினர்.அதிர்ச்சி அடைந்த சிவகாமி திருடன் திருடன் என கத்தினார். ஆனால் கொள்ளையர்கள் அங்குள்ள கருவேல மர காட்டுக்குள் புகுந்து தப்பி ஓடினர்.இதுகுறித்து சிவகாமி திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் கதவைத் தட்டி தண்ணீர் கேட்டு பெண்ணின் 7 பவுன் தாலிச் சேனை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com