search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி விபத்து"

    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பியது. அப் போது கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, தேசிய நெடுஞ் சாலைக்கு திரும்பிய லாரி யின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் உதிரி பாகங் கள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட் டத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 50) என்பவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடி யாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அரை மணிநேரம் போராடிஇடிபா டுகளில் சிக்கி இருந்த டிரை வர் உடலை மீட்டனர். பின் னர் ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர்.

    விபத்து காரணமாக ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்ப வம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    மேலும் விபத்து குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் போராடி அப்புறப்படுத்தினர்
    • போக்குவரத்து பாதிப்பு

    செங்கம்:

    பெங்களூருவில் இருந்து லோடுகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு நோக்கி செங்கம் வழியாக கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

    செங்கம் - போளூர் சாலையில் நேற்றிரவு தாசில்தார் அலுவலகம் அருகே வளைவில் திரும்பும்போது திடீரென கன்டெய்னர் கழிவு நீர் கால்வாயில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஒரு மணி நேரம் போராடி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்களை இரவு 10 மணிக்கு மேல் உள்ளே அனுமதித்தால் இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த சோழிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் முருகன். இவரது மனைவி அமுதா (வயது36). கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் சோழவரம் மார்க்கெட் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றனர். இதில் மோட்டார் சைக்கிள் மீது லாரி உரசியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த அமுதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா கணவர் கண்முன்பே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து கணவர் முருகன் கதறி துடித்தார். அவரும் மோட்டார் சைக்கிளோடு விழுந்ததில் காயம் அடைந்தார். அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • சேலம் மார்க்கெட்டு களுக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • அப்போது சீலநாயக்கன்பட்டி அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வருவது வழக்கம். இன்று காலை இளம்பிள்ளையை சேர்ந்த டிரைவர் முனிப்பன் என்பவர், பண்ருட்டியில் இருந்து லாரியில் பலாப்பழம் ஏற்றிக்கொண்டு சேலம் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சீலநாயக்கன்பட்டி அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பலாபழங்கள் ரோட்டில் சிதறியது.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

    இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி பரிமளா (வயது 40), மகன் அருண்ராஜ் (19). பழனிவேல் குடும்பத்துடன் காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு புறப்பட்டார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். அதிகாலை சுமார் 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது.

    அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது. காரின் முன் இருக்கையில் இருந்த அருண்ராஜ், பரிமளா ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.

    காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அவரை புவனகிரி போலீசார் மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் லாரியில் சிக்கிக்கொண்ட டிரைவர் விக்கியை போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் பர்னலால் யாதவ் லாரியை வேகமாக ஓட்டி வந்ததாக தெரிகிறது.
    • பாரம் தாங்காமல் லாரியில் ஏற்றிக் கொண்டு வந்த 40 டன் இயந்திரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.

    ராயபுரம்:

    உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பர்ணலால் யாதவ் (வயது 21) லாரி டிரைவர். இவர் நேற்று இரவு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரி செல்வதற்கு லாரியில் 40 டன் எந்திரங்களை ஏற்றிக்கொண்டு எண்ணூர் நெடுஞ்சாலையில் லாரியை ஓட்டி சென்றார்.

    புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் பர்னலால் யாதவ் லாரியை வேகமாக ஓட்டி வந்ததாக தெரிகிறது. அந்த சாலையில் உள்ள சிக்னலை கவனிக்காமல் வேகமாக வந்த போது எதிர்ப்புறம் உள்ள சாலையில் வந்த கண்டெய்னர் லாரியால் பர்னலால் யாதவ் திடீரென பிரேக் அடித்தார். இதில் பாரம் தாங்காமல் லாரியில் ஏற்றிக் கொண்டு வந்த 40 டன் இயந்திரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.

    சாலையில் கிழே விழுந்த இயந்திரங்களால் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த வாகனமும் செல்ல முடியாமல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய நாதன் உடனடியாக மாற்று வழியில் போக்குவரத்து செல்வதற்காக வழியை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர்செய்தார். இதன் பின் அந்த டிரைவர் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டு சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • விபத்தில் 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சுக்கம்பட்டி காந்தி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மது சாந்தன் (வயது 14). இவன் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இதேபோல், சுக்கம்பட்டி ராஜவீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் நவீன் (14) பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான்.

    இந்த நிலையில் நவீன் தனது தந்தை ராஜாவின் பைக்கை எடுத்துக் கொண்டு மாணவர் மது சாந்தனை அழைத்து கொண்டு இருவரும் அயோத்தியாபட்டணம் சென்று விட்டு மீண்டும் சுக்கம்பட்டி திரும்பினர்.

    அப்போது அரூர் மெயின் ரோடு தேவாங்கர் காலனி அருகே வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த லாரி, பயங்கரமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் லாரியில் சிக்கி மாணவன் மதுசாந்தன் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தான். நவீன் பலத்த காயம் அடைந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீராணம் போலீசார் மற்றும் பொது மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவன் நவீனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணியளவில் நவீன் பரிதாபமாக இறந்தான். அவனது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தாய் கண் முன்னே மகள் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் அக்பர் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் திவ்யா (வயது25). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் போரூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்ததும் திவ்யா வீட்டிற்கு செல்வதற்காக அண்ணாநகர் வந்தார். பின்னர் அங்கிருந்து அவரை தாய் மகேஸ்வரி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    இரவு 10 மணியளவில் மாதவரம் 100 அடி சாலை -வாட்டர் கேனல் சாலை சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய மகேஸ்வரியும், அவரது மகள் திவ்யாவும் கீழே விழுந்தனர்.

    லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய திவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தாய் மகேஸ்வரி சிறிது தூரம் தள்ளி விழுந்ததால் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். அவர் தனது கண்முன் மகள் பலியானதை கண்டு அலறி துடித்தார்.

    இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான கொளத்தூர் எம்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாய் கண் முன்னே மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு பஸ் மினி லாரி மீது மோதியது.
    • மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையிலிருந்து உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு விற்ப னைக்காக 1000 முட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று காலையில் சென்றது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை சென்னை சாலை அருகே பெரிய ஏரிக்கரை அருகே மினி லாரி வந்துகொண்டிருந்தது. 

    அப்போது எதிரே வந்த சேலம்- புதுவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் இருந்த 1000 முட்டைகளும் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. இதனையடுத்து அந்த வழியாக வந்த 5 மோட்டார் சைக்கிள்களும் சாலையில் வழுக்கி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்த மினி லாரியை ஓட்டி வந்த டிைரவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கள்ளக்குறிச்சி இருந்து திருக்கோவிலூருக்கு இன்று காலை தனியார் பள்ளி பஸ் ஒன்று சென்றது. அப்போது திருக்கோவிலூர் அருகே பஸ் வந்தபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர், கண்டக்டர், உதவியாளர், மாணவர்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் வெவ்வேறு சம்பவத்தில் தனியார் பஸ் மற்றும் மினி லாரி விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

    • கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த மலைப்பாதை வழியாகத் தான் சென்று வருகின்றன.
    • தமிழகம்-கர்நாடகா இடையே சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு மிகக்குறைந்த தொலைவில் செல்ல முடியும் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த மலைப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த மலைப்பாதை வழியாகத் தான் சென்று வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக பர்கூர் மலைப்பாதை வழியாக வரும் கனரக வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது.

    சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் அவ்வப்போது கவிழ்வதும். வண்டி பழுதாகி நிற்பதும் அடிக்கடி நிகழ்வதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு ஏற்படும் அதே நிலை தற்போது பர்கூர்மலை பாதையிலும் நிகழ்ந்து வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து கிரானைட் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் 2-வது வளைவில் திரும்பும் பொழுது லாரியிலிருந்து ராட்ச கிரானைட் கல் சாலையின் ஓரமாக விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து லாரி டிரைவர் சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அனைத்தும் வளைவுகளில் மிகுந்த சிரமத்திற்கு இடையே ஆபத்தான நிலையில் வாகனத்தை ஓட்டி வந்தனர்.

    அந்த வளைவில் கனரக வாகனங்கள் முன் சக்கரத்தில் பெரிய கற்களையும் பின் சக்கரத்தில் பெரிய கற்களையும் வைத்து மிகவும் சிரமப்பட்டு திருப்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் அதே இடத்தில் கர்நாடக மாநிலம் குடகில் இருந்து சேலத்துக்கு மரம் ஏற்றி வந்த லாரி ராட்சத கிராணைட் கல் விழுந்த அதே இடத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதனால் வரட்டு பள்ளம் அணைப்பகுதியிலிருந்து மலை பாதைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதே போல் பர்கூர் சோதனை சாவடியிலிருந்து அந்தியூர் வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் நேற்று அதிகாலை விழுந்த கிரானைட் கல் 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அப்புறப்படுத்தும் பணி தொடங்கி அதிகாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. இதனால் தமிழகம்-கர்நாடகா இடையே சுமார் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் விடிய, விடிய தவித்தனர்.

    • இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார்.
    • ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார்.

    மாமல்லபுரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் இளஞ்சூரியன் (வயது27). அப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் சிமெண்ட் தொட்டிகள், சிலாப்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார்.

    இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார். கல்பாக்கம் அடுத்த ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார். இதில் நிலை தடுமாறிய லாரியின் மேல்பகுதியில் படுத்து இருந்த இளஞ்சூரியன் தவறி நடுரோட்டில் கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை நிறுத்தினார்.

    பின்னர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய இளஞ்சூரியனை அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே இளஞ்சூரியன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் தவிப்பு
    • 1 மணி நேரம் போராடி மீட்கப்பட்டது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி பகுதியில் ரெயில்வே துறை சார்பில் உயர தடுப்பு அளவு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே துறை சார்பில் அளவுக்கு அதிகமாக ‌ லோடு ஏற்றி வரும் ‌ லாரி மற்றும் உயரத்தை தடுக்கும் வண்ணமாக ஐகேஜ் எனப்படும் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி வந்த லாரி டிரைவர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார்.

    அப்போது பந்தரபள்ளி பகுதியில் அமைந்துள்ள உயர தடுப்பு அளவு கம்பியில் லாரி சிக்கிக்கொண்டது அதன்பின்னர் செய்வதறியாமல் திகைத்த டிரை வர்அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி லாரியை எடுத்துச் சென்றார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    ×