என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவிலுக்கு சென்ற போது லாரி மீது கார் மோதி தாய்-மகன் பலி
- படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
- காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி பரிமளா (வயது 40), மகன் அருண்ராஜ் (19). பழனிவேல் குடும்பத்துடன் காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு புறப்பட்டார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். அதிகாலை சுமார் 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது. காரின் முன் இருக்கையில் இருந்த அருண்ராஜ், பரிமளா ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அவரை புவனகிரி போலீசார் மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் லாரியில் சிக்கிக்கொண்ட டிரைவர் விக்கியை போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






