சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 சிறுவர்கள் பலி

விபத்தில் 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 சிறுவர்கள் பலி
Published on

சேலம்:

சேலம் சுக்கம்பட்டி காந்தி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மது சாந்தன் (வயது 14). இவன் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இதேபோல், சுக்கம்பட்டி ராஜவீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் நவீன் (14) பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான்.

இந்த நிலையில் நவீன் தனது தந்தை ராஜாவின் பைக்கை எடுத்துக் கொண்டு மாணவர் மது சாந்தனை அழைத்து கொண்டு இருவரும் அயோத்தியாபட்டணம் சென்று விட்டு மீண்டும் சுக்கம்பட்டி திரும்பினர்.

அப்போது அரூர் மெயின் ரோடு தேவாங்கர் காலனி அருகே வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த லாரி, பயங்கரமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் லாரியில் சிக்கி மாணவன் மதுசாந்தன் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தான். நவீன் பலத்த காயம் அடைந்தான்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீராணம் போலீசார் மற்றும் பொது மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவன் நவீனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணியளவில் நவீன் பரிதாபமாக இறந்தான். அவனது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com