search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் என்ஜினீயர் பலி"

    • தாய் கண் முன்னே மகள் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் அக்பர் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் திவ்யா (வயது25). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் போரூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்ததும் திவ்யா வீட்டிற்கு செல்வதற்காக அண்ணாநகர் வந்தார். பின்னர் அங்கிருந்து அவரை தாய் மகேஸ்வரி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    இரவு 10 மணியளவில் மாதவரம் 100 அடி சாலை -வாட்டர் கேனல் சாலை சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய மகேஸ்வரியும், அவரது மகள் திவ்யாவும் கீழே விழுந்தனர்.

    லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய திவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தாய் மகேஸ்வரி சிறிது தூரம் தள்ளி விழுந்ததால் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். அவர் தனது கண்முன் மகள் பலியானதை கண்டு அலறி துடித்தார்.

    இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான கொளத்தூர் எம்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாய் கண் முன்னே மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்டிடத்தை இடிக்கும் போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இடித்ததால் சாலையோரம் நடந்து சென்றவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரர் ஜாகீர் உசேன், பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் பழமையான கட்டிடத்தை இடிக்கும் போது பெண் என்ஜினீயர் பத்மபிரியா இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

    கட்டிடத்தை இடிக்கும் போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இடித்ததால் சாலையோரம் நடந்து சென்றவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரர் ஜாகீர் உசேன், பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். கட்டிடத்தை இடிக்க ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர் அப்துல்ரகுமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×