search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி விற்பனை"

    • காரைக்காலில் சமூக வலைத்தளம் மூலம் 3-ம் நம்பர் லாட்டரி விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • லாட்டரி விற்பனை செய்வதாக காரைக்கால் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் புதிய பஸ் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், சமூக வலைதளம் மூலம் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 -ம் நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக காரைக்கால் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில், காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி தெருவை சேர்ந்த செல்வம்(வயது33) என்ற வாலிபர், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரியை விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த நபரை கைது செய்து. அவரிடம் இருந்த செல்போன், 3 நம்பர் லாட்டரி எண்கள் மற்றும் ரூ.300 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

     புதுச்சேரி:

    காரைக்கால் மாவட் டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்ரி விற்பனையை, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் பஸ் நிலையம் அருகே, மோட்டார் சைக்களில் வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரியை விற்பனை செய்வதாக, நகர போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. தொடர்ந்து, உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, லாட்டரி விற்பனை செய்த நபர், அங்கிருந்து கிளம்பினார். போலீசார், அவரை விரட்டி பிடித்து, மோட்டார் சைக்கிளை சோதனைச் செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்ரி, டைரி, நோட்டு, 3 செல்போன், பணம் ரூ.2,700 இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 29) என்பதும், அவரது செல்போனில், வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர், ஸ்ரீநாத் தலைவனாக சேலத்தை சேர்ந்த மோகன்ராஜ் செயல்படுவது தெரிய வந்தது. மோகன்ராஜின் செல்போனை கண்காணித்த போலீசார் அவரிடம் காரைக்காலை சேர்ந்த ஹாஜா மைதீன் (48), குல் முகமது (40), ஹாஜா (46), ஆகியோர் காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து ஸ்ரீநாத், ஹாஜா மைதீன் (48),குல் முகமது (40), ஹாஜா (46), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 செல்போன், லாட்ரி, செல்போன், ரொக்கம் ரூ.2,700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மூளையாக செயல்படும் சேலம் மோகன்ராஜ் மற்றும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுவதாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்ட 2 பேரை கைது செய்தனர்.

    புதுக்கோட்டை :

    பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுவதாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பொன்னமராவதி ஏனமேடு பகுதியை சேர்ந்த சேட் முகமது (வயது56).

    மற்றும் இருசக்கர வாகனத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட துவரங்குறிச்சி மருங்காபுரி தாலுகாவை சேர்ந்த பாண்டித்துரை (27) ஆகிய இருவரையும் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீசாரால் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டு மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விழுப்புரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    • விழுப்புரம் பானாம்பட்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாகிர் பாஷா (வயது 53) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய பகுதியான பானாம்பட்டு சாலையின் அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதாக ரகசிய தகவலில் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் படி, உதவி ஆய்வாளர் பரணிநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் பானாம்பட்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாகிர் பாஷா (வயது 53) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாகிர்பாஷாவை சிறையில் அடைத்தனர்.

    • ஓணம் பம்பர் குலுக்கலுக்காக கேரள அரசு மொத்தம் 60 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு இருந்தன.
    • லாட்டரி டிக்கெட்டின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்திய பிறகும் விற்பனை குறையவில்லை.

    திருவனந்தபுரம், செப்.15-

    கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது.

    முக்கிய பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஓணப்பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரியை கேரள அரசு அறிமுகம் செய்தது.

    இதன் முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டது. ஒரு சீட்டின் விலை ரூ.500 என்றும் கூறப்பட்டது. கடந்த ஆண்டு இதே குலுக்கலுக்கான சீட்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஓணம் பம்பர் குலுக்கலுக்காக கேரள அரசு மொத்தம் 60 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட்டு இருந்தன. இதன் குலுக்கல் வருகிற 18-ந் தேதி நடக்க உள்ளது.

    இந்நிலையில் ஓணம் பம்பருக்காக அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகள் 89 சதவீதம் விற்பனை ஆகி உள்ளது. அதாவது அச்சிடப்பட்ட 60 லட்சம் சீட்டுகளில் 53 லட்சத்து 76 ஆயிரம் சீட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. இதன்மூலம் அரசுக்கு ரூ.215 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அனைத்து சீட்டுகளும் விற்பனை ஆனால் ரூ.240 கோடி வருவாய் கிடைக்கும்.

    இது பற்றி லாட்டரி துறை அதிகாரிகள் கூறும்போது, கேரளாவில் கடந்த ஓணப்பண்டிகையின்போது லாட்டரி மூலம் ரூ.124.5 கோடி வருவாய் கிடைத்தது.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை மட்டும் ரூ.91 கோடி கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. இம்முறை ஒரு டிக்கெட்டின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்திய பிறகும் விற்பனை குறையவில்லை என்றனர்.

    ×