என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lottery selling"

    • காரைக்காலில் சமூக வலைத்தளம் மூலம் 3-ம் நம்பர் லாட்டரி விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • லாட்டரி விற்பனை செய்வதாக காரைக்கால் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் புதிய பஸ் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், சமூக வலைதளம் மூலம் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 -ம் நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக காரைக்கால் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில், காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி தெருவை சேர்ந்த செல்வம்(வயது33) என்ற வாலிபர், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரியை விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த நபரை கைது செய்து. அவரிடம் இருந்த செல்போன், 3 நம்பர் லாட்டரி எண்கள் மற்றும் ரூ.300 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த இஸ்மாயில் (வயது54 ) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர்குளம் பி.பெ.அக்ரஹாரம் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு வடக்கு போலீசார் அங்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்ம் வெப்படையை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • விழுப்புரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    • விழுப்புரம் பானாம்பட்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாகிர் பாஷா (வயது 53) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய பகுதியான பானாம்பட்டு சாலையின் அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதாக ரகசிய தகவலில் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் படி, உதவி ஆய்வாளர் பரணிநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் பானாம்பட்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாகிர் பாஷா (வயது 53) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாகிர்பாஷாவை சிறையில் அடைத்தனர்.

    ×