search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lottery sale"

    • மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.
    • கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும், பல்லடத்தில் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் பல்லடத்தில் கேரள மாநில லாட்டரிகள் சட்டவிரோதமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • 1 கிலோ 175 கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் 13- ந் தேதி கஞ்சா, லாட்டரி தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கஞ்சா விற்பனை செய்த திருப்பாதிரிப்புலியூர் சஞ்சய் (வயது 21) நெய்வேலி அஜய் (26) , பண்ருட்டி தமிழரசன் (21), நடுவீரப்பட்டு 17 வயது சிறுவன், ஏழுமலை (32), சேத்தியாத்தோப்பு தனலட்சுமி, ஸ்ரீமுஷ்ணம் வல்லரசு ஆகிய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 480 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனை செய்த பாலாஜி (31), அருண்குமார் (31) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் குட்கா விற்பனை செய்த கடலூர் ஜெயபிரகாஷ் (55), புதுச்சத்திரம் பச்சையம்மாள் (70), மந்தாரக்குப்பம் கோபாலகிருஷ்ணன் (42), ஸ்ரீமுஷ்ணம் குமரவேல்(46). பாரதிராஜா(27), சோழதரம் ராஜசேகர்(52). நெல்லிக்குப்பம் செந்தில்நாதன் (40), ஆவினங்குடி மோகன் (64), ராமநத்தம் வெங்கடேசன்(50), வேப்பூர் செல்வராஜ் (48). மணிவேல் (40), சிறுபாக்கம் பழனியப்பன் (55), திட்டக்குடி தமிழ்செல்வன் (55), ஆகிய 13 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து, இவர்களிடமிருந்து 1 கிலோ 175 கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    • சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் தலைமையிலான போலீசார் செங்கோட்டை பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர்.
    • அசன் முகமது சுமார் 100 கேரள லாட்டரிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் தலைமையிலான போலீசார் செங்கோட்டை பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் புளியரை அருகே உள்ள பூலான்குடியிருப்பு பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அசன் முகமது(வயது 28) என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில் சுமார் 100 கேரள லாட்டரிகளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்தனர்.

    • காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

     புதுச்சேரி:

    காரைக்கால் மாவட் டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்ரி விற்பனையை, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் பஸ் நிலையம் அருகே, மோட்டார் சைக்களில் வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரியை விற்பனை செய்வதாக, நகர போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. தொடர்ந்து, உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, லாட்டரி விற்பனை செய்த நபர், அங்கிருந்து கிளம்பினார். போலீசார், அவரை விரட்டி பிடித்து, மோட்டார் சைக்கிளை சோதனைச் செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்ரி, டைரி, நோட்டு, 3 செல்போன், பணம் ரூ.2,700 இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 29) என்பதும், அவரது செல்போனில், வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர், ஸ்ரீநாத் தலைவனாக சேலத்தை சேர்ந்த மோகன்ராஜ் செயல்படுவது தெரிய வந்தது. மோகன்ராஜின் செல்போனை கண்காணித்த போலீசார் அவரிடம் காரைக்காலை சேர்ந்த ஹாஜா மைதீன் (48), குல் முகமது (40), ஹாஜா (46), ஆகியோர் காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து ஸ்ரீநாத், ஹாஜா மைதீன் (48),குல் முகமது (40), ஹாஜா (46), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 செல்போன், லாட்ரி, செல்போன், ரொக்கம் ரூ.2,700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மூளையாக செயல்படும் சேலம் மோகன்ராஜ் மற்றும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற ஒருவருக்கு 2 நாள் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    கோவை:

    கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் கடந்த 28-ந் தேதி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு கோவை 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு 2 நாட்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பு கூறப்பட்டது. மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் ஒரு மாதம் மெய்க்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு வேலுசாமி தீர்ப்புக்கூறினார்.

    இதேபோல் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சோமசுந்தரம் (57) என்பவர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக ரேஸ்கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு கோவை 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட சோமசுந்தரத்துக்கு 5 நாட்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார். இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வக்கீல் ரேவதி ஆஜரானார்.

    இதுகுறித்து அரசு வக்கீல் ஒருவர் கூறியதாவது:-

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதற்காக அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் சட்டவிரோத தொழிலுக்கு செல்லக் கூடாது என்பதற்காக தண்டனை விதிக்கப்படுகிறது.

    இதில் தவறு செய்ததற்கு விதிக்கப்பட்ட தண்டனையை விட அபராதம் செலுத்த தவறினால் விதிக்கப்படும் தண்டனை அதிகம். எனவே பலர் அபராதத்தை செலுத்தாமல் சென்று விடுகின்றனர். தண்டனை விதிக்கப்பட்டு அபராத தொகை செலுத்தாதவர்கள் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் அபராத தொகையை செலுத்தி விடுவார்கள். அதனால் தான் தவறுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை விட அபராதம் செலுத்தாததற்கு அதிக தண்டனை விதிக்கப்படுகிறது.

    மேலும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறைக்கு சென்று சிறை நிர்வாகம் சொல்லும் ஏதாவது ஒரு வேலையை கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால் மெய்க்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையில் வேலை எதுவும் செய்ய வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×