என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை பஸ் நிலையத்தில் லாட்டரி விற்றவர் கைது
- சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் தலைமையிலான போலீசார் செங்கோட்டை பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர்.
- அசன் முகமது சுமார் 100 கேரள லாட்டரிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்லை:
செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் தலைமையிலான போலீசார் செங்கோட்டை பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் புளியரை அருகே உள்ள பூலான்குடியிருப்பு பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அசன் முகமது(வயது 28) என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில் சுமார் 100 கேரள லாட்டரிகளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்தனர்.
Next Story