சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும், பல்லடத்தில் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

இந்த நிலையில் பல்லடத்தில் கேரள மாநில லாட்டரிகள் சட்டவிரோதமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com