search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி விற்பனை"

    • கேரளா ஒரு நம்பர் லாட்டரி தண்டையார்பேட்டை பகுதியில் விற்பனை செய்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் சேர்ந்து செல்போனில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

    ராயபுரம்:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா ஒரு நம்பர் லாட்டரி தண்டையார்பேட்டை பகுதியில் விற்பனை செய்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் புது வைத்தியநாதன் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் சேர்ந்து செல்போனில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

    இது தொடர்பாக கொருக்குப்பேட்டை அண்ணா நகரைச் சேர்ந்த ரத்தினகுமார் (வயது 46) கொடுங்கையூர் தென்றல் நகரை சேர்ந்த வேலு (36). எழில் நகரைச் சேர்ந்த காந்தி குமார் (39) தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்த முனுசாமி (38) ஆட்டோ டிரைவர்கள் ஆகிய 4 பேரை இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.

    • சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த முருகாத்தாளை போலீசார் விசாரித்தனர்.
    • லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகாத்தாளை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள இலத்தூர் மந்தை தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி முருகாத்தாள் (வயது 52). இவர் சம்பவ த்தன்று தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் முருகாத்தாளை விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பணம், 48 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • பிரகாசம் சாலையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பெண் உள்பட 3 பேர் சேர்ந்து ஒரு நம்பர் லாட்டரியை ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

    ராயபுரம்:

    சென்னை பிராட்வே செம்புதாஸ் தெரு மற்றும் பிரகாசம் சாலையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெண் உள்பட 3 பேர் சேர்ந்து ஒரு நம்பர் லாட்டரியை ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பரமசிவன் (வயது 58) திருவொற்றியூர் பாரதி நகரைச் சேர்ந்த ஹேமலதா (38) மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (39) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 1 லேப்டாப் ரூ. 7,500 பணம், 5 செல்போன்கள் மற்றும் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கோழிக்கட்டானூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு அதனை தனது செல்போனில் படம் பிடித்து பொது மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி பரிசு விழுந்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி விற்பனை செய்து கொண்டிருந்தவரை தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    • செல்போன் பறிமுதல்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது ஒடுகத்தூர், சல்லாபுரியம்மன் தெருவை சேர்ந்த ராம்குமார் (வயது 37) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.

    பின்னர் ராம்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ஒடுகத்தூர் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தென்காசி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி ஒப்பனை விநாயகர் கோவில் அருகே கேரளாவில் இருந்து கொண்டு வந்த லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த இலத்தூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3,840 மதிப்பிலான 96 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • 89 லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் மணி.இவரது மகன் முத்துக்குமரன் (வயது 42).

    இவர் பொன்னேரி கூட்ரோட்டில் உள்ள டீக்கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்று வந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமரனிடம் இருந்து 89 லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தார்.

    மேலும் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.
    • கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும், பல்லடத்தில் மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் பல்லடத்தில் கேரள மாநில லாட்டரிகள் சட்டவிரோதமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த இஸ்மாயில் (வயது54 ) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • செல்போன் மற்றும் ரொக்கம் ரூ,360 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில், ஆன்லைன் மூலமாக லாட்டரி விற்பனை நடந்து வருவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்தப் பகுதியில் செல்போன் மூலம் சிலருக்கு லாட்டரி எண்களை கூறி, ஆன்லைன் மூலம் லாட்டரி நடத்திய மயிலாடுதுறையை சேர்ந்த தம்பு சாமி என்பவர் மகன் முத்துலிங்கம்( வயது 32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் ரொக்கம் ரூ,360 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்துல் ரசாக் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரூர்,

    அரூர் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் முக்கியமான வீதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் டி.எஸ்.பி. தலைமையிலான சிறப்பு படையின் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ரோந்து பணியில் ஈடுபட்ட போது அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கு விடுதியின் எதிர்ப்புறம் துணிக்கடையில் செல்போனில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக அரூர் பகுதியை சேர்ந்த

    வகித் மகன் அப்துல் ரசாக் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து ரூ.9,750 பறிமுதல் செய்யப்பட்டது

    • தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • 1 கிலோ 175 கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் 13- ந் தேதி கஞ்சா, லாட்டரி தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கஞ்சா விற்பனை செய்த திருப்பாதிரிப்புலியூர் சஞ்சய் (வயது 21) நெய்வேலி அஜய் (26) , பண்ருட்டி தமிழரசன் (21), நடுவீரப்பட்டு 17 வயது சிறுவன், ஏழுமலை (32), சேத்தியாத்தோப்பு தனலட்சுமி, ஸ்ரீமுஷ்ணம் வல்லரசு ஆகிய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 480 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனை செய்த பாலாஜி (31), அருண்குமார் (31) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் குட்கா விற்பனை செய்த கடலூர் ஜெயபிரகாஷ் (55), புதுச்சத்திரம் பச்சையம்மாள் (70), மந்தாரக்குப்பம் கோபாலகிருஷ்ணன் (42), ஸ்ரீமுஷ்ணம் குமரவேல்(46). பாரதிராஜா(27), சோழதரம் ராஜசேகர்(52). நெல்லிக்குப்பம் செந்தில்நாதன் (40), ஆவினங்குடி மோகன் (64), ராமநத்தம் வெங்கடேசன்(50), வேப்பூர் செல்வராஜ் (48). மணிவேல் (40), சிறுபாக்கம் பழனியப்பன் (55), திட்டக்குடி தமிழ்செல்வன் (55), ஆகிய 13 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து, இவர்களிடமிருந்து 1 கிலோ 175 கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ×