செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர் கைது

கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்.தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.
செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர் கைது
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள கோழிக்கட்டானூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுபையன் மகன் அய்யனார் (34 ). இவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை வெள்ளைத் தாளில் அச்சிட்டு அதனை தனது செல்போனில் படம் பிடித்து பொது மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி பரிசு விழுந்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி விற்பனை செய்து கொண்டிருந்தவரை தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு செல்போனும், ரூ.500 பறிமுதல் செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com