search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lottery seller"

    • கம்பம் தெற்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • சோதனையில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் தெற்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது கேரள மாநில டோக்கன் லாட்டரிகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவா (வயது 48) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.

    பல்லடம் :

    வாட்ஸ்அப்' வாயிலாக, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில், அடைத்தனர். பல்லடம் அருகே கணபதிபாளையம் - சென்னிமலைபாளையத்தை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 55. இவர், கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், 'வாட்ஸ் அப்' மூலம் கேரள மற்றும் மூன்றாம் நெம்பர் லாட்டரி விற்பனையும், 'கூகுள் பே' வாயிலாக, பண பரிவர்த்தனையும் மேற்கொண்டது தெரிந்து, இதனையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2 மொபைல் போன், கேரள லாட்டரி, 20 மற்றும் 1,300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வங்கி கணக்கையும் போலீசார் முடக்கினர். 

    • பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • செல்போன் மற்றும் ரொக்கம் ரூ,360 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில், ஆன்லைன் மூலமாக லாட்டரி விற்பனை நடந்து வருவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்தப் பகுதியில் செல்போன் மூலம் சிலருக்கு லாட்டரி எண்களை கூறி, ஆன்லைன் மூலம் லாட்டரி நடத்திய மயிலாடுதுறையை சேர்ந்த தம்பு சாமி என்பவர் மகன் முத்துலிங்கம்( வயது 32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் ரொக்கம் ரூ,360 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டு திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கேரளா லாட்டரி திருட்டுத்தனமாக விற்பனை செய்த பாரப்பாளையம் மண்ணரையை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி அருகே உள்ள கூலிபாளையம் நான்கு ரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா காருண்யா மூன்று இலக்க லாட்டரி சீட்டு திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அந்த பகுதியில் சோதனை மேற்கொண்ட ஊத்துக்குளி போலீசார், கேரளா லாட்டரி திருட்டுத்தனமாக விற்பனை செய்த பாரப்பாளையம் மண்ணரையை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • ரூ.1,86,400 மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே குமுளி தமிழக பஸ்நிலைய பகுதியில் லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்த போது குமுளியில் இருந்து தமிழக பகுதிக்கு லாட்டரி கடத்தியது தெரியவந்தது.

    மேலும் அந்த நபர் அனுமந்தன்பட்டியை சேர்ந்த திவாகரன்(22) என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து ரூ.1,86,400 மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். லாட்டரி சீட்டு தமிழகத்தில் விற்பது குற்றமாகும்.

    மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளனர்.

    ×