தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்றவர் கைது

89 லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்றவர் கைது
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் மணி.இவரது மகன் முத்துக்குமரன் (வயது 42).

இவர் பொன்னேரி கூட்ரோட்டில் உள்ள டீக்கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்று வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமரனிடம் இருந்து 89 லாட்டரி சீட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தார்.

மேலும் முத்துக்குமரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com