தென்காசியில் லாட்டரி விற்ற பெண் கைது

சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த முருகாத்தாளை போலீசார் விசாரித்தனர்.லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகாத்தாளை போலீசார் கைது செய்தனர்.
தென்காசியில் லாட்டரி விற்ற பெண் கைது
Published on

நெல்லை:

தென்காசி அருகே உள்ள இலத்தூர் மந்தை தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி முருகாத்தாள் (வயது 52). இவர் சம்பவ த்தன்று தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் முருகாத்தாளை விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பணம், 48 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com