search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன்"

    • புதிய அங்காடியை திறந்து வைத்து, ரேசன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்
    • கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் கிருஷ்ணாபுரம்.

    கள்ளிமேடு, வையாபு ரிதோப்பு பகுதி கிராமமக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக பகுதிநேர அங்காடி துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன் தலைமை வகித்தார்.

    பாபநாசம் வட்ட வழங்கு அலுவலர் சிவக்குமார். கூட்டுறவு சார்பதிவாளர் ஆனந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய கவுன்சிலர் பி.எஸ்.குமார் கலந்து கொண்டு புதிய அங்காடியை திறந்து வைத்து, ரேசன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த பகுதிநேர அங்காடி மூலம் கிருஷ்ணாபுரம். கள்ளிமேடு வையாபுரிதோப்பு பகுதியை சேர்ந்த 265 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

    நிகழ்ச்சியில் தனி வருவாய் ஆய்வாளர் அஜீத்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதாபிரகலாதன், பூண்டி கூட்டுறவு சங்க செயலர் பிரிதிவிராஜ், ஊராட்சி செயலர் அசோக் மற்றும் அங்காடி ஊழியர்கள்.

    கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்
    • டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளும் போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தக்கலை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் வந்தது.இதையடுத்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் வருவாய் ஆய்வாளர் சாமினி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு தக்கலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தினார்.

    ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து துரத்தினார்கள்.சினிமா படப்பாடியில் சேசிங் சம்பவம் நடந்தது.சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று விளவங்கோடு ஞாரான்விளை பகுதியில் வைத்து காரை மடக்கினார்.அப்போது டிரைவர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குளச்சல் அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் யாருடையது ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சினிமா படம் பாணியில் நடந்த இந்த சேசிங் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்க ளுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய, சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுகிறது.
    • மொத்த ரேசன் கார்டு எண்ணிக்கை 11 லட்சத்து 794 ஆக அதிகரித்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தி யாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சா்க்கரை, மண்எண்ணைய் மற்றும் பருப்பு, சமையல் எண்ணைய் போன்றவை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. அத்தியாவசியமான பொருட்களின் விலை உயா்வில் இருந்து ஏழை ,எளிய மக்களை பாதுகாக்கவும், நுண்ணூட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்க வும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்க ளுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய, சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுகிறது. புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா்கள் தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு ரேசன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது.

    அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 955 புது ரேசன் கார்டு வரப்பெற்று 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சம் வாழப்பாடி தாலுகாவுக்கு 113 ரேசன் கார்டுகள் வரப்பெற்றுள்ளன. சேலம் - 110, மேட்டூர்-94, ேசலம் மேற்கு-88, காடையாம்பட்டி-75, ஓமலூர்-74, சேலம் தெற்கு-71, சங்ககிரி -64, எடப்பாடி-62, குறைந்தபட்சம் ஏற்காடு-8 என வரப்பெற்ற ரேசன் கார்டுகள் அந்தந்த தாலுகாவுக்கு தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளன.

    விண்ணப்பித்த பயனாளி கள், சம்பந்தப்பட்ட தாலு காவுக்கு சென்று, புது ரேசன் கார்டை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். நடப்பாண்டு இதுவரை 18 ஆயிரத்து 895 புது ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் சேர்த்து தற்போது மாவட்டத்தில் மொத்த ரேசன் கார்டு எண்ணிக்கை 11 லட்சத்து 794 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ரேசன் கடை கட்டும் கட்டிட பணி ெதாடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஒன்றிய தலைவர் ஜே.பி.ரவிச்சந்திரன் ரேசன் கடை கட்டும் கட்டிட பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜமீன் இளம்பள்ளி ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையத்தில் ரேசன் கடை கட்டும் கட்டிட பணி ெதாடங்கி நடைபெற்று வருகிறது. அதுபோல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கபிலர்மலை ஒன்றிய தலைவர் ஜே.பி.ரவிச்சந்தி ரன், நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு வருகிறார் . அதேபோல் ஜமீன் இளம் பள்ளி ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் ரேசன் கடை கட்டும் கட்டிட பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். அப்போது ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு ரேசன் கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கணேசன் கூறியதாவது:

    பொது வினியோக திட்டத்துக்கு தனிதுறை தேவை. நிறுத்தி வைக்கப்பட்ட 17சதவீத அகவிலைப்படி வழங்குவதோடு அரசு ஊழியர்களை போன்று 31சதவீத அகவிலைப்படி வேண்டும்.

    ரேஷன் பொருட்களை சரியான எடையில் வழங்க, அதை பொட்டலமாக வினியோகித்தல் என்பன உள்பட 11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 7-ந் தேதி முதல், 9-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்தம் செய்கிறோம். அத்துடன் மாவட்ட தலைநகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். வரும் 10ந் தேதி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். இதனால், நாளை முதல் 9-ந் தேதி வரை ரேஷன் மூடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநகர செயலாளர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் ராஜி, மாவட்ட துணைத்தலைவர் நாகேந்திரன் உடன் இருந்தனர். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×