search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் ரேசன் கார்டு 11 லட்சமாக உயர்வு
    X

    சேலம் மாவட்டத்தில் ரேசன் கார்டு 11 லட்சமாக உயர்வு

    • ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்க ளுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய, சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுகிறது.
    • மொத்த ரேசன் கார்டு எண்ணிக்கை 11 லட்சத்து 794 ஆக அதிகரித்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தி யாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சா்க்கரை, மண்எண்ணைய் மற்றும் பருப்பு, சமையல் எண்ணைய் போன்றவை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. அத்தியாவசியமான பொருட்களின் விலை உயா்வில் இருந்து ஏழை ,எளிய மக்களை பாதுகாக்கவும், நுண்ணூட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்க வும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்க ளுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய, சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுகிறது. புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா்கள் தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு ரேசன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது.

    அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 955 புது ரேசன் கார்டு வரப்பெற்று 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சம் வாழப்பாடி தாலுகாவுக்கு 113 ரேசன் கார்டுகள் வரப்பெற்றுள்ளன. சேலம் - 110, மேட்டூர்-94, ேசலம் மேற்கு-88, காடையாம்பட்டி-75, ஓமலூர்-74, சேலம் தெற்கு-71, சங்ககிரி -64, எடப்பாடி-62, குறைந்தபட்சம் ஏற்காடு-8 என வரப்பெற்ற ரேசன் கார்டுகள் அந்தந்த தாலுகாவுக்கு தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளன.

    விண்ணப்பித்த பயனாளி கள், சம்பந்தப்பட்ட தாலு காவுக்கு சென்று, புது ரேசன் கார்டை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். நடப்பாண்டு இதுவரை 18 ஆயிரத்து 895 புது ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் சேர்த்து தற்போது மாவட்டத்தில் மொத்த ரேசன் கார்டு எண்ணிக்கை 11 லட்சத்து 794 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×