search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி"

    • 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்தனர்
    • களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு கடத்தல்

    கன்னியாகுமரி :

    தமிழக-கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று தனிப்பிரிவு போலீசார் களியக்காவிளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக மீன் ஏற்றி செல்லும் கூண்டு கட்டிய டெம்போ ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த டெம்போவை நிறுத்து மாறு சைகை காட்டியும் டெம்போ நிற்காமல் சென்று விட்டது.

    அந்த வாகனத்தை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மேக்கோடு பகுதியில் வைத்து துரத்தி பிடித்தனர். ஆனால் டிரைவர் வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும், அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாலுகா அலுவல கத்திலும் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய ஓட்டுநர் யார்? ரேஷன் அரிசி கடத்தலில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோ ணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி
    • கல்குளம்

    கன்னியாகுமரி :

    கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் பணியா ளர்கள், பார்வதிபுரம் பகுதி யில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மினி வேனை நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் அதிவேகமாக சென்றது.

    உடனே அதிகாரிகள் அந்த வேனை விரட்டிச் சென்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று தோட்டியோடு என்னுமி டத்தில் வேனை மடக்கினர். அப்போது வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    பின்னர் அதிகாரிகள் வேனை சோதனை செய்த னர். அப்போது அதில் நூதனமாக மறைத்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தப் படுவது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    4 டன் ரேஷன் அரிசி வேனில் இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி, தமிழ் நாடு அரசு உணவு பொருள் வாணிப கழக உடையார் விளை கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வேன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரேசன் அரிசி கடத்தியவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார்.
    • சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வேலூர் நோக்கி சென்ற லாரியை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வட்ட வழங்கல் தாசில்தார் இந்துமதி மற்றும் அதிகாரிகள் நிறுத்த முயன்றனர்.

    ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியை காரில் விரட்டிச்சென்று ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அதில் சோதனை செய்தபோது 200 மூட்டைகளில் 9 டன் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணலி புதுநகர் அருகே உள்ள கடப்பாக்கம் பகுதியில் சாலையோரம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் கடந்த 2 நாட்களாக கேட்பாரற்று நின்றது. இதுபற்றி அறிந்ததும் மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கல்யாணசுந்தரம், பபிதா ஆகியோர் லாரிகளில் மூட்டைகளாக ரேசன் அரிசி இருப்பது தெரிந்தது.

    மர்ம நபர்கள் ரேசன் அரிசி கடத்தி வந்துவிட்டு போலீசாரின் சோதனைக்கு பயந்து வேன்களை இங்கு நிறுத்தி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. 1200 கிலோ ரேசன் அரிசியுடன் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 500 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன் ரெயில் நிலையம் அருகே கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் ஜங்களாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் பைக்கில் இருந்த 2 பேர் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். சந்தேகம் அடைந்த போலீசார் பைக்கில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.

    அதில் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்னர் பைக்கையும், ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள்
    • 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை அருகே நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

    ரேசன் அரிசி கடத்தல்

    குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் ரெயிலில் பொதுப் பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சீட்டுக்கு அடியில் 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அதனை சோதனை செய்தபோது 1 டன் ரேசன் அரிசி இருந்தது.

    விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமதி (வயது 38), கிருஷ்ணவேணி (37) சரவணன் (30) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிந்தது.

    குற்ற புலனாய்வுத் துறை போலீசார் அரிசி மூட்டைகளையும், அதனை கடத்தி வந்தவர்களையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • குளச்சல் பீச் சந்திப்பில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பதாக தகவல்
    • சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 400 கிலோ ரேசன் அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட ரேசன் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    அப்போது குளச்சல் பீச் சந்திப்பில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அங்கு சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 400 கிலோ ரேசன் அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

    • நுகர்பொருள் வாணிபக கிடங்கில் ஒப்படைத்தனர்
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வேலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் பள்ளிகொண்டா சாவடி பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    ரங்கநாதர் நகர் பகுதியை சார்ந்த ஜோதி என்பவர் வீட்டில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் 3500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து போலீசார் 3,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து குடியாத்தம் நுகர்பொருள் வாணிபக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தபோது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் 216 மூட்டை ரேசன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.அதனை பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தர்மபுரி சாலையில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த, மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தலா, 50 கிலோவில், 14 மூட்டைகளில், 700 கிலோ அரிசி இருந்தது. விசாரணையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா செட்டி அல்லி அடுத்த கம்மாளப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது45), என்பதும் தெரியவந்தது.

    அவர் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வாங்கி, அதை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.

    • சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர்.
    • கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் இருந்து சொகுசு காரில் கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர். போலீசாரை கண்டதும் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகரில் ரைஸ்மில்லில் 2800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உரிைமயாளர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    அண்மைகாலமாக விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது. 


    பொதுமக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு ரேசன் அரிசியை வாங்கும் கடத்தல்காரர்கள் அதனை அரிசி ஆலைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது. 

    இதனை தடுக்க மாவட்ட  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்ெகாண்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள ரைஸ்மில்லில் ரேசன் அரிசி பதுக்கி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து போலீசார் அந்த ஆலையில் சோதனை நடத்தினர்.


    அப்போது அங்கு 56 மூடைகளில் 2800 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை பாலிஷ் செய்து கூடுதல் விலைக்கு விற்க முயற்சித்துள்ளனர். ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஆலை உரிமையாளர் முனியசாமியை கைது செய்தனர்.
    ×