காஞ்சிபுரம் அருகே லாரியில் கடத்திய 216 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரம் அருகே லாரியில் கடத்திய 216 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
Published on

காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தபோது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் 216 மூட்டை ரேசன் அரிசி கடத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.அதனை பறிமுதல் செய்தனர்.

ரேசன் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com