search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகா"

    • வயிறு பகுதி தசைகள் இறுக்கம் நீங்கி, நெகிழ்வடைகின்றன.
    • தொடை, கணுக்கால் பகுதிகளில் வலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    செய்முறை: மேல்நோக்கி படுத்துக் கொள்ளவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகள் உடம்பை ஒட்டி இருக்கட்டும். உள்ளங்கைகளால் தரையை நன்கு அழுத்தியபடி மூச்சை இழுத்துக்கொண்டே, இடது காலை முட்டி மடங்காமல் சற்று உயர்த்துங்கள். தரையில் இருந்து கால் ஒன்றரை அல்லது 2 அடி உயர்ந்திருக்கட்டும். அதாவது, சுமார் 45 டிகிரி கோணத்தில் கால் இருக்கட்டும். 1-3 வரை எண்ணவும். மூச்சை விட்டுக்கொண்டே, பொறுமையாக இடது காலை கீழே இறக்கவும். தடாலென்று காலை கீழே விடக்கூடாது.

    ஒரு முறை நன்கு மூச்சை இழுத்து விடவும். அடுத்து, அதேபோல, முட்டி மடங்காமல் வலது காலை உயர்த்தவும். 1-3 வரை எண்ணி, மூச்சை விட்டுக்கொண்டே, காலை கீழே இறக்கவும்.

    ஒரு முறை நன்கு மூச்சை இழுத்து விடவும். அடுத்து, கால்களை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். முட்டி மடங்காமல் இரு கால்களையும் சற்று உயர்த்துங்கள். தரையில் இருந்து கால்கள் ஒன்றரை அல்லது 2 அடி உயர்ந்திருக்கட்டும். கால் விரல்கள் நம்மை நோக்கியும், குதிகால் வெளி நோக்கியும் இருக்கட்டும். 1-5 வரை எண்ணவும். மெல்ல, மூச்சை விட்டுக்கொண்டே, கால்களை கீழே இறக்கி ரிலாக்ஸ் செய்துகொள்ளவும். இவ்வாறு இந்த பயிற்சியை 3 முறை செய்யவும்.

    பயன்கள்: வயிறு பகுதி தசைகள் இறுக்கம் நீங்கி, நெகிழ்வடைகின்றன. கால், தொடை, இடுப்பு பகுதிகள் இழுக்கப்படுவதால் முதுகுத்தண்டு உறுதியாகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. தொடை, கணுக்கால் பகுதிகளில் வலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    அடி வயிற்றில் அதிகம் இருக்கும் தசைகள் குறையும். கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும். சிறுநீர்ப்பை தூண்டப்பட்டு தொந்தி இருந்தால் குறையும். இளம் மாணாக்கர்களுக்கு இது நல்லதொரு பயிற்சி. நினைவாற்றல் தூண்டப்படும்.

    • சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
    • மாணவர்கள் யோகா செய்வதன் நன்மைகள் குறித்து கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

    விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் கிறிஸ்டி, பதிவாளர் அப்துல் கனிகான், உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், ராஜன், முத்துலட்சுமி, வீரக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுக்கு யோகாவின் நன்மையைப் பற்றியும், தினசரி வாழ்வில் அதன் அவசியத்தை பற்றியும் பல்கலைக்கழக இணை துணை வேந்தர் முனைவர் உதயகுமார் சிறப்புரையாற்றினார்.

    • குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தலைமையில் யோகா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது
    • யோகா பயிற்சியை பயிற்சியாளர் முருகன் அனைவருக்கும் பயிற்சி அளித்தார்.

    குளித்தலை,

    குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சார்பு நீதிபதி சண்முகக்கனி தலைமையில் யோகா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் நீதிபதிகள் பிரகதீஸ்வரன், பாலமுருகன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாகுல்ஹமீது, வழக்கறிஞர் சங்க செயலாளர் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் நாகராஜன், மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். யோகா பயிற்சியை பயிற்சியாளர் முருகன் அனைவருக்கும் பயிற்சி அளித்தார்.

    • கரூர் பரணி பார்க் கல்வி குழுமத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டபட்டது
    • இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார்.

    கரூர்,

    பரணி பார்க் சாரணர் மாவட்டத்தின் சார்பாக 9-வது சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரங்கன், சுபாஷினி முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் ராமசுப்பிரமணியன் பேசுகையில் "நமது தாய் திருநாட்டின் பாரம்பரிய பெருமையையும், உலக அமைதியையும் வலியுறுத்தும் வகையில் பரணி பார்க் சாரணர் மாவட்டத்தின் சாரண மாணவர்கள் 5000 பேர் உலக யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்" என்றார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரணி பார்க் சாரணர் மாவட்ட உதவி செய்திருந்தனர். ஆணையர்கள் சுதாதேவி, சேகர் மற்றும் மாவட்டச் செயலர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெரம்பலூர் கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டப்பட்டது
    • . இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் சார்பில் நடந்த சர்வதேச யோகா தின விழாவிற்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து, மாணவர்களுடன் யோகா பயிற்சி செய்தார். கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ், இயக்குநர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா பயிற்றுனர் கிருஷ்ணகுமார் தியானம் , விரிச்சாசனம், திரிக்கோனாசனம், பத்மாசனம், பத்மா பர்வதாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், வீராசனம், மகா முத்ராயோகா போன்ற யோகா கலையை செய்முறை விளக்கமளித்து பயிற்சி அளித்தார். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் உமாதேவி பொங்கியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் இளங்கோவன் நன்றி கூறினார்.

    பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் யோகா மையம், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரோவர் கல்வி குழுமத்தின் தாளாளர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை தாளாளர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் யோகா கலை குறித்து பேசினர். யோகா மைய ஒருங்கிணைப்பாளர் கீதா, உதவி ஒருங்கிணைப்பாளர் அனிதா ஆகியோர் யோகாவின் சிறப்புக்கள் குறித்து எடுத்துக்கூறி செயல்முறை விளக்கமளித்து பயிற்சி அளித்தனர். இதில் 200க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா அனைவரையும் வரவேற்றார். முடிவில் லெப்டினண்ட் பிரவீன் பெருமாள் நன்றி கூறினார்.

    பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலைக்கல்லூரி கூட்டரங்கில் கல்லூரி மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன், நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மனவளக்கலை மன்ற உதவி பேராசிரியர் பவானி மாணவிகளுக்கு மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து விளக்கி கூறி, யோகா செய்முறை பயிற்சி அளித்தார். இதில் 300க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் சுபலெட்சுமி வரவேற்றார். முடிவில் யோகா ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

    • யோகாவை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
    • தியானம் மன அமைதியை மேம்படுத்துகிறது.

    இந்தியாவில் பதஞ்சலி முனிவரால் தோன்றி வளர்ந்த ஓர் ஒழுக்க நெறி யோகா.

    உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது.

    மன அழுத்த நிவாரணி

    இளைஞர்கள் பலர் கட்டுடலுக்காக ஜிம்முக்கு செல்கிறார்கள். ஆனால் கட்டுடலுடன் மனதையும் கட்டுப்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது யோகா. இந்த பயிற்சியை செய்ய எந்த ஒரு உபகரணங்களும் தேவையில்லை. மருந்துகள் இல்லாமல் நோயை விரட்டுவது இதன் தனித்துவ குணம். யோகாவில் ஏராளமான ஆசனங்கள் உள்ளன. கல்வியை போல தான் இதுவும் கடல் போன்றது. இருப்பினும் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை அடிப்படை யோகா பயிற்சிகளை செய்தாலே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உழைக்க ஆற்றலை தருகிறது.

    இன்றைய குடும்ப, பணி சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக மாறி இருக்கிறது. மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும் சிறந்த நிவாரணியாக யோகா விளங்குகிறது.

    நேர்மறை எண்ணங்கள்

    எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால் தான் ஒரு செயலை சாதிக்க முடியும் என்பது அனைவராலும் அறியப்பட்ட விஷயம். இந்த நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது. இதை காலப்போக்கில் உணர முடியும் என்பது தான் யோகாவின் ஆச்சரியமான விஷயம்.

    நேர்த்தியான முறையில் வளைந்து பயிற்சி செய்வதன் மூலம் தசைகளும், எலும்புகளும் வலுவடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.

    இன்றைய உலகில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரவலான வியாதியாக உருவெடுத்துள்ளது. யோகாவின் மூலம் இந்த வியாதியை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அனைத்து நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்கவும், சிறந்த தூக்கத்திற்கும் யோகா உதவுகிறது.

    வயது தடை இல்லை

    யோகாவின் அழகு என்னவென்றால், அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு வயது ஒரு தடை இல்லை. உடல் உருவமும் பிரச்சினை இல்லை. இருப்பினும் இளம் வயது முதல் யோகா பயிற்சியை மேற்கொண்டு வந்தால், உடலில் நெகிழ்வு தன்மை அதிகரிக்கும். அதாவது உடலை வில்லாக வளைக்க முடியும்.

    யோகா ரத்த ஓட்ட அமைப்பு, செரிமான செயல்முறை, நரம்பு மற்றும் நாளமில்லா அமைப்புகளை தூண்ட உதவுகிறது. சுவாச பயிற்சிகள் நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது. தியானம் மன அமைதியை மேம்படுத்துகிறது.

    இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை யோகா செய்பவர்களால் உணர முடிகிறது.

    இருப்பினும் சரியான பயிற்சியாளர்களிடம் யோகா ஆசனங்களை கற்றுக்கொள்ள வேண்டும். ஏடாக்கூடமாக செய்து உடலில் சுளுக்கு, தசைநார்கள் கிழிதல் நிலைக்கு ஆளாகி விடக்கூடாது.

    • சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்தது.
    • கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், நாகர்கோவில் மாநகர பகுதியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மூச்சுப் பயிற்சி, பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நெசவாளர் காலனி சமுதாய நலக்கூடம், தம்பத்து கோணம் பகுதியிலும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்களிலும் இன்று மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் கலந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள், பொதுமக்கள் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.

    நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி அருள் முருகன், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய் மற்றும் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கோணம் கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேல் தலைமையில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதுபோல் தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், குளச்சல், தக்கலை, திருவட்டார், மேல்புறம், குழித்துறை, முன்சிறை, கிள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சி இன்று நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    • அருப்புக்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    அருப்புக்கோட்டை

    உலக யோகா தினத்தை முன்னிட்டு அருப்புக் க்கோட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்லூரியில் யோகா தினம் கொண்டா டப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு மன வளக்கலை மன்றத்தி னர் யோகா பயிற்சியை செய்து காட்டினர்.

    மாணவ-மாணவிகளும் இந்த பயிற்சியில் பங்கேற்ற னர்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர். முத்து தினகரன், முதல்வர் செல்லத்தாய், துணை முதல்வர் பால் ஜாக்குலின் பெரியநாயகம் மற்றும் மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த தலைவர் ஜோதிமணி, முத்து முருகன், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.

    • திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று (21-ந்தேதி) கடைபிடிக்கபடுகிறது.

    இதையொட்டி திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திருவள்ளூர், மணவாளநகர், ஒண்டிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 3 வயது முதல் 70 வயது வரை உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 49 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 30 நிமிடத்தில் 108 யோகாசனங்கள் செய்து சாதனை படைத்தனர். சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட யோகா செய்து நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

    இதில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் உள்பட பலர் பங்கேற்றனர். யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம்.
    • மது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

    உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம். யோகா என்பது மதம் சார்ந்த பயிற்சி அல்ல. அது, நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான கலை. மேலும் யோகா பயிற்சி செய்வதால் மாணவர்கள் கவனச்சிதறல் இன்றி கல்வி கற்கலாம்.

    சர்வதேச யோகா தினம்

    இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகாவை, உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி உலகம் முழுவதும் வாழும் மக்கள் பழமை வாய்ந்த யோகாசனங்களை செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும், 2019-ம் ஆண்டு ராஞ்சியிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. யோகா பயிற்சியை ஒவ்வொரு வரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதவை. யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மை தரும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து, அறிவுறுத்தி வருகிறார்.

    மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு நாள் போதும். ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு இவற்றில் எதைத்தேடினாலும்... உலகில் வெற்றி பெற வேண்டும் என்றாலும்... உள்நிலை மாற்றம்தான் நோக்கம் என்றாலும் யோகா பயிற்சிகள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை களைந்து வாழ்வை மிக சுலபமாய் கையாள வழி ஏற்படுத்தி கொடுக்கும்.

    ஞாபக சக்தி...

    யோகா பயிற்சி மேற்கொள்வதால், முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது. ஞாபக சக்தி, மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை மேம்படுகிறது. உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன. முதுகு வலி, மன அழுத்தம், பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது. நாள்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வேலை செய்யும் இடத்தில், குழுவாக பணியாற்றும் திறன் மற்றும் தகவல் பரிமாறும் திறன் மேம்படுகிறது. அமைதியும், ஆனந்தமும், நீடித்து நிலைத்திருக்க செய்கிறது.

    தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

    மன அமைதி தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. தினமும் யோகா செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் நீங்குகிறது.

    நோய் நொடியின்றி வாழ ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதோடு தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும்.

    • வெறும் தரையிலோ, கட்டிலின் மீதோ செய்வது சரியானது அல்ல.
    • நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புத்துணர்வு கிடைக்கும்.

    மேலோட்டமாகப் பார்த்தால் சூரியனை நோக்கி கையெடுத்துக் கும்பிடும் எளிதான முறையாகவே தோன்றும். ஆனால், இதற்குப் பின்னால் பல நுட்பமான வழிமுறைகள் இருக்கின்றன. சூரிய உதயம், சூரிய அஸ்தமன வேளைகளில் பயிற்சி செய்வதனால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். சூரியனைப் பார்த்தவாறு பயிற்சி செய்ய விரும்பினால் அதிகாலை வேளைதான் சிறந்தது. சூரிய உதயத்துக்குப் பிறகு சூரியனை நேரடியாகப் பார்த்து பயிற்சி செய்வது கண்களைப் பாதிக்கும்.

    உடலை இறுக்காத, மென்மையான உடைகள் அணிந்து கொள்வது அவசியம். உணவுக்குப் பிறகு 4 மணி நேரமும், சிற்றுண்டி சாப்பிட்டிருந்தால் 2 மணி நேர இடைவெளியும் அவசியம். எந்த உடற்பயிற்சியையும் காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்வதே சரியானது. சூரிய நமஸ்காரமும் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்யப்பட்டால்தான் நாம் எதிர்பார்க்கிற நன்மைகளைத் தரும். தவிர்க்க முடியாத காரணங்களால் அறைக்குள் பயிற்சி செய்வதாக இருந்தால் காற்றோட்டம் உள்ள அறையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மேடு பள்ளம் இல்லாத தரையில் ஜமுக்காளம் விரித்து, அதன்மேல் பயிற்சி செய்ய வேண்டும். வெறும் தரையிலோ, கட்டிலின் மீதோ செய்வது சரியானது அல்ல. கண்ணாடி மற்றும் ஆபரணங்கள் பயிற்சி யின் போது சிரமங்களை உருவாக்கும் என்பதால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. உடல் சோர்வு இருக்கும்போதோ, நீண்டதூரப் பயணம் செய்த பிறகோ பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    தலைவலி, காய்ச்சல், மாதவிலக்கு காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், இதயநோய், முதுகுவலி, கழுத்துவலி உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமல் செய்யக் கூடாதுஎலும்பு, தசை, சுவாசம், ரத்தம், ஜீரணம், கழிவு உறுப்புகள், நரம்பு, நாளமில்லா சுரப்பிகள் ஆகியவை சீராக இயங்க சூரிய நமஸ்காரம் பெரிதும் உதவி செய்கிறது. இதனால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புத்துணர்வு கிடைக்கும்.

    சருமம் பொலிவு பெறும். எடை சீராகும். தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டுகள் வலுவடையும். தண்டுவடம் தளர்வடைவதால் முதுகுவலி வராது. நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும். உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும். சுய கட்டுப்பாடு உண்டாகும். நுரையீரல் விரிவடையும், குதிகால் நரம்பு, பாதம், தொண்டை, கழுத்து ஆகிய இடங்கள் வலிமை பெறும். மலட்டுத்தன்மை நீங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். மந்த நிலையைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். உடல் கழிவுகள் வெளியேறும். சூரிய நமஸ்காரம் செய்த பின் செய்கிற பிராணாயாமங்களின் பலன் அதிகரிக்கும்... இதுபோல் எத்தனையோ பலன்கள் உள்ளன!

    இந்த 12 நிலைக்குப் பிறகு யோகாசனங்கள், பிராணாயாமம் செய்வது அபரிமிதமான பலன்களைத் தரும். சூரிய நமஸ்காரம் பற்றிய விழிப்புணர்வுக்காகவும், சூரிய நமஸ்காரம் கற்றுக் கொண்ட பிறகு ஒரு வழிகாட்டியாகவும் உங்களுக்கு உதவவே இதில் விரிவாக விளக்கியிருக்கிறோம். சூரிய நமஸ்காரம் உள்பட எல்லா யோகா பயிற்சிகளையும் தகுதிவாய்ந்த ஒரு யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி செய்வதே நல்லது. குறைந்தபட்சம் சூரிய நமஸ்காரத்தை ஒருமுறையாவது குருவின் வழிகாட்டுதலின்படி கற்றுக் கொண்டு, அதன்பிறகு பயிற்சி செய்யுங்கள்!

    • ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.
    • யோகா பயிற்சிகளை வெறும் தரையில் தான் செய்ய வேண்டும்.

    நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் பெற்று கொள்ள பயன்படும் கலையே யோகா ஆகும். யோகா எனப்படுவது ஒரு கலை, ஒரு அறிவியல் மற்றும் வாழ்க்கை முறையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.

    நாம் வயது முதிரும் பொழுது நம் உடல் உறுப்புகளின் இயக்கங்கள் யாவும் சிறிது, சிறிதாக குறைந்து கொண்டே வந்து இறுதியில் சீர்கேடு அடைகின்றன. வயது முதிர்வதை நம்மால் ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஆனால் யோகா பயிற்சியை மேற்கொள்வதால் முதுமையில் ஏற்படக்கூடிய உடல் தளர்ச்சி தடுக்கிறது.

    நாம் ஒழுங்காக முறையோடு யோகா பயிற்சியை மேற்கொள்ளும் போது நம்முடைய உடல் சக்தி மற்றும் மனோ சக்தியை சிறிதும் இழக்காமலே நம்மால் முதுமையிலும் வாழ முடியும்.

    யோகாவினால் ஏற்படும் விளைவுகள் ஏனைய விளையாட்டுகளின் மூலமாகவும், உடற் பயிற்சியின் மூலமாகவும் ஏற்படும் விளைவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    ஏனைய பிற விளையாட்டுகள் நம் உடல் தசைகள் வலிமை பெறுவதற்கு மட்டுமே பயன்பெறுகின்றன. ஆனால் யோகா சமயத்திற்கேற்ப வளைந்து கொடுக்கக் கூடிய ஆரோக்கியம் உள்ள உடலை உருவாக்குகிறது. யோகா பயிற்சி உடலில் சக்தியை சேமிக்கிறது. யோகாவில் பயிலும் அநேக ஆசனங்கள் நமது உள்ளுறுப்புகள் செவ்வனே செயல்புரிவதற்கு பயன்படுகின்றன. அவை தசைகள் வலுப்பெறவும், எலும்புகள் உறுதியாக இருக்கவும் உதவுகின்றன. இதயம் வலுவடையவும், உடலினுள் பாயும் ரத்த ஓட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் உதவி செய்கிறது.

    உடல் அழகை கெடுக்கும் தொப்பையை குறைக்கிறது. உடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. மூளைக்கு அதிக அளவில் ஆக்சிஜன் செல்வதற்கு பயன்படுகிறது.

    இதன் மூலம் மனம் விழிப்புணர்வு பெறுகிறது. உணர்ச்சிகள் சமநிலைப்படுத்தப்படுகிறது. உடலின் எல்லா பகுதிகளுக்கும் போதுமான ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது.

    யோகா பயிற்சி செய்வதற்கு சில விதிமுறைகள்:-

    யோகா பயிற்சி செய்வதற்கு முன்பாக இளஞ் சூடான நீரில் குளிக்கக்கூடாது. சுத்தமான தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. அப்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். உடலின் கழிவுகளை அகற்றிய பிறகே பயிற்சி செய்ய வேண்டும். வயிறு புடைக்க உண்ட பிறகு இந்த பயிற்சிகளை செய்யக் கூடாது.

    யோகா பயிற்சிகளை வெறும் தரையில் தான் செய்ய வேண்டும். கட்டில் மீது அமர்ந்து செய்யக் கூடாது. பயிற்சி செய்யும் இடம் காற்றோட்ட வசதி உள்ளதாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்.

    பெண்கள் தலைமூடி நீளமாக இருப்பின் அதை மடித்து கட்டிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் முறையாக பயிற்சி செய்ய வேண்டும். இந்த ஒழுங்குமுறை இல்லாவிட்டால் நாம் ஒரு போதும் வெற்றி பெறமுடியாது. யோகா பயிற்சிகளை முறைப்படி கற்றுக்கொண்டு நம் உடல் ஆரோக்கியத்தை பேணுவோம்.

    ×