என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூர் பரணி பார்க் கல்வி குழுமத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
- கரூர் பரணி பார்க் கல்வி குழுமத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டபட்டது
- இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார்.
கரூர்,
பரணி பார்க் சாரணர் மாவட்டத்தின் சார்பாக 9-வது சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரங்கன், சுபாஷினி முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் ராமசுப்பிரமணியன் பேசுகையில் "நமது தாய் திருநாட்டின் பாரம்பரிய பெருமையையும், உலக அமைதியையும் வலியுறுத்தும் வகையில் பரணி பார்க் சாரணர் மாவட்டத்தின் சாரண மாணவர்கள் 5000 பேர் உலக யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்" என்றார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரணி பார்க் சாரணர் மாவட்ட உதவி செய்திருந்தனர். ஆணையர்கள் சுதாதேவி, சேகர் மற்றும் மாவட்டச் செயலர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






