search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீராங்கனைகள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.

    போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.

    • 17 வயதுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • வருகிற 6-ந் தேதி வரை மின்னொலி கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    கேலோ இந்தியா, கூடைப்பந்து பெடரேஷன் ஆஃப் இந்தியா , தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான அஸ்மிதா இந்தியன் உமன் லீக் கூடைப்பந்து போட்டி நேற்று மாலை தஞ்சாவூர் அன்னை சத்தியா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் எஸ்.எஸ். ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    செயலாளர் கதிரவன், பொருளாளர் சதீஷ் ஆனந்த் , துணைத் தலைவர்கள் ஜவஹர் பாபு, டாக்டர் நியூட்டன், சந்தோஷ் குமார், கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக இந்திய அணி வீராங்கனைகள் தர்ஷினி, பார்த்திபாப்ரியா, மோனிகா ஜெயசீலி, கிருஷ்மிகா, நடுவர் பச்சைய ப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் வரவேற்றார்.

    இதில் தஞ்சை ,கும்பகோணம், பட்டுக்கோட்டையில் இருந்து தலா 2 பெண்கள் அணிகள் வீதம் 6 அணிகள் கலந்து கொண்டனர். 17 வயதுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    முதல் போட்டியில் தஞ்சை தூய வளனார் பள்ளி அணியும், பட்டுக்கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதினர். போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து வருகிற 6-ம் தேதி வரை மின்னொலி கூடை பந்து போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு ,கோப்பைகள் வழங்கப்படும்.

    இந்நிகழ்வில் இணை செயலாளர்கள் மனோகரன், முருகானந்தம், துரைராஜூ ரமேஷ் குமார், மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் பாபு, மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்வாணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்த், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் தூய இதய மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

    தொடர்ந்து இன்றும் கூடைபந்து போட்டி நடைபெறும்.

    • சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்தது.
    • கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், நாகர்கோவில் மாநகர பகுதியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மூச்சுப் பயிற்சி, பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நெசவாளர் காலனி சமுதாய நலக்கூடம், தம்பத்து கோணம் பகுதியிலும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்களிலும் இன்று மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் கலந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள், பொதுமக்கள் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.

    நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி அருள் முருகன், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய் மற்றும் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கோணம் கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேல் தலைமையில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதுபோல் தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், குளச்சல், தக்கலை, திருவட்டார், மேல்புறம், குழித்துறை, முன்சிறை, கிள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சி இன்று நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    • வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
    • 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டமா வட்ட கிரிக்கெட் சங்க, மேலாளர், வேல்முருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி, அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.

    1999, மே 14ல் அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், 2010, மே, 14 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்; அதாவது, 13 முதல், 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.பிறப்புச் சான்றிதழ், ஆதார் அல்லது பாஸ்போர்ட் நகல், போட்டோவுடன் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். நாளை (13ம் தேதி)மாலை, 6:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். நாளை மறுநாள் (14ம் தேதி) வீராங்கனைகள் தேர்வு நடக்கும்.தேர்வு நடக்கும் நாளில், தங்கள் கிரிக்கெட் உடையில் வர வேண்டும். ஷூ, சீருடை முக்கியம். தேர்வுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு பயிற்சி தரப்படும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

    • நீதி கேட்டு போராடும் அந்த வீராங்கனைகளும் எங்களது மகள்களை போன்றவர்கள் தான்.
    • எதற்கும் கலங்க வேண்டாம், உங்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.

    அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், தில்லியில் நீதி கேட்கும் மகள்கள், தமிழகத்தில் இருந்து ஆதரவு தரும் தாய்மார்கள் என்ற மவுன அறவழி போராட்டம் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    தஞ்சை ரெயிலடியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டு தங்களது கண்களில் கருப்புத்துணி கட்டி தில்லியில் போராடும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில்:-

    ஒன்றுபட்ட இந்தியாவில் நீண்ட நாட்களாக நீதி கேட்டு போராடும் அந்த வீராங்கனைகளும் எங்களது மகள்களை போன்றவர்கள் தான்.

    போராடும் நாங்கள் பெறாத அந்த பிள்ளைகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு தாய்மார்கள் இருக்கிறார்கள், எதற்கும் கலங்க வேண்டாம், உங்களுக்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் என்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் தடகள பயிற்சி மையம்
    • பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட விளை யாட்டு அலுவலர் ராஜேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், விளையாடு இந் தியா (கேலோ இந்தியா) திட்ட நிதி உதவி மூலம், தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாடு இந்தியா-மாவட்ட மையம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் சுமார் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப் பட்டு அவர்களுக்கு தின சரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த மையத்தில் பயிற் சியாளராக தேசிய அள வில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட தடகள வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள் ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாக வும், தற்போது குமரி மாவட் டத்தில் வசிப்பவராகவும் இருக்கவேண்டும். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட் டிகளில் பதக்கம் வென் றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனி யர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருக்கவேண்டும். இது நிரந் தர பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும்.

    இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலு கையோ, நிரந்தர பணியோ கோர இயலாது. தகுதி உடையோர் தங்களது விண்ணப்பத்தை நாகர் கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத் தில் 31.3.2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு, நாகர்கோ விலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டு திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங் கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    ×