search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 வீரர், வீராங்கனைகள் சேர்ப்பு
    X

    100 வீரர், வீராங்கனைகள் சேர்ப்பு

    • நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் தடகள பயிற்சி மையம்
    • பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட விளை யாட்டு அலுவலர் ராஜேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், விளையாடு இந் தியா (கேலோ இந்தியா) திட்ட நிதி உதவி மூலம், தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாடு இந்தியா-மாவட்ட மையம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் சுமார் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப் பட்டு அவர்களுக்கு தின சரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த மையத்தில் பயிற் சியாளராக தேசிய அள வில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட தடகள வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள் ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாக வும், தற்போது குமரி மாவட் டத்தில் வசிப்பவராகவும் இருக்கவேண்டும். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட் டிகளில் பதக்கம் வென் றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனி யர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருக்கவேண்டும். இது நிரந் தர பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும்.

    இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலு கையோ, நிரந்தர பணியோ கோர இயலாது. தகுதி உடையோர் தங்களது விண்ணப்பத்தை நாகர் கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத் தில் 31.3.2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு, நாகர்கோ விலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டு திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங் கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    Next Story
    ×