search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு வங்காளம்"

    மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்க்ளா’ என மாற்றம் செய்து அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #WestBengal #Bangla
    கொல்கத்தா:

    ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாக பிரிக்கப்பட்ட வங்காளம், நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின் மேற்கு வங்கம் இந்தியாவுடனும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடனும் இணைக்கப்பட்டன. கிழக்கு வங்கம் பின்னர் பங்களாதேஷ் என தனிநாடாக மாறியது.

    மேற்கு வங்காளத்தின் ஆங்கில மொழியாக்கம் ‘வெஸ்ட் பெங்கால்’ என வருவதால், ஆங்கில அகரவரிசைப்படி மத்திய அரசு கூட்டங்களில் கடைசி இடத்தில் மேற்கு வங்காளத்தின் பிரதிநிதிகள் அமர வைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியால் நீண்ட காலமாக கூறப்பட்டது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் உள்ளிட்ட மிக முக்கிய இடங்களிலும் தங்களது சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பேச கடைசியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும் அவர் கூறி வந்தார்.



    வங்காளத்தின் பாரம்பரியதை மீட்டெடுக்கும் விதமாக மேற்குவங்கத்தின் பெயரை மாற்றப்படும் என அவர் 2011-ம் ஆண்டே அறிவித்தார். அறிவித்த கையோடு, அம்மாநிலத்தின் பெயரை வங்காள மொழியில் ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்தார். ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதன் பிறகு வங்காளத்தில் ‘பங்களா’ என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்று அழைக்கும் பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பி வைத்தது. ஆனால், இதனையும் மத்திய அஅரசு ஏற்கவில்லை.

    இந்நிலையில், மேற்குவங்கத்தின் பெயரை மீண்டும் ‘பங்க்ளா’ என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி வங்க மொழியில் மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘பங்க்ளா’ என்றே அழைக்கும் விதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் அது அரசிதழில் வெளியாகும். அதன்பிறகு மேற்கு வங்கத்தின் பெயர் அதிகாரபூர்வமாக ‘பங்க்ளா’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

    ஆனால், மத்திய அரசு உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் என்று கூறப்படுகிறது.
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விழுந்து விழுந்ததில் 67 பேர் காயமடைந்தனர். #PMModi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் மிண்டாபூரில் இன்று பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவர் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போதே, பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

    இதில், பலர் சிக்கிக்கொண்டனர். உடனே, தனது பிரத்யேக பாதுகாவலர்களிடம் மக்களை பத்திரமாக மீட்குமாறு மேடையில் இருந்தே மோடி உத்தரவிட்டார். 67-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை அடுத்து, நேராக மருத்துவமனைக்கு சென்ற மோடி காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். 
    மேற்கு வங்காளம் மாநிலம் டம் டம் மத்திய சிறைச்சாலையில் உள்ள தனது காதலனுக்காக ஹெராயின் கடத்திய கல்லூரி மாணவியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் பரசாத் பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா மாலாகர்(22). கல்லூரியில் பயின்று வரும் இவர் பாகிராத் சர்கார் என்பவரை காதலித்து வருகிறார். சர்கார் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டம் டம் மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நேற்று மாலை சர்காரை பார்ப்பதற்கு சுஷ்மிதா சென்றார். அப்போது தனது காதலனுக்கு கொடுப்பதற்காக ஹெராயினை கொண்டு சென்றார். அவரை சோதனை செய்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்று பல முறை நடத்தப்பட்ட சோதனைகளில் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள், செல்போன் மற்றும் சமையல் பொருட்கள் கடத்திச் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்படுவர். ஆனால், தனது காதலனுக்கு ஒரு கல்லூரி மாணவி ஹெராயின் கடத்திச் சென்றது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #WestBengallightning
    கொல்கத்தா:

    வடமாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் இடி, மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பல அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்தனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலை மட்டும் மின்னல் தாக்கி 7 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும், வடக்கு 24 பாரகான் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

    மேலும், பான்குருகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை மேற்கு வங்காளம் மாநிலத்தில் மட்டும் மின்னல் தாக்கி 25 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengallightning 
    என்னை கொல்வதற்கு அரசியல் கட்சி சதிதிட்டம் தீட்டி உள்ளது என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பெங்காலி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    முதலில் ஒருவருடைய கேரக்டரை படுகொலை செய்து, பின்னர் அவரை தீர்க்க வேண்டும் என்ற முறையில் சதி நடக்கிறது. நான் மரணத்திற்கு பயப்படுபவள் கிடையாது. என்னை கொலை செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

    அரசியல் கட்சி என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டிஉள்ளது என்பது எனக்கு தெரியும். என்னை கொலை செய்யும் பணி கொடுக்கப்பட்டு உள்ள நபர்கள் என்னுடைய வீடு, அலுவலகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை எல்லாம் உளவு பார்த்துவிட்டார்கள்.

    பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் மற்றும் உளவுத்துறை, வீட்டை மாற்றுமாறு எனக்கு அறிவுரையை வழங்கினர்.

    என்னுடைய மக்களை நான் விரும்புகிறேன் என்றும் அவர்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுவேன். என்னை யாரும் மிரட்டவும் முடியாது. மக்களுக்கான என்னுடைய பணியை தடுக்கவும் முடியாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    ஏற்கனவே அரசியலில் எதையும் எதிர்க்கொள்ள தயாராகிவிட்டேன் என கூறிஉள்ளார் மம்தா பானர்ஜி.
    ×