search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைப்பெரியாறு அணை"

    • போலீசாரின் பல முக்கிய ரகசிய விபரங்கள் போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்தது.
    • போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அலியார், ரியாஸ், அப்துல் சமது ஆகிய 3 பேரும் இந்த தகவல்களை திருடியது உறுதியானது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள கரிமன்னூர் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் அனஸ். இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் குறித்த ரகசிய விபரங்களை போலீஸ் நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டரில் திருடி பயங்கரவாத தொடர்பில் இருந்த ஒரு இயக்கத்துக்கு கொடுத்ததாக புகார் எழுந்தது.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசிய விபரங்களை அனஸ் கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

    மூணாறு போலீஸ் நிலையத்தில் இருந்தும் சில முக்கிய ரகசிய விபரங்கள் பயங்கரவாத இயக்கத்துக்கு கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூணாறு டி.எஸ்.பி. மனோஜூக்கு அப்போதைய எஸ்.பி. கருப்பசாமி உத்தரவிட்டார். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    போலீசாரின் பல முக்கிய ரகசிய விபரங்கள் போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை கடந்த மே மாதம் 15-ந் தேதி தங்களது செல்போனில் பதிவு செய்ததும் கண்டறியப்பட்டது. அதே போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அலியார், ரியாஸ், அப்துல் சமது ஆகிய 3 பேரும் இந்த தகவல்களை திருடியது உறுதியானது.

    இதனையடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கம்ப்யூட்டரில் இருந்த ரகசிய விபரங்களை திருடி பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கியது உறுதி செய்யப்பட்டது. இதில் அலியார் என்பவர் பல மாதங்களாக முல்லைப்பெரியாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர். எனவே இவர் பெரியாறு அணையின் பாதுகாப்பு ரகசியங்கள் குறுத்தும் பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    3 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இடுக்கி மாவட்ட எஸ்.பி.யிடம் டி.எஸ்.பி. மனோஜ் அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து 2 பேர் எர்ணாகுளம் மாவட்டத்துக்கும், ஒருவர் கோட்டயம் மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 146 அடி வரை தேக்கப்படுகிறது.
    • தொடர்மழை காரணமாக வைகை அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் 130.85 அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 133 அடியாகவும், இன்று காலை 135 அடியாகவும் உயர்ந்துள்ளது. 2 நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 146 அடி வரை தேக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 6700 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1867 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 13 ஷட்டர்களுக்கு முன்பு உள்ள தண்ணீர் கடல்போல் காட்சியளிக்கிறது. பகல் பொழுதில் வெயில் அடித்த போதிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அணைக்கு வரும் நீர்வரத்து, மழையளவு, வெளியேறும் கசிவுநீர் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்மழை காரணமாக வைகைஅணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் தற்போதைய நீர்மட்டம் 56.96 அடியாக உள்ளது. வரத்து 1823 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 3046 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 71.34 அடியாகவும், உள்ளது.

    பெரியாறு 52.6, தேக்கடி 21.2, கூடலூர் 3, உத்தமபாளையம் 1.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது.
    • மழை பெய்து வருவதால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர்:

    பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் தேனி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த சில நாட்களாக 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது. குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக உள்ளது. 799 கனஅடி நீர் வருகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் உயரும்பட்சத்தில் குடிநீர் மற்றும் நெல் சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 82.20 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 29.6, தேக்கடி 28.2, கூடலூர் 3.8, உத்தமபாளையம் 0.8., வீரபாண்டி 2.8, அரண்மனைபுதூர் 5.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது.
    • கூடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தேக்கடியில் உள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த நீர் 2 கி.மீ தூரம் உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்று குமுளி மலைப்பாதை அருகே போர்பே அணையில் சேரும். அங்கிருந்து தமிழக பகுதிக்கு மின் உற்பத்திக்காக ராட்சத குழாய் மூலமும், இரைச்சல் பாலம் வழியாகவும் வெளியேற்றப்படும்.

    இந்த அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக நீர்பாசனத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகர், கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு வைகை செயற்பொறியாளர் அன்புச் செல்வன், பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி பொறியாளர் ராஜகோபால் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. வரத்து 88 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 4590 மி.கன அடி.

    வைகை அணை நீர்மட்டம் 54.66 அடி. வரத்து 286 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2664 மி. கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.70 அடி. வரத்து 58 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.44 அடி. வரத்து 15 கன அடி, திறப்பு 6 கன அடி.

    லோயர்கேம்ப், கூடலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணைய சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #MullaiPeriyarDam
    புதுடெல்லி:

    கடந்த மாதம் கேரளாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும், அணை பலவீனமாக இருப்பதாக மீண்டும் கூறியுள்ள கேரள அரசு, நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இவ்வழக்கில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 139.99 அடியாக பராமரிக்கலாம் என துணைக்குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் எனவும், அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இன்று மீண்டும் மனு விசாரிக்கப்பட்ட நிலையில், மனுவில் சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்துவது குறித்து தேசிய பேரிடர் அணைகள் பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கோரிய வழக்கில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை கூட்டி முடிவெடுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Mullaperiyar #MullaperiyarDam
    புதுடெல்லி:

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், திறக்கப்படும் தண்ணீர் இடுக்கி அணைக்கு வந்து சேருகிறது. இடுக்கி அணையும் நிரம்பியுள்ளதால் அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அணையின் பலம் குறித்து கேரள மக்களிடையே அச்சம் நிலவுவதால் அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாக குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என கூறியிருந்தார்.

    இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 143 அடியில் இருந்து குறைக்க கோரி இடுக்கியை சேர்ந்த ரசூல்ராய் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப் பெரியாறு அணை நீர் இருப்பு, நீர் மேலாண்மை தொடர்பாக நாளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கூட்டத்தில், நீர்மட்டத்தை தற்காலிகமாக 139 அடியாக குறைப்பது குறித்து ஆராயுமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

    இது தொடர்பான அறிக்கையை நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.
    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். #MullapperiyarDam #EdappadiPalaniswami #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதையடுத்து 2014, 2015-ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதன்பிறகு போதிய மழைப் பொழிவு இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை.

    அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் அணையின் உயர்ந்தது. நேற்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. நேற்று காலை 6 மணியளவில் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. அதுவே அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் நேற்று இரவு நீர்மட்டம் 137 அடியை தாண்டியது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்கிறது. அந்த அணையும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

    அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் தேக்க கொள்ளளவை குறைக்க வேண்டும் என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம் வகுக்க மத்திய துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கேரளாவை சேர்ந்த ரஸ்ஸல் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘முல்லைப்பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச ஆணையம் நியமிக்க வேண்டும், அந்த அணை காலாவதியாகும் பட்சத்தில் எந்த மாநிலம் புதிய அணையை கட்ட வேண்டும் என்பது குறித்தும், அணை உடைந்தால் அது தொடர்பான இழப்பீட்டை எந்த மாநில அரசு வழங்க வேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பேரிடர் மேலாண்மையை உறுதி செய்யும் வகையிலும் இயற்கை பேரிடரின்போது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    இதனையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் அதே அமைச்சகத்தின் துணைச்செயலாளரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு துணைக்குழு அமைக்கப்பட்டது.

    இதில் மத்திய பேரிடர் மேலாண்மைத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின்துறை, தொலைதொடர்பு துறை, வேளாண்மை துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக, கேரள அரசு அதிகாரிகள் இடம்பெற்றனர்.

    இந்த துணைக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் யு.பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மதுரை முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியம் ஆகியோரும், கேரள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையை இயற்கை பேரிடரின்போது பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் வகுக்க துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
    ×