search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் அமைச்சர்"

    • கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க.
    • குடும்பமே கழகம் என்றால் அது தி.மு.க. தான்.

    சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஒரு குடும்ப ஆதிக்கமிக்க ஒரு கட்சி. பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை தனது குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நிலையிலிருந்து அதை பார்க்கலாம். கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க. தான். ஆனால் குடும்பமே கழகம் என்றால் அது தி.மு.க.தான்.

    எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது அமைச்சராகவே இருந்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பார்கள். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல அந்த தைரியம், துணிச்சல் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் புலம்பி தள்ளியிருக்கிறார்.அதிகாரம் இருந்தும் அவரிடம் துணிச்சல் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருமங்கலம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
    • இந்த அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ உரப்பனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவல கட்டிடம் மிகவும் சேதமடைந்து இருந்தது.

    எனவே புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று புதிதாக ரூ.15 லட்சம் செலவில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான

    ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

    முன்னதாக அவருக்கு கட்சி நிர்வாகி மாலையணிவிக்க வந்தனர். அந்த மாலையை வாங்கி அவர் அந்த பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு அணிவித்தார். இதற்கிடையே திருமங்கலம் தொகுதி கீழவரப்பனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப்ள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளிக்கட்டிடமும் தற்போது இடிக்கப்பட்டு அப்புறப்படு த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் அமைச்சர்

    ஆர்.பி. உதயகுமாரிடம் மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி, சாமிநாதன், பேரவை நகர செயலாளர் பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஓசி பயணம் என்று பேசிய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்?
    • அமைச்சரின் பேச்சால், இலவச பயணம் செய்ய பெண்கள் அவமானப்படுகிறார்கள்.

    சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:- அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்தியுள்ளது. தாலிக்கு தங்கம் போன்ற நல்ல திட்டங்களை திமுக அரசு மூடி விட்டது.

    யானை பசிக்கு சோளப்பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் பெண்கள் ஓசியாக பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவசமாக பயணம் செய்ய அவமானப் படுகிறார்கள்.

    ஓசி பயணம் என்று பேசிய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்? மேயரிடம் அமைச்சர் அதிகார தொனியில் பேசியது சரியானது அல்ல. அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் உள்ளன.

    ஒ.பி.எஸ்.க்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை. அறிக்கைகள், டிவிட்டரில் மட்டும் தான் அவர் செயல்படுகிறார். பருவமழை வரவுள்ளதால், மழை நீர்வடிகால் பணி குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியது வெட்ட வெளிச்சத்திற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சுதந்திர தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.
    • கடந்த 2-ந் தேதி முதல் 15-ந் தேதிவரைதேசிய கொடியை முகப்புப்படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    சிவகாசி

    75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடகங்களில் கடந்த 2-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல், இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் தேசியக் கொடி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்று வருகிறது.

    சுதந்திர தின விழா அ.தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது வீட்டில் இன்று காலை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன். சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாறும் என முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.அவர் ேபசியதாவது:- அ.தி.மு.க. .ஆட்சி காலத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியாரிடம் ரூ.2.73-க்கு ஒரு யூனிட் மின்சாரம் கிடைத்து வரும் நிலையில் ரூ.5.25-க்கு மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் மீது அரசு வரியை சுமத்தி வருகின்றனர். மேலும் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வீடுகளுக்கும், கமர்சியல் இடத்திருக்கும் தமிழக அரசு உயர்த்தி உள்ளதால் வணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து உள்ளனர்.

    இது மட்டும் இன்றி சிமெண்ட், கம்பி, ஜல்லிக்கற்கள் போன்றவற்றின் விலை கடுமையாக விலை உயர்ந்து உள்ளதால் பொதுமக்களின் அடிப்படை வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு ஸ்கூட்டி, மற்றும் அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தற்போது தி.மு.க. ஆட்சியில் கடலில் பேனா வைப்பதற்கு 80 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளன. ஆனால் தமிழகம் முழுவதும் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் 80 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்வது அரசுக்கு நியாயமா?.

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கள்ளக்குறிச்சி சம்பவம் அனைவருக்கும் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு சட்ட ஒழுங்கு பிரச்சினை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லாக்கப்பில் சாவு ஏற்பட்டு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மக்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ் நிலையம் அமைப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் எம். புதூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அந்த இடத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதனை பார்க்க வேண்டும் .மேலும் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆகையால் கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாவட்டம் மாறும் என்பதனை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எச்சரிக்கை விடுகிறோம். இது போன்ற சம்பவங்கள் முழுவதும் தவிர்க்கப்பட வேண்டுமானால் தி.மு.க. ஆட்சியை அகற்றி தூக்கி எறிய வேண்டும். மேலும் தமிழகத்தில் மந்திரிகள், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாமல் குடும்ப ஆட்சியாக திமுக செயல் படுகின்றது மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக திமுக செயல் படுகின்றது. ஆகையால் மக்கள் பிரச்சினை தீர்க்கும் அரசாக அதிமுக இருந்து வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனிவாச ராஜா, மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.கே.எஸ். கார்த்திக்கேயன், மீனவரணி தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆர்.வி. ஆறுமுகம், பகுதிகளை செயலாளர்கள் வெங்கட்ராமன், வக்கீல் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், வினோத் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவை தலைவர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் வட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வசந்த ராஜ், ஏ.ஜி.தஷ்ணா, ஏ.ஜி.எம். வினோத்குமார், ஒன்றிய செயலாளர்கள் கந்தன், தமிழ்ச்செல்வம், நாகபூஷணம், சிவா, நகர செயலாளர்கள் முருகன், காசிநாதன், பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ஜுனன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், வர்த்தக பிரிவு வரதராஜன், இலக்கிய அணி ஏழுமலை, இணைச் செயலாளர் முத்து, சிறுபான்மை பிரிவு தாஜுதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜய ராயலு, வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் நன்றி கூறினார். முன்னதாக அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரண்டு வந்ததால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டிருந்தது.

    • இலவச முககவசம் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் வலியுறுத்தினார்.
    • மன உளைச்சலில் இருக்கின்ற மக்களுக்கு அபராதம் விதித்து மேலும் மன உளைச்சலை அதிகரிக்க கூடாது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தற்போது கொரோனா பரவி வருகிறது.‌ தமிழக அரசின் சார்பில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அபராதம் விதிக்கிறோம் என்று சொல்வதைக் காட்டிலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கின்ற மக்களுக்கு அபராதம் விதித்து மேலும் மன உளைச்சலை அதிகரிக்க கூடாது.

    போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த அபராதம் மக்களுக்கு கவலை அளிப்பதாக இருப்பதை தவிர விழிப்புணர்வு அளிப்பதாக இல்லை. அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.எனவே அபராதம் வசூலிப்பதை கைவிட்டு அரசு இலவசமாக முக கவசத்தை வழங்க முன்வர வேண்டும்.

    தமிழக அரசு பொதுமக்கள் கூடும் இடங்களான சந்தை, பேருந்து நிலையம், ெரயில் நிலையம், கோவில்கள் ஆகியவற்றில் இலவசமாக மக்களுக்கு முக கவசத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×