search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vao office"

    • வி.ஏ.ஓ அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்து முக்கிய கோப்புகள் மற்றும் பயனாளிகளுக்கு வழங்க இருந்த வேட்டி, சேலை ஆகியவை எரிந்து நாசமானது.
    • 10 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுவன் விளையாட்டுதனமாக தீக்குச்சியை உரசி அலுவலகத்தில் போட்டு சென்றதாக தெரிவித்தார்.

    குள்ளனம்பட்டி:

    நத்தம் அருகே கோட்டையூரில் உள்ள வி.ஏ.ஓ அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்து முக்கிய கோப்புகள் மற்றும் பயனாளிகளுக்கு வழங்க இருந்த வேட்டி, சேலை ஆகியவை எரிந்து நாசமானது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து வி.ஏ.ஓ முருகவேல் நத்தம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதேபகுதிைய சேர்ந்த சிறுவன் வி.ஏ.ஓ அலுவலகத்தில் தீப்பற்றியபோது அங்கிருந்து ஓடியது தெரியவந்தது.

    அந்த 10 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுவன் விளையாட்டுதனமாக தீக்குச்சியை உரசி அலுவலகத்தில் போட்டு சென்றதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து சிறுவனை இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

    • திருமங்கலம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
    • இந்த அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ உரப்பனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவல கட்டிடம் மிகவும் சேதமடைந்து இருந்தது.

    எனவே புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று புதிதாக ரூ.15 லட்சம் செலவில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான

    ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்தார்.

    முன்னதாக அவருக்கு கட்சி நிர்வாகி மாலையணிவிக்க வந்தனர். அந்த மாலையை வாங்கி அவர் அந்த பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு அணிவித்தார். இதற்கிடையே திருமங்கலம் தொகுதி கீழவரப்பனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப்ள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளிக்கட்டிடமும் தற்போது இடிக்கப்பட்டு அப்புறப்படு த்தப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் அமைச்சர்

    ஆர்.பி. உதயகுமாரிடம் மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், மீனவரணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி, சாமிநாதன், பேரவை நகர செயலாளர் பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அருகே நேற்று இரவு வி.ஏ.ஓ. அலுவலகம் மற்றும் அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்  அருகே வீரப்பட்டியில் உள்ள அரசு கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அங்கன் வாடி மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு பணி முடிந்ததும்  ஊழியர்கள் அலுவலகம், பள்ளி, அங்கன்வாடி மையத்தை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை  ஊழியர்கள் சென்று பார்த்த போது, வி.ஏ.ஓ. அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள்  உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திலும் பொருட்கள் சிதறி கிடந்தது.ரூ.3 லட்சம் மதிப்புள்ள தளவாட பொருட்களும் கொள்ளை போயிருந்தது. 

    நேற்றிரவு மர்மநபர்கள் வி.ஏ.ஓ. அலுவலகம், பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை  தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×