search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் கைது"

    • மறைத்து வைத்திருந்த கத்தியால் பூஞ்சோலையின் மார்பில் குத்திவிட்டு விஸ்வநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி அருகே பெரியகுரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூஞ்சோலை (வயது 60), விவசாயி. இவருடைய உறவினர் விஸ்வநாதன் (63). இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டை ஒட்டி உள்ள நிலத்திற்கு செல்லும் வழித்தட பாதை தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது.

    இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று மாலையில் பூஞ்சோலை அந்த குறிப்பிட்ட வழித்தட பாதையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த விஸ்வநாதன் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

    இதனிடையே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூஞ்சோலையின் மார்பில் குத்திவிட்டு விஸ்வநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பூஞ்சோலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மதிகோன் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார், பூஞ்சோலையின் உடலை கைப்பற்றி அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய விஸ்வநாதனை போலீசார் நேற்று இரவு கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • 30 மது பாட்டில்கள் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

    சென்னிமலை

    சென்னிமலை டவுன் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ரோந்து சென்று கண்காணித்து வந்தார்.

    அப்போது சந்தைப்பேட்டையில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 30 மது பாட்டில்கள் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் சென்னிமலை டவுன் பகுதி சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்த நாகராஜ் (58) என்பதும் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக அந்த பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
    • கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (49) என்பவர் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து பயன்படுத்தி வரு வதாக கடம்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கடம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி தலை மையிலான போலீசார் கடம்பூர் அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதிக்கு சென்று பெரியசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.

    இதில் சட்ட விரோதமாக வீட்டில் ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து உடனடி யாக கடம்பூர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டா வுக்கு பயன்படுத்திய மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். அவரை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்த னர்.

    • சோதனையில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட் டம், ஓச்சேரி அடுத்த பொய்கைநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் புகை யிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என அவளுர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையி லான போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது பொய்கை நல்லூர் ரோடு தெருவில் வசிக்கும் சீனிவாசன் (வயது 73) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு காசநோய் தொற்று ஏற்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி வாசுகி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வி (வயது 45). இவர் தினந்தோறும் தான் வளர்க்கும் ஆடுகளுக்கு புல் அறுக்க செல்வது வழக்கம். நேற்று காலையில் புல் அறுக்க சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். வடப்புதுப்பட்டி அழகர் கோவில் செல்லும் சாலையில் உள்ள வாழைத் தோட்டத்தில் செல்வி பிணமாக கிடந்தார். இதுகுறித்து அல்லி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்ததுடன் உடலில் வெட்டுக்காயங்களும் இருந்ததால் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்தனர்.

    போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் சருத்துப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இருளப்பன் (62) என்பவரிடம் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கள்ளக்காதல் பிரச்சினையில் செல்வி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இது குறித்து இருளப்பன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் செல்விக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு காசநோய் தொற்று ஏற்பட்டது. இதனால் என்னுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்தார். நேற்று புல் அறுக்க சென்றபோது அவரிடம் நைசாக பேசி உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தேன். பின்னர் வாழைத்தோப்புக்கு அழைத்துச் சென்றபோது அவர் வர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்து கட்டையால் அடித்து கொலை செய்தேன். வெளியூர் தப்பி செல்ல நினைத்து அவர் அணிந்திருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்ப முயன்றபோது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் இருளப்பனை கைது செய்தனர்.

    • வேலூரை சேர்ந்தவர்
    • சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    மும்பை ரெயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மது போதை யில் பயணம் செய்த முதியவர் ஒருவர் 8 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற் றோர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த னர், அதன்பேரில் அவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதைத்தொடர்ந்து சேலம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வர மூர்த்தி மற்றும் போலீசார், ரெயில் சேலம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அந்த பெட்டியில் இருந்த முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அந்த முதியவர் வேலூர் காந்தி நகர் பகு தியைச் சேர்ந்த பாபு (வயது 64) என தெரிய வந்தது.

    சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் எல் லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், முதியவரை ஜோலார் பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக் டர் இளவரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாபுவை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார்.
    • போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் லெஸ்லி ரிச்சர்ட் (வயது 78). இவரது வீட்டு அருகே 5-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜான் லெஸ்லி ரிச்சர்டிடம், அந்த சிறுமியின் பாட்டி சில பாத்திரங்களை வாங்கி இருந்தார். அந்த பாத்திரங்களை ஜான் லெஸ்லி ரிச்சர்ட் வீட்டில் கொடுத்து விட்டு வரும்படி கூறி சிறுமியை பாட்டி அனுப்பி வைத்தார்.

    வீட்டில் ஜான்லெஸ்லி ரிச்சர்ட் மட்டும் தனியாக இருந்தார். பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    அவரிடம் இருந்து சிறுமி தப்பி வெளியே ஓடி வந்தார். பின்னர் தனது பாட்டியிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.

    இதுதொடர்பாக பாட்டி, பிங்கர் போஸ்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் லெஸ்லி ரிச்சர்ட்டை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • 5 லிட்டர் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை, மார்ச்.10- ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை யில்சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திரியாலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த திரி யாலம் பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 64) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்த னர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
    • அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்து றையூர் கிராமத்தில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் ராம சாமி ஆகியோர் தீவிர சாராயம் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போதுஅந்த வழியாக வந்த திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தவ ராயனை (60) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது இடுப்பில் துணிப்பையில் ஏராளமான புதுவை சாராய பாக்கெட்கள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி, நல்லூர் பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது பு.புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளி சாணார்பதி அருகே ஒரு பகுதியில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (60) என்பதும், அவர் அந்த பகுதியில் முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மறைத்து வைத்து இருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, நாமக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • இதை அடுத்து கதிராநல்லூர் பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கதிராநல்லூர் கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, நாமக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    இதை அடுத்து கதிராநல்லூர் பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கூட்டுறவு சங்கம் அருகே மாரிமுத்து என்பவர் வீட்டில் சோதனை செய்தனர்.

    இதில் 270 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், மாரிமுத்துவையும் கைது செய்தனர். 

    • அகிலாவின் குழந்தைகள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • ராஜப்பன் ஏன் குழந்தையை தூக்கிச் சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மணலி கரை கண்டார்கோணத்தில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் அகிலா (வயது 30).

    இவர் கணவர் கண்ணனுடன் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு அகிலா(6), சஷ்விகா (2) என்ற மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அகிலா குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று காலை அவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அகிலாவின் குழந்தைகள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் குழந்தை சஷ்விகா திடீரென மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    குழந்தையை காணாததால் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக தேடத் தொடங்கினர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தக்கலை போலீசார் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அந்தப் பகுதியில் உள்ள வீடுகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜப்பன் ஆசாரி (70) ஒரு குழந்தையை தூக்கிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், அவரது வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது குழந்தை சஷ்விகா அங்கு இருப்பது தெரிய வந்தது.

    குழந்தை மாயமான 4 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு மீட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜப்பன் ஏன் குழந்தையை தூக்கிச் சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

    போலீசார், அவரை கைது செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக வசித்து வரும் ராஜப்பன் நகைக்காக குழந்தையை தூக்கிச் சென்றிருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×