search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை"

    • முட்டை விலை கடந்த சில நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது.
    • நாமக்கல்லிலும் முட்டை விலை 450 காசுகளாகவே தொடர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது. உற்பத்தி செலவு அதிகமாவதால் முட்டை வியாபாரிகள் நஷ்டம் அடைவதாக கூறி வருகிறார்கள். இதற்கு இடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை ஸ்ரீராம நவமி முடிவடைவதால், ஹைதராபாத், விஜயவாடா, ஹோஸ்டபேட், பர்வாலா உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால் அனைத்து மண்டலங்களும் இனி விலை குறைப்பதில்லை என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததன் தொடர்ச்சியாக நாமக்கல்லிலும் முட்டை விலை 450 காசுகளாகவே தொடர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

    வரும் நாட்களில் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பண்ணையாளர்கள் அறிவிக்கப்படும் மைனசுக்கு மேல் கொடுக்க வேண்டியது இல்லை.

    பண்ணைகளில் முட்டை இருப்பு பெரிய அளவில் இல்லாத காரணத்தினாலும், கடும் வெயில் காரணமாக உற்பத்தி சற்று குறைந்துள்ளதாலும் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்பட்ட மைனசுக்கு மேல் முட்டை விற்க வேண்டிய அவசியம் இல்லை.எனவே பண்ணையாளர்கள் சந்தை நிலவரத்தை அனுசரித்து அதிக மைனசிற்கு விற்காமல் நல்ல விலைக்கு முட்டையை விற்று பயனுடைய கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    • முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    பின்னர் முட்டை விலை உயரந்து ரூ.4.60 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மண்டல என்.இ.சி.சி கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.60 ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-480, பர்வாலா-407, பெங்களூரு-475, டெல்லி-419, ஹைதராபாத்-425, மும்பை-485, மைசூர்-480, விஜயவாடா-438, ஹொஸ்பேட்-435, கொல்கத்தா-507.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.95 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.60 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது.
    • நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 35 என்ற அளவிற்கு மிகாமல் முட்டைகளை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 5 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடிக்கிறது. இதனால் முட்டை கோழி பண்ணையாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என தேசிய ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 35 என்ற அளவிற்கு மிகாமல் முட்டைகளை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. எவரேனும் 35 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள், அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது.
    • கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடிக்கிறது.

    இந்த நிலையில் ஹைதராபாத்தில் முட்டை விலை உயர்ந்து வருகிறது. நாளையும் விலை உயர இருப்பதாக தெரிகிறது. பர்வாலா மார்கெட்டிலும் முட்டை விற்பனை நன்றாக உள்ளதால் அங்கும் விலை ஏற உள்ளதாக தெரிகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த 15 நாட்களாக மைனஸ் நிலையாக இருப்பதற்கு பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பே காரணம். இதைப் போலவே வரும் காலங்களிலும் நிலையான மைனஸ் விலை அல்லது அறிவிக்கப்படும் முட்டை விற்பனை விலை தொடர பண்ணையாளர்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    மற்ற மண்டலங்களின் சந்தை நிலவரத்தை அனு சரித்து நாமக்கல்லிலும் வரும் நாட்களில் விலை ஏறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எனவே முட்டை விலை ஏறும் வாய்ப்புள்ளதால் பண்ணையாளர்கள் 30 பைசா மைனசுக்கு மேல் கொடுக்க வேண்டாம். வியாபாரிகளும் 30 பைசா மைனசுக்கு மேல் கேட்க வேண்டாம்.

    இன்று ஒரு சில இடங்களில் 35-40 பைசா கேட்பதாக தகவல்கள் வருகின்றன. மற்ற மண்டலங்களின் சந்தை நிலவரம் தெரியாமல் சில வியாபாரிகள் பண்ணையாளர்களுக்கு நெருக்கடிகள் கொடுப்பதாக அறிகிறோம். அவ்வாறு யாராவது அதிக மைனஸ் கேட்டால் அந்தந்த வட்டார குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும்.

    சில வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் அதிக மைனசிற்கு கேட்பதை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் விதமாக,நாளை முதல் மீண்டும் தேசியமுட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளோடு இணைந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம், நாமக்கல் எக்புரோடியூசர்ஸ் அசோசியேசன், ராசிபுரம்முட்டை கோழி பண்ணையாளர்கள் சொசைட்டி மற்றும் பண்ணையாளர்கள் இணைந்து முட்டை எடுத்துச் சொல்லும் வியாபாரிகளின் வண்டிகளை ஆய்வு செய்ய உள்ளார்கள்.

    நாமக்கல்லில் முட்டை இருப்பே இல்லாத சூழ்நிலையிலும் அதிக மைனஸ் கேட்கும் வியாபாரிகளை கட்டுப்படுத்தும் நோக்கில்மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கிலும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு எடுக்கும் முடிவுகளுக்கு கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

    • அரசு பள்ளிகளில் கெட்டுப்போன முட்டைகள் வினியோகம் செய்யப்பட்டது.
    • மாற்று முட்டை வினியோகிக்க நடவடிக்கை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சில பள்ளிகளுக்கு சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக கடந்த சில நாட்களாக அனுப்பப்பட்ட முட்டைகள் கெட்டு போயிருந்ததாக சம்பந்தப்பட்ட அலுவலருக்கு புகார்கள் வந்தது. அதில் ஒரு சில பள்ளிகளில் அதற்கு பதிலாக வேறு முட்டைகள் வாங்கி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர் கூறுகையில், நேற்று முன்தினமும், நேற்றும் கெட்டு போன முட்டைகள் அனுப்பப்பட்டதாக புகார் வந்தது. அனைத்து முட்டைகளும் கெட்டு போகவில்லை, சில முட்டைகள் தான் கெட்டுப்போய் உள்ளது. மாற்று முட்டை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்றார்.

    • முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கலில் நடந்தது.
    • முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 72 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த கறிக்கோழி பண்ணைகள் மூலம் தினமும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கறிக்கோழிக்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    நேற்று பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 7 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 77 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 84 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    இதற்கிடையே முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கலில் நடந்தது. இதில் முட்டைக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 72 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 440 காசுகளாக நீடிக்கிறது.

    • அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது
    • 3 வகையான நோயில்லா சான்றிதழை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே, முட்டைகள் இறக்குமதி செய்ய முடியும் என மலேசியா அரசு அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. தற்சமயம் முட்டை ஏற்றுமதி தொழிலில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் 2-வது இடத்திலும், முட்டை ஏற்றுமதியில் முதலிடத்திலும் உள்ள, நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1000-க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன.

    பண்ணைகளில் உற்பத்தி ஆகும் முட்டைகளின் ஒரு பகுதி, மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், சைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிவருகின்றன. இந்த நாடுகளுக்கு தற்போது மாதந்தோறும் சுமார் 150 கண்டெய்னர் முட்டைகள் ஏற்றுமதி ஆகி வருகிறது.

    தற்போது முதன்முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல் பகுதியில் இருந்து விமானம் மூலம் முட்டைகள் மலேசியா நாட்டிற்கு ஏற்றுமதி ஆக தொடங்கியது. மலேசியா நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும் அங்கு தேவை மற்றும் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் பகுதிகளில் இருந்து அதிகளவில் முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது.

    முதன் முறையாக மலேசியா, இந்தியாவில் இருந்து அதிக அளவு முட்டைகளை இறக்குமதி செய்கிறது. மேலும், 2023 பாதியில் மலேசியாவுக்கான இந்தியாவின் முட்டை ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. வரும் மாதங்களில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல்லில் இருந்து முட்டைகளை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இது குறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் கூறியதாவது:-

    நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 10 கண்டெய்னர் மூலம் 50 லட்சம் முட்டைகள் முதன் முதலாக மலேசியாவிற்கு ஏற்றுமதி ஆகி உள்ளது. தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வருகிறது.

    நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முட்டை தரமாகவும் எடையும் சரியாக உள்ளதால் அதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் முட்டை விலை குறைவாகவே உள்ளது. இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய மலேசியா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோழிகளைத் தாக்கும் பவுல் காலரா, சால்மனலா பேக்டீரியா ஆகிய நோய் உள்ளிட்ட 3 வகையான நோயில்லா சான்றிதழை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே, முட்டைகள் இறக்குமதி செய்ய முடியும் என மலேசியா அரசு அறிவித்துள்ளது.

    தற்போது மத்திய அரசு இந்த சான்றிதழ் வழங்க கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் கடந்த 40 நாட்களாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை விரைவில் வழங்குவதற்கு மத்திய கால்நடைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கினால், நாமக்கல் பகுதியில் இருந்து மலேசியாவிற்கு மாதந்தோறும் சுமார் 50 கண்டெய்னர்கள் முட்டைகள் ஏற்றுமதி ஆக வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மண்டலத்தில் பல கோடி முட்டைகள் தேங்கி உள்ளது.
    • முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 440 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்த நிலையில் முட்டை விலை குறைந்ததால், கோழிப் பண்ணையாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள். மேலும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே நாமக்கல் மண்டலத்தில் பல கோடி முட்டைகள் தேங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது.

    இதில் முட்டை கோழிகள் உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலையை கிலோவுக்கு ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.74 ஆக இருந்த முட்டை கோழி விலை ரூ.67 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் ரூ.80 ஆக இருந்த கறிக்கோழி விலையை, மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.83 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 440 காசுகளாக நீடிக்கிறது. முட்டையின் தேவை குறைந்ததால் விலை உயர தற்போது வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    • கடந்த மாதம் 9-ந்தேதி 560 காசுகள் என்ற புதிய உச்சத்தை முட்டை விலை தொட்டது.
    • பின்னால் முட்டை கொள்முதல் விலை படிப்படியாக சரிவடைய தொடங்கியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இதில் 5 கோடிக்கு மேல் முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    முட்டை கொள்முதல் விலையானது தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களில் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கே பண்ணையாளர்கள், வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.

    கடந்த மாதம் 9-ந் தேதி 560 காசுகள் என்ற புதிய உச்சத்தை முட்டை விலை தொட்டது. பின்னால் முட்டை கொள்முதல் விலை படிப்படியாக சரிவடைய தொடங்கியது. நேற்று முட்டை விலை நாமக்கல் மண்டலத்தில் 460 காசுகளாக இருந்தது.

    தேசிய ஒருங்கிணைப்பு குழு 460 காசுகளாக முட்டை விலையை நிர்ணயம் செய்தாலும், வியாபாரிகள் 70 காசுகள் வரை குறைத்து வாங்குவதாக குற்றச்சாட்டு இருந்தது. இதனால் பண்ணையாளர்கள் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வந்தனர்.

    இந்த நிலையில் நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து 460 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 20 காசு குறைத்து 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வட மாநிலங்களில் விலை குறைத்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நாமக்கல்லில் நேற்று பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் ஒரு கிலோ முட்டைகோழி 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மேலும் 5 ரூபாய் குறைத்து 74 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையை 1 ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ ரூ.80 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    • கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
    • குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் பகுதியில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் பெடரேசன், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி போன்ற பல்வேறு கோழிப் பண்ணையாளர்கள் சங்கங்கள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் ஒரு முட்டை ரூ.5.65 ஆக விற்பனையானது, படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டை ரூ.4.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்.இ.சி.சி. ரூ. 4.60 விலை நிர்ணயம் செய்துள்ள போதும், முட்டை வியாபாரிகள் ரூ.4-க்கு குறைவாக முட்டையை கொள்முதல் செய்கின்றனர். கோழி முட்டை விலை கடும் சரிவால் கடந்த 2 வாரங்களாக பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழிலில் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

    இதையொட்டி, எந்த சங்கத்தையும் சேராத கோழிப்பண்ணையாளர்களின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் ஏராளமான கோழிப் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தொழிலின் தற்போதைய நிலை குறித்து விவாதித்தனர்.

    கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முட்டை விற்பனை விலையில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையை விடக் குறைந்த விலையிலேயே முட்டைகளை வியாபாரிகள் வாங்குகின்றனர். முட்டை விலையில் மைனஸ் என்பதே இருக்க கூடாது. தீவன மூலப்பொருட்கள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முட்டை விலையை உற்பத்தி செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்.இ.சி.சி. மண்டல வாரியாக விலை நிர்ணயம் செய்யாமல் இந்தியா முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டை விலையை தினசரி நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் முட்டை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை நாமக்கல் பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும். கடும் நெருக்கடி நிலையில் கோழிப் பண்ணை தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் உள்ளதாக பல பண்ணையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது.
    • முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 460 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, பல்லடம், திருப்பூர் உள்பட பல பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை கிலோவுக்கு 8 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 92 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 84 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. தைப்பூசத்தையொட்டி கறிக்கோழியின் நுகர்வு குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 4.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

    முட்டை கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் முட்டை கோழி விலை மாற்றம் செய்யாமல் ஒரு கிலோ 79 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 460 காசுகளாக நீடிக்கிறது.

    • கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.5.65 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிவடைந்தது.
    • தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட பண்ணைகளில் 5.50 கோடி, முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைக்கான விற்பனை விலையை, இந்தியா முழுவதும் உள்ள விலையை அனுசரித்து, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.

    கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.5.65 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக உள்ளது. ஒரு வாரத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.05 சரிவடைந்ததால், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனால் பண்ணையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் மண்டல முட்டை ஒருங்கிணைப்புக்குழு துணைத்தலைவரும், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தலைவருமான சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கோழி முட்டை விலை இந்தியா முழுவதும் சரிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஐதராபாத் மண்டல என்.இ.சி.சி, இனி முட்டை விலை குறைக்கப்படமாட்டாது, குறைந்த விலை ஒரு முட்டைக்கு 415 பைசாதான் என அறிவித்துள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று 3 பைசா உயர்த்தி 418 என ஐதராபாத் என்.இ.சி.சி அறிவித்துள்ளது.

    பர்வாலா மண்டலத்தில் முட்டை மார்க்கெட் நிலவரம் சரியாகி வருகிறது. மேலும் ஹொஸ்பேட் மண்டலத்திலும், முட்டை விலை இதற்கு கீழ் குறையாது என அறிவிப்பு செய்துள்ளது. மண்டலங்களின் சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு, நாமக்கல் விலையும் இதற்கு கீழ் குறையாது.

    எனவே பண்ணையாளர்கள் முட்டைகளை விற்கும் பொழுது, முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு, என்.இ.சி.சி விலையில் இருந்து 30 பைசாவுக்கு கீழ் குறைத்து விற்பனை செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு பண்ணையாளர்கள் யாரும் முட்டைகளை, குறைவான விலைக்கு விற்பனை செய்யாமல், அறிவிக்கப்பட்ட 30 பைசா மட்டுமே குறைத்து விற்பனை செய்ய வேண்டும்.

    வரும் நாட்களில் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது. எனவே பண்ணையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

    ×