search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிர்ணயிக்கப்பட்ட மைனஸ் விலைக்கு மேல் முட்டை விலையை குறைத்து விற்க வேண்டாம்
    X

    நிர்ணயிக்கப்பட்ட மைனஸ் விலைக்கு மேல் முட்டை விலையை குறைத்து விற்க வேண்டாம்

    • முட்டை விலை கடந்த சில நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது.
    • நாமக்கல்லிலும் முட்டை விலை 450 காசுகளாகவே தொடர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது. உற்பத்தி செலவு அதிகமாவதால் முட்டை வியாபாரிகள் நஷ்டம் அடைவதாக கூறி வருகிறார்கள். இதற்கு இடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை ஸ்ரீராம நவமி முடிவடைவதால், ஹைதராபாத், விஜயவாடா, ஹோஸ்டபேட், பர்வாலா உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால் அனைத்து மண்டலங்களும் இனி விலை குறைப்பதில்லை என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததன் தொடர்ச்சியாக நாமக்கல்லிலும் முட்டை விலை 450 காசுகளாகவே தொடர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

    வரும் நாட்களில் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பண்ணையாளர்கள் அறிவிக்கப்படும் மைனசுக்கு மேல் கொடுக்க வேண்டியது இல்லை.

    பண்ணைகளில் முட்டை இருப்பு பெரிய அளவில் இல்லாத காரணத்தினாலும், கடும் வெயில் காரணமாக உற்பத்தி சற்று குறைந்துள்ளதாலும் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்பட்ட மைனசுக்கு மேல் முட்டை விற்க வேண்டிய அவசியம் இல்லை.எனவே பண்ணையாளர்கள் சந்தை நிலவரத்தை அனுசரித்து அதிக மைனசிற்கு விற்காமல் நல்ல விலைக்கு முட்டையை விற்று பயனுடைய கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    Next Story
    ×