என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் சரிவு
  X

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த மாதம் 9-ந்தேதி 560 காசுகள் என்ற புதிய உச்சத்தை முட்டை விலை தொட்டது.
  • பின்னால் முட்டை கொள்முதல் விலை படிப்படியாக சரிவடைய தொடங்கியது.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இதில் 5 கோடிக்கு மேல் முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

  முட்டை கொள்முதல் விலையானது தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களில் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கே பண்ணையாளர்கள், வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.

  கடந்த மாதம் 9-ந் தேதி 560 காசுகள் என்ற புதிய உச்சத்தை முட்டை விலை தொட்டது. பின்னால் முட்டை கொள்முதல் விலை படிப்படியாக சரிவடைய தொடங்கியது. நேற்று முட்டை விலை நாமக்கல் மண்டலத்தில் 460 காசுகளாக இருந்தது.

  தேசிய ஒருங்கிணைப்பு குழு 460 காசுகளாக முட்டை விலையை நிர்ணயம் செய்தாலும், வியாபாரிகள் 70 காசுகள் வரை குறைத்து வாங்குவதாக குற்றச்சாட்டு இருந்தது. இதனால் பண்ணையாளர்கள் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வந்தனர்.

  இந்த நிலையில் நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து 460 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 20 காசு குறைத்து 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வட மாநிலங்களில் விலை குறைத்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

  இதற்கிடையே நாமக்கல்லில் நேற்று பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் ஒரு கிலோ முட்டைகோழி 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மேலும் 5 ரூபாய் குறைத்து 74 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

  பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையை 1 ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ ரூ.80 என நிர்ணயம் செய்யப்பட்டது.

  Next Story
  ×