என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் கெட்டுப்போன முட்டைகள் வினியோகம்
- அரசு பள்ளிகளில் கெட்டுப்போன முட்டைகள் வினியோகம் செய்யப்பட்டது.
- மாற்று முட்டை வினியோகிக்க நடவடிக்கை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சில பள்ளிகளுக்கு சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக கடந்த சில நாட்களாக அனுப்பப்பட்ட முட்டைகள் கெட்டு போயிருந்ததாக சம்பந்தப்பட்ட அலுவலருக்கு புகார்கள் வந்தது. அதில் ஒரு சில பள்ளிகளில் அதற்கு பதிலாக வேறு முட்டைகள் வாங்கி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர் கூறுகையில், நேற்று முன்தினமும், நேற்றும் கெட்டு போன முட்டைகள் அனுப்பப்பட்டதாக புகார் வந்தது. அனைத்து முட்டைகளும் கெட்டு போகவில்லை, சில முட்டைகள் தான் கெட்டுப்போய் உள்ளது. மாற்று முட்டை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்றார்.
Next Story






